அந்த நொடி ஆத்திரத்தில் நாம் பேசிவிடும் வார்த்தைகள், எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் எனச் சொல்லும் கமர்ஷியல் கட்லெட் 'யாகாவாராயினும் நா காக்க’!

பணக்கார நண்பர்களுடன் மிடில் க்ளாஸ் ஆதி சுற்றுவது, அப்பா நரேனுக்குப் பிடிக்கவில்லை. அக்காவின் திருமண வேலைகளுக்கு இடையே, நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடச் செல்கிறார் ஆதி. அங்கு நடக்கும் கலாட்டாவில், மிகப் பெரிய மும்பை டானின் மகளோடு மோதல் உண்டாகிறது. பணக்கார நண்பர்களை அவரவர் அப்பாக்கள் தலைமறைவாக்க, மும்பை டானிடம் சிக்கிக்கொள்கிறார் ஆதி. அவர்களிடம் இருந்து தப்பித்தாரா, நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதே மீதிக் கதை.

நட்பு, காதல், காமெடி, ஆக்ஷன்... என, பக்கா கமர்ஷியல் நாயகனாக ஆதிக்கு டபுள் புரமோஷன். அந்நியமாகத் தெரியும் முகம் மட்டும் பழகிவிட்டால், விஷாலுக்கு போட்டியாக இறங்கும் வாய்ப்பு பளிச். நான்கு புறங்களில் இருந்தும் கத்திகள் பறக்க, நடுவில் மயில் இறகாக நிக்கி கல்ராணி. அதிரடி என்ட்ரியில் மனதில் நிற்கிறார். மும்பை டான் மிதுன் சக்கரவர்த்தி, சென்னை டான் பசுபதி... என ஏகப்பட்ட வில்லன்கள்.

முதல் காட்சியில், 'ஏதோ நடந்திருக்கிறது’ எனக் காட்டிவிட்டு, ஃப்ளாஷ்பேக் செல்கிறார்கள். பிறகு, இடைவேளையின்போதுதான் விஷயத்துக்கே வருகிறார்கள். அதுவரை இலக்கு இல்லாமல் அலைபாய்கிறது கதை. ஆதி - நிக்கி கல்ராணி காதலில் இயல்பையும் ஈர்ப்பையும் தேடவேண்டியுள்ளது. கடைசி அரை மணி நேரத்தில் அதிரடியாக மொத்த முடிச்சுகளையும் அவிழ்த்து, கதையைச் சரசரவெனப் பறக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் சத்ய பிரபாஸ்.

சின்னச்சின்ன விஷயங்களுக்கும் சுவாரஸ்ய முடிச்சுப்போடுவது ஓ.கே. ஆனால், சில இடங்களில் ட்விஸ்ட்களே காமெடி ஆகிவிடுகின்றன. ஓவர் ட்விஸ்ட்டும் உடம்புக்கு ஆகாது பாஸ். கழுத்தைப் பிடிப்பது ஆணின் கையா, பெண்ணின் கையா எனத் தெரியாத பசுபதி - வட சென்னையின் தாதா,

என்ன நடந்தாலும் சும்மாவே இருக்கும் மிதுன் சக்கரவர்த்தி - மும்பை தாதா, சொந்த மகனையே கொல்ல முயற்சிக்கும் தாதாவை நினைத்து அஞ்சும் போலீஸ் கமிஷனர் நாசர்... என கேரக்டர் வடிவமைப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள்.

பாடல்களைவிட மிரட்டலான பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறது ப்ரஷன் ப்ரவீன் - ஷ்யாம் கூட்டணி. சண்முகசுந்தரத்தின் கச்சிதமான ஒளிப்பதிவு, எடிட்டர் சபு ஜோசப்பின் ஷார்ப்னெஸ்... இரண்டும் படத்துக்கு பக்கபலம்.

என்ன நடந்தது என்பதைக் காட்டியதில் இருந்த சுவாரஸ்யத்தை, யார் செய்தது என்பதிலும் சேர்த்திருந்தால் பரபர ஆக்ஷன் படமாக மனதில் பதிந்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு