Published:Updated:

"கேமராவுக்கு முன்னாடிதான் ரொமான்ஸ்லாம் !”

நா.சிபிச்சக்கரவர்த்தி

"கேமராவுக்கு முன்னாடிதான் ரொமான்ஸ்லாம் !”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:

'ஹீரோ’வாக நடித்த முதல் படத்திலேயே 'சாக்லேட் பாய்’ அந்தஸ்து கிடைத்த அரவிந்த் சாமி, மாதவன், ஷாம்... போன்ற வசீகரன்கள் முதல் வகையினர். ஒவ்வொரு படமாக ஈர்த்து ஒவ்வொரு கதாபாத்திரமாக மயக்கி 'லவ்வர் பாய்’ பட்டம் வாங்கும் மோகன், ஆர்யா போன்றோர் இரண்டாவது வகையினர். இதில் கேரளாவின் நிவின் பாலே... இரண்டாவது ரூட்டைப் பிடித்து 'கடவுள் தேசத்தின்’ காதல் தூதுவராகியிருக்கிறார்! 

'நேரம்’ படம் மூலம் தமிழிலும் ஹிட் அடித்தவர்தான் நிவின். இவர் நடித்த 'பிரேமம்’ படம் மல்லுவுட்டில் பாராட்டு வசூல் மழை பொழிகிறது. 'ஆட்டோகிராஃப் அட்டகத்தி’யைக் கலந்துகட்டிய கதையில் நிவின் மூன்று பெண்களை உருகி உருகிக் காதலிக்க... மாநில எல்லை தாண்டியும் ட்ரெண்டிங் அடிக்கிறார்!

''எந்தா சேட்டா... சுகந்தன்னே?'' என போன் போட்டால், ''சூப்பர் சுகம்! 'பிரேமம்’ படத்துக்கு கேரளாவுக்கு ஈக்குவலா தமிழ்நாட்டுல இருந்தும் வாழ்த்துக்கள் குவியுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சீக்கிரமே ரெண்டு தமிழ்ப் படங்கள்ல நடிக்கப்போறேன். தமிழ்நாடு... ஐ’யம் கம்மிங் சூன்... கம்மிங் சூன்...'' எனச் சிரிக்கிறார் நிவின்.

"கேமராவுக்கு முன்னாடிதான் ரொமான்ஸ்லாம் !”

''சினிமா பின்னணி இல்லாமல் வந்து, பெரிய லீக்ல சேர்ந்துட்டீங்க. வாழ்த்துகள்! எங்கே ஆரம்பிச்சது உங்க சினிமா பயணம்?''

'' 'நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் நானும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் தோஸ்த். அவருக்கு அப்போது இருந்தே சினிமா மேக்கர் ஆகணும்னுதான் ஆசை. நான் பெங்களூருல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். கம்பெனியில் ஒரு வருஷம் சும்மாவே இருந்தேன். ஆனாலும் என்னை வேலையைவிட்டுத் தூக்கலை. எனக்கே போர் அடிச்சது. அப்போதான் அல்போன்ஸ் நிறையக் குறும்படங்கள் இயக்கிட்டிருந்தார். அவரை நம்பி வேலையை விட்டுட்டு குறும்படங்கள்ல நடிக்கக் கிளம்பிட்டேன். அல்போன்ஸோடு இருந்தப்பதான் நடிகர் கம் இயக்குநர் ஸ்ரீனிவாஸனின் மகன் வினீத் படம் எடுக்கப்போறார்னு தகவல். நான் என் போட்டோவை சும்மா அனுப்பிவெச்சேன். மறந்துட்டேன். பார்த்தா, என்னைத்தான் ஹீரோவா டிக் அடிச்சிருந்தாங்க. 'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்துல நடிச்சேன். அப்புறம் அடுத்தடுத்து நல்ல நல்ல சப்ஜெக்ட் தேடித் தேடி நடிச்சேன். அஞ்சு வருஷத்துல

25 படங்கள். சினிமாவுக்கு நன்றி. நண்பன் அல்போன்ஸுக்கு நன்றியோ நன்றி!''

"கேமராவுக்கு முன்னாடிதான் ரொமான்ஸ்லாம் !”

''காதலுக்காக உருகுறீங்க, ஸ்கூல் போற பையனுக்கு அப்பாவா நடிக்கிறீங்க, 'ட்ரிபிள் ஹீரோ’ படத்துல அம்மாஞ்சியா வர்றீங்க... 'இப்படித்தான் நடிப்பார் நிவின்’னு ஒரு இமேஜுக்குள் சிக்கிக்காம இருக்கீங்களே?''

''என் டைரக்டர்ஸ் சொல்வாங்க... நான் அதை அப்படியே செய்வேன். அவ்ளோதான். சொல்லப்போனா, எனக்கு நடிக்கவே தெரியாது. ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குநர்கள் என்ன ஃபீல் பண்றாங்களோ, அவங்க யாரை இன்ஸ்பிரேஷனா நினைக்கிறாங்களோ, அதெல்லாம் உதாரணமா வெச்சு நடிச்சு சமாளிச்சிருவேன்.

அல்போன்ஸ் இயக்கின 'பிரேமம்’ படத்துல ஒரு ஸ்டன்ட் சீன். எனக்கும் அல்போன்ஸுக்கும் ரஜினி அவ்வளவு பிடிக்கும். அந்தச் சண்டைக் காட்சியில் நடிக்கிறதுக்கு முன்னாடி கேரவேன்ல 'தளபதி’ படத்தின் சண்டைக் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம். அதே கரன்ட்ல வந்து நான் சண்டை போட, அவர் இயக்க... இப்படித்தாங்க ஜாலியா நடிச்சுட்டிருக்கேன்!''

'மலையாள சீனியர்ஸ் என்ன சொல்றாங்க?'

''நம்புறதா என்னனு தெரியலை... என்னைப் பாராட்டுறாங்க. 'பெங்களூரு டேஸ்’ பார்த்துட்டு மம்மூட்டி கூப்பிட்டு அனுப்பினார். 'பிரமாதமா நடிச்சிருக்க. ஒவ்வொரு படத்திலும் நடிப்புல அடுத்தடுத்த லெவல் போயிட்டே இருக்க. வெரிகுட்’னு சொன்னார். மோகன்லாலும் இப்படிப் பயங்கரமா பாராட்டினார். சரியான பாதையிலதான் போயிட்டிருக்கோம்னு மட்டும் நினைச்சுக்கிட்டேன். மத்தபடி என் செட் பசங்க ஃபஹத் பாசில், துல்கர் எல்லாருமே செம ஜாலி ஃப்ரெண்ட்ஸ்!''

'வழக்கமான கேள்விதான். இதுக்கு உங்க பதில் என்ன? தமிழ் சினிமா, மலையாள சினிமா... ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?''

''தமிழ் சினிமா ரொம்பப் பெரிய... பெரிய இண்டஸ்ட்ரி. தமிழ்நாட்டு மக்களுக்கு, சினிமா ஆர்வம் ரத்தத்துலயே கலந்திருக்கு. அந்த அளவுக்கு சினிமாவைக் கொண்டாடுறாங்க. ஆனா, கேரளாவில் அப்படி இல்லை. தமிழ் சினிமாவில் நடிக்கிறப்போ கிடைக்கிற எனர்ஜியை வெச்சு 10 படங்கள் பண்ணிடலாம். அதான் எனக்குத் தெரிஞ்ச வித்தியாசம்!''

'தமிழ்ல எந்த இயக்குநர்கூட படம் பண்ண ஆசை?''

''ஒன் அண்ட் ஒன்லி சாய்ஸ்... கௌதம் வாசுதேவ் மேனன். ப்பா... 'விண்ணைத் தாண்டி வருவாயா’ என்னா படம்! ஆரம்பத்துல இருந்து எண்டு கார்டு வரை படம் முழுக்க லவ்... லவ்... அவ்வளவு லவ்! காதலிச்சுட்டே இருக்கிறப்ப சரியான டைமிங்ல பாட்டு வரும். போறபோக்குல காமெடி வரும். படம் முடிஞ்சு வெளியே வர்றப்போ யாரா இருந்தாலும் காதல் வரும். யாரையாவது அந்த அளவுக்கு உயிரைக் கொடுத்துக் காதலிக்கத் தோணும். கௌதம் சாரோட படங்களில் காதல் போர்ஷன்கள் என்னை அப்படியே போட்டுத் தாக்கும். அவர்கூட வேலை பார்க்க ஆசை!''

''அடுத்து அதான் மேட்டர்... உங்க நிஜக் காதல் கதை சொல்லுங்க?''

''காதல் கல்யாணம்தான். ஆனா, சினிமா மாதிரி பாட்டு, டூயட், ஃபைட் எல்லாம் இருக்காது. அவ்ளோ ஏன்... ஒரு 'ஐ லவ் யூ’கூட இல்லாத காதல் கதை. நானும் ரின்னாவும் ஒரே காலேஜ். பார்த்ததும் பிடிச்சது. பார்க்கப் பார்க்க இன்னும் பிடிச்சது. என் ஆசையைச் சொன்னேன். அவங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. ஓ.கே சொன்னாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மூணு வயசுல ஒரு பையன் இருக்கார். பேரு தாவித். செம குறும்பு!''

'கல்யாணத்துக்குப் பிறகு 'லவ்வர் பாய்’னு உங்களைக் கொண்டாடுறாங்க. ரின்னா என்ன சொல்றாங்க?''

''ஹா... ஹா... கரெக்ட்டா கேட்டீங்க! சமயங்கள்ல சமாளிக்கத்தான் முடியலை. நானும் ரின்னாவும் ஒரு தடவை தியேட்டருக்குப் போனோம். அங்க வாசல்ல நின்னுட்டிருந்த ஒரு பொண்ணு திடீர்னு என்கிட்ட வந்து,

"கேமராவுக்கு முன்னாடிதான் ரொமான்ஸ்லாம் !”

'ஐ லவ் யூ ஸோ மச்’னு சொல்லி, ஒரு லெட்டர்ல அவங்க மொபைல் நம்பரை எழுதிக் கொடுத்துட்டு, 'ப்ளீஸ்... என்னை லவ் பண்ணுங்க’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. எனக்கு உள்ளுக்குள்ள சந்தோஷம். ஆனா, ரின்னாவுக்கு செம ஷாக். நான் என் சந்தோஷத்தையும் காட்டிக்க முடியலை; அதிர்ச்சியா இருக்கிற மாதிரி நடிக்கவும் முடியலை. ஒருமாதிரி பாவமா முகத்தை வெச்சுட்டு அவங்களைப் பார்த்தேன். முறைச்சுட்டே இருந்தவங்க குபுக்னு சிரிச்சுட்டாங்க. அவங்களுக்குத் தெரியும்ல... 'கேமரா முன்னாடிதான் இந்தப் பையனோட ரொமான்ஸ்லாம்’னு. ஃப்ரீயா விட்டுட்டாங்க!''