Published:Updated:

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

ம.கா.செந்தில்குமார்

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:

ஜித், ஆர்யா முதல் நயன்தாரா, த்ரிஷா வரை தமிழ் சினிமாவின் பரபர கலகல பிரபலங்களின் பெஸ்ட் ஃப்ரெண்ட் விஷ்ணுவர்தன். ஆனால், அது எதையும் காட்டிக்கொள்ளாமல் 'அண்டர்ப்ளே’

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

செய்வது விஷ்ணு ஸ்பெஷல். இப்போது 'யட்சன்’ பட வேலைகளில் பரபர பிஸி!     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விகடனில் எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதைதான் 'யட்சன்’. நடிகனாகும் ஆசையோடு வர்ற ஒருத்தன், ஸ்கெட்ச் போட்டு ஒரு ஆளைக் கொல்லணும்னு வர்ற ஒருத்தன்... ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒரு புள்ளியில் தடம் மாறினால் என்ன நடக்கும்? வாராவாரம் ரெண்டே பக்கங்களில் செம டெம்போ கொடுத்திருப்பாங்க சுபா. அதை சினிமாவா பண்ணலாம்னு முடிவுபண்ணினதும் கதையில் இன்னும் நிறையத் திருப்பங்களும் திகீர் முடிச்சுகளும் சேர்த்தோம். 'கதைதான் எனக்குத் தெரியுமே’னு வர்றவங்ககூட, 'அட சினிமால இப்படி மாத்திட்டாங்களா!’னு ஆச்சர்யப்படுவாங்க.''

''உங்க இயக்கத்துல ஆர்யா அஞ்சாவது படம் நடிக்கிறார். ஆனா, உங்க தம்பி கிருஷ்ணாவுக்கு இப்போதான் வாய்ப்பு கொடுக்கிறீங்க?''

''எங்க வீட்லயே, 'டேய்... கிருஷ்ணாவை வெச்சு எப்போ படம் பண்ணப்போற?’னு கேட்டுட்டே இருந்தாங்க. கிருஷ்ணாவே, 'அசிங்கமா இருக்குடா. 'உங்க அண்ணன் உன்னை வெச்சு படம் பண்ண மாட்டானா? தனுஷை வெச்சு அவங்க அண்ணன் எத்தனை படங்கள் பண்ணியிருக்கார் பாரு’னு ஃப்ரெண்ட்ஸ் கேட்டுட்டே இருக்காங்க’னு சொல்வான். 'நீ நடிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிற மாதிரி கதை சிக்கும்போது பண்ணலாம்’னு சொல்வேன். அப்படி 'யட்சன்’தான் சிக்கியது. நமக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்களே... அவங்களையே நடிக்கவெச்சிரலாம்னு முடிவுபண்ணேன். ஒரு தம்பி கிருஷ்ணா; இன்னொரு தம்பி ஆர்யா. ஒவ்வொரு படத்துக்கும் நான் ஆர்யாவுக்குக் கதை சொல்றதே அதகளமா இருக்கும். ரூமுக்குள்ள எகிறி எகிறிக் குதிச்சு கதை சொல்வேன். அதனால நான் கதை சொல்றேன்னு சொன்னா, 'விடு மச்சான். நீ ரூம் ஃபுல்லா குதிப்பே. என்னைக்கு ஷூட்டிங்னு சொல்லு போதும்’னு சொல்வான். இருந்தாலும் அவனைக் கட்டாயப்படுத்தி, கதை சொல்லி, கால்ஷீட் வாங்கினேன்.''

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

''ஆர்யா, கிருஷ்ணா... ரெண்டு பேரும் எப்படி பெர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க?''

''சின்ன ரியாக்ஷன்கூட எதிர்பார்த்த மாதிரி வர்ற வரை நான் விட மாட்டேன். ஆர்யா அதைத் தெளிவா பண்ணிருவான். ஆனா, கிருஷ்ணா செட்ல செம டென்ஷனா இருந்தான். 'வீட்ல உன்னை வேற மாதிரி பார்த்திருக்கேன். இங்க வேற மாதிரி இருக்கியே’னு தயங்கித் தயங்கித்தான் தயார் ஆனான். நடிச்சுட்டு, 'ஓ.கே-வா... இப்படியே போயிடலாமா?’னு கேட்பான். 'அப்படியே போயிடலாம்னா, நீ வீட்டுக்குத்தான் போகணும். இந்தக் கேரக்டர் அப்படிப் பண்ணாது. இப்படித்தான் பண்ணும்’னு விரட்டி விரட்டி வேலை வாங்கினேன். ஷூட் முடிஞ்சு டப்பிங் ஆரம்பிச்சப்ப, 'மச்சான்... விஷ்ணுவோடு டப்பிங் போறியா? போ... போ... விடியுற வரை வேற எந்த வேலையும் ஃபிக்ஸ் பண்ணிக்காத’னு கிருஷ்ணாவை ஆர்யா கலாய்ச்சான். ஏன்னா, டப்பிங்ல நான் ரொம்பக் கறாரா இருப்பேன். நடிப்பில் ஒரு நடிகனோட லுக் 50 சதவிகிதம்னா, மீதி 50 சதவிகிதம் அவங்க நடிக்கிறதும் பேசுறதும்தான். ஆர்ட்டிஸ்ட் பக்கத்துலயே நின்னு கரெக்ஷன் சொல்லிட்டே இருப்பேன். கடைசி நாள் டப்பிங் முடிஞ்சதும், 'டேய்... உன்கூட ஷூட்டிங் பண்ணிடலாம். டப்பிங் கஷ்டம்டா’னு சொன்னான் கிருஷ்ணா!''

