Published:Updated:

"நான் ஏன் ஓடி ஒளியணும் ?”

கார்க்கிபவாபடம்: கே.ராஜசேகரன்

"நான் ஏன் ஓடி ஒளியணும் ?”

கார்க்கிபவாபடம்: கே.ராஜசேகரன்

Published:Updated:

'தென்மேற்குப் பருவக்காற்று’, 'பேராண்மை’ படங்களின் மூலம் பிரபலமானவர் வசுந்த்ரா. இவரது அந்தரங்க  செல்ஃபிக்கள் சில வாட்ஸ்அப்பில் லீக் ஆக, அப்போது காணாமல்போனவர் இப்போது எங்கு இருக்கிறார்? 

'' 'மைக்கேல் ஆகிய நான்’, 'புத்தன் இயேசு காந்தி’ ரெண்டு படங்கள்லயும் ஹீரோயினா நடிச்சுட்டிருக்கேன். இந்தியில் 'மேரி கோம்’, 'கஹானி’ படங்கள் பார்த்த பிறகு, தமிழ்லயும் அப்படி ஒரு கேரக்டர் பண்ணணும்னு எனக்கு ஆசை. 'புத்தன் இயேசு காந்தி’ படத்தில் அப்படி ஒரு கேரக்டர். பத்திரிகையாளரா நடிக்கிறேன். தூக்கம், சாப்பாடுனு எந்தச் சிந்தனையுமே இல்லாம வேலை, வேலை, வேலைனு இருக்கிற பொண்ணு, நிறைய ஊழல் வழக்குகள் பத்தி எழுதுறா. ஒரு அசைன்மென்ட்ல தூக்குத் தண்டனைக் கைதியைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்குது. அவர் நிரபராதி. அதனால அவரைக் காப்பாத்தத் துடிக்கிறா. அது நடந்துதாங்கிறதுதான் கதை. டைரக்டர் வெற்றிவேல் சந்திரசேகரன் சார் அப்படியொரு டெடிகேஷன். விஜய் ஆம்ஸ்ட்ராங் சார் கேமரா. ரெண்டு பேருக்குமே பத்திரிகைத் துறை அனுபவம் இருக்கு. அதனால சின்னச்சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்துச் செய்றாங்க.''

"நான் ஏன் ஓடி ஒளியணும் ?”

''உங்க போட்டோஸ் எல்லாம் இன்டர்நெட், வாட்ஸ்அப்னு பரவி, பயங்கரப்  பரபரப்பு ஆச்சே..?''

''எனக்கு மட்டும் இல்லை, உலகத்துல எத்தனையோ பேருக்கு இப்படி நடந்திருக்கு. நம்ம நாட்டுல மட்டும் ஏன் இதை இப்படி வெறி பிடிச்சு ஷேர் பண்றாங்கனு தெரியலை. ஒரு வாரத்துல அவங்களுக்கு வேற விஷயம் கிடைச்சிருச்சு. அங்கே போயிட்டாங்க. ஆனா, அந்த அஞ்சு மாசமும் நான் செல்போனை ஆஃப் பண்ணிட்டு வீட்டைவிட்டு வெளியவே வரலை. நான் செஞ்ச தப்பு என்ன? என்னால இந்தச் சமூகத்துக்கு என்ன பிரச்னை? இங்கே 50 சதவிகிதம் ஆண்களும் 50 சதவிகிதம் பெண்களும் இருக்காங்க. எல்லா ஆண்களுக்கும் அம்மா, அக்கா, மகள்னு ஏதோ ஒரு பெண் உறவு நிச்சயமா இருப்பாங்க. என் போட்டோவை ஷேர் பண்றவங்க, அதை நினைச்சுப்பார்க்கணும். பெண்களை, ஆண்கள்தான் பத்திரமாப் பாத்துக்கணும். இவங்களே இப்படிப் பண்ணா எப்படி? ஒரு சமூகமே பெண்களைக் காயப்படுத்தினா அது சரியா? நாம கும்பிடுற சாமியிலயே சரஸ்வதி, லட்சுமினு எத்தனையோ பெண் தெய்வங்கள் இருக்கு. ஆனா, பெண்களை நாம மதிக்கிறதே இல்லை.''

