Published:Updated:

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விகடன் சினிமா குழு

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விகடன் சினிமா குழு

Published:Updated:

'செத்தா, சொல்லிவிடுங்க’ என மகன் வெறுக்கும் அப்பா; இறந்த அப்பாவை நினைத்து மருகும் மகன். இருவரும் 'ஷேர்’ செய்துகொள்ளும் மிட்டாய்... 'ஆரஞ்சு மிட்டாய்’! 

'60 வயது’ விஜய் சேதுபதி, இதய நோயாளி; ஊரோடு சேர்ந்து வாழாத மூர்க்கன். 108-க்கு அழைத்து, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு ஜாலி ட்ரிப் அடிப்பதுதான் அவருடைய பொழுதுபோக்கு. அப்படி ஒரு சவாரியில் விஜய் சேதுபதியிடம் சிக்குகிறார் மருத்துவப் பணியாளர் ரமேஷ் திலக். தன் காதலுக்கும் வேலைக்கும் விஜய் சேதுபதி சிக்கல் உண்டாக்க, ரமேஷ் திலக் அவரை என்ன செய்தார் என்பதுதான் ஒன்றரை மணி நேரப் பயணம்!

'ஆங்ரி ஓல்டு மேன்’ விஜய் சேதுபதி! 'எவன் எப்படிப் போனா எனக்கு என்ன?’ என ஜாலியாக இருப்பது, குத்தாட்டம் போட்டு விழுவது, 'என் பையன் என்ன சொன்னான்?’ எனப் பதில் தெரிந்த கேள்வியைக் கேட்டு, அழாமல் அழுவது... எனப் பல சிக்ஸர்கள். ஆனால், வேட்டியை கெத்தாக மடித்து நிற்கும் 'பாடி லாங்வேஜ்’, மரணத் தருவாய் மனிதன் என்ற பரிதாபத்தை உண்டாக்கவில்லை. கிட்டத்தட்ட 'ஹீரோ’ வாய்ப்பில் ரமேஷ் திலக் செம ஸ்கோர். எந்த ஓர் இடத்திலும் ஓவர்-ஆக்‌ஷன் காட்டாமல், இயல்பான இளைஞனாக ஈர்க்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

'சின்சியர் சினிமா’வாக முயன்றிருக்கிறார் இயக்குநர் பிஜு விஷ்வநாத். ஆனால், 40-வது நிமிடத்திலேயே விடும் இடைவேளைதான் படத்தின் சின்ன அதிர்ச்சி. மற்றபடி, பல படங்களின் டைட்டில் கார்டிலேயே சொல்லப்படும் அளவுக்கு விஷயங்களை மட்டுமே வைத்து மொத்தப் படமும் நகர்கிறது.

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் இருவருக்கும் இடையே அத்தனை ஆழமான பிரியம் உண்டாவதற்கான காட்சிகளில் அழுத்தமே இல்லை. ஆரம்ப 'பில்ட்-அப்’கள் பின்னர் ஏதோ நடக்கப்போகிறது என எதிர்பார்க்க வைத்து வைத்து, கடைசி வரை ஏமாற்றுகிறது. சசிகுமார் ரசிகராக இருக்கும் ஆட்டோ டிரைவர்போல, பல கலர்ஃபுல் மனிதர்களும் கலகலப்புத் தருணங்களும் ஒரு சின்சியர் சினிமாவில் இருக்கக் கூடாதா? 'முடிவென்ன’ என்ற ஆவலைத் தூண்டாத திரைக்கதை, 'இதய நோயாளி கைலாசத்தை’விட பலவீனமாக இருக்கிறது.

'ஆரஞ்சு மிட்டாய்’ சாப்பிடும் 60 வயதுப் பெரியவர் 'ஹார்ட் அட்டாக்’ என 27 தடவை ஆஸ்பத்திரிக்கு ட்ரிப் அடிக்கிறார் என்ற ஒருவரி சுவாரஸ்யம்தான். அந்த ஒரு வரி 'மட்டுமே’ சுவாரஸ்யமாக இருப்பதுதான் சிக்கல்!

- விகடன் விமர்சனக் குழு