''அந்தச் சமயத்துல, உங்களுக்கு  திரைப்படத் துறையின் ஆதரவு கிடைச்சதா?''

''நான் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். ஆனா, என் மேல அக்கறையா நிறையப் பேர் விசாரிச்சு, 'என்ன ஹெல்ப் வேணும்?’னு கேட்டாங்களாம். அதே மாதிரி பிரின்ட் மீடியாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். ஆன்லைன் மீடியா மொத்தமும் பொறுப்பே இல்லாம சென்சேஷனுக்காக எழுதினாங்க. நான் இந்தி பொண்ணு இல்லைங்க... இங்க பிரச்னைன்னா, எல்லாத்தையும் விட்டுட்டு அங்கே போறதுக்கு. நம்ம ஊர் பொண்ணு. இங்கேதான் இருப்பேன்.'' 

"நான் ஏன் ஓடி ஒளியணும் ?”

''சினிமாவில் எதிர்காலம்?''

''நான் எந்தத் தப்பும் பண்ணலை. நான் ஏன் ஓடி ஒளியணும்? தொடர்ந்து நடிப்பேன். இதுக்கு முன்னாடி எந்த மாதிரியான படங்கள் பண்ணேனோ, அதையே தொடர்ந்து செய்வேன். இப்ப ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். சீக்கிரமே ஒரு ஸ்க்ரிப்ட்டும் எழுதுவேன்.''

''உங்களை டார்கெட் பண்ணி யாராவது செஞ்சிருப்பாங்கனு நினைக்கிறீங்களா?''

''இதுக்குப் பின்னாடி யார் இருந்தாங்க, எப்படி ரிலீஸ் ஆச்சுங்கிறதைப் பத்தி எல்லாம் நான் எதுவும் பேச விரும்பலை.''

''என்ன மாதிரியான புத்தகம்?''

''இங்கிலீஷ்லதான் எழுதுறேன். த்ரில்லர் கதை. இந்தப் பிரச்னை எல்லாம் நடக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சது. இதையே ஸ்க்ரிப்ட்டா மாத்துற ஐடியா இருக்கு. இயக்குநர் ஜனநாதன் சார்தான் இதுக்குக் காரணம். அவர்தான் என்னை எழுதச் சொன்னார். நமக்குள்ள இருக்கிற திறமையைக் கண்டுபிடிச்சு வெளியில் கொண்டுவர்றதுல அவர் எக்ஸ்பெர்ட்.''

''எப்போ கல்யாணம்?''

''எந்தப் பிரச்னையும் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம் என் கல்யாணம் முடிஞ்சிருக்கும். இப்போ கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம்னு இருக்கேன்.''

''காதலர்கள் நிறையப் பேர் நெருக்கமா எடுத்துக்கிற போட்டோவை, விளையாட்டா ஷேர் பண்ணி பிரச்னையில மாட்டிக்கிறாங்க. அவங்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா?''

''நிச்சயமா! பெண்கள், தயவுசெய்து யாரையும் நம்பாதீங்க. அதே சமயம், பிரச்னைனு வந்துட்டா, தைரியமா இருங்க. ஆண்கள்... உங்கள்ல ஒருசில பேர் செய்ற தப்பால எல்லா ஆண்களுக்கும் கெட்ட பேர். தயவுசெய்து புரிஞ்சுக்கங்க... பெண்களை மதிக்கக் கத்துக்கங்க.''

''சோஷியல் மீடியாவுல இருக்கீங்களா... உங்க பேர்ல சில ஐ.டிக்கள் இருக்கே?''

''இல்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ். எதுலயும் நான் இல்லை.''