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

''அம்மா மரணம், திருமணம்னு சில ஏற்ற-இறக்கங்களுக்குப் பிறகு யுவன் மீண்டு வந்திருக்கார். இப்போ எப்படி இருக்கார்?''

''சின்ன படம், பெரிய படம்னு எப்படி வித்தியாசம் பார்க்க மாட்டாரோ, அதே மாதிரிதான் தன் மனநிலை மியூசிக்கைப் பாதிக்காமல் பார்த்துக்குவார் யுவன். என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எனக்காக பெஸ்ட் ஆல்பங்கள் கொடுத்திருக்கார். அம்மாவை மிஸ் பண்ணதும் அப்செட்ல இருப்பாரேனு எனக்கே தயக்கமாத்தான் இருந்தது. ஆனா, அதில் இருந்து மீண்டுவந்து பிரமாதமான ட்யூன்ஸ் கொடுத்திருக்கார். ஏற்ற-இறக்கம் எல்லார் வாழ்க்கையிலேயும் நடக்கும். அதுக்காக அந்தச் சமயம், 'அவர் வேணாம். வேற யார்கிட்டயாவது போயிடலாம்’னு விலகிப்போனா, நண்பன்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு!''

''உங்க மனைவி அனுதான் உங்க படங்களின் ஆஸ்தான காஸ்ட்யூம் டிசைனர். குடும்பத்தில் ரெண்டு பேரும் சினிமாவில் இருக்கிறது எப்படி இருக்கு?''

''ரெண்டு பேரும் காலேஜ்ல கிளாஸ்மேட்ஸ்; சந்தோஷ் சிவன் உதவியாளர்கள். அப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இன்னமும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே பழகிட்டிருக்கோம்.  ஷாரூக், அஜித் சார் நடிச்ச 'அசோகா’ இந்திப் பட ஷூட். அதில் நான் அசோசியேட். அனு காஸ்ட்யூம் டிசைனர். நானும் அனுவும் பேசிப் பேசி வேலைபார்க்கிறதை ஷாரூக் பார்த்துட்டே இருந்தார். ஷூட்டிங் ஆரம்பிச்சு ரொம்ப நாள் கழிச்சு நான்தான் அனுவின் கணவன்னு தெரிஞ்சதும் அதிர்ச்சியாகிட்டார். 'அட... உங்க கணவர் வேற எங்கேயோ இருக்கார். நீங்க விஷ்ணுவோடு டேட் பண்ணிட்டிருக்கீங்கனு நான் நினைச்சுட்டிருந்தேனே’னு அனுகிட்ட கிண்டலாகக் கேட்டிருக்கார். அந்த அளவுக்கு செட்லயும் வீட்லயும் ஃப்ரெண்ட்லியா இருப்போம்!''

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

''அஜித் எந்த அளவுக்கு நெருக்கம்?''

''மும்பையில் 'அசோகா’ ஷூட்லதான் அவரோடு அறிமுகமானேன். அப்புறம் சென்னையில் ஒரு பட பூஜை சமயம் என்னைப் பார்த்து அவரே 'ஹாய்’ சொல்லிச் சிரிச்சவர், 'நாம ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். எல்லா பெரிய ஸ்டார்ஸும் சொல்ற மாதிரிதான்னு நினைச்சேன். ஆனா ஒருநாள், 'சீஃப் நீங்க ஃப்ரீயா இருந்தா நாம படம் பண்ணலாம்’னு கூப்பிட்டார். அப்படித்தான் 'பில்லா’ பண்ணோம். அப்புறம்தான் அவரை உன்னிப்பா கவனிச்சேன். எதையும் தெளிவா திட்டம் போட்டுத்தான் பண்றார். ஒரு தடவை, 'என் லைஃப்ல எல்லாமே நானா பண்ணினது சீஃப்’னு சொன்னார். அதைத்தான், 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா’னு 'பில்லா’ல ஒரு டயலாக்கா வெச்சோம். 'பில்லா’வுக்காக  அவரை மலேசியாவுக்கு ரெண்டு மாசம் கிட்டத்தட்ட கடத்திட்டுப் போயிட்டோம். தொடர்ந்து 32 நாட்கள் ராத்திரிதான் ஷூட். அவருக்கு பகலே மறந்துடுச்சு. 'சீஃப், நீங்க ரொம்ப சின்சியரா வேலை செய்றீங்க. அதனாலதான் பொறுத்துக்கிறேன்’னு சொல்வார். 'ஆரம்பம்’ல தலைகீழா மாட்டித் தொங்கவிடும் காட்சியில டூப் போடாமல் நடிச்சார். ராத்திரி முழுக்க ஷூட். நடுவுல தலை கிறுகிறுனு வந்திருச்சு. மறுநாள், 'பில்லா’வுல 32 ராத்திரின்னா, இங்க ஒரே ராத்திரியிலயே மொத்தமா முடிச்சுட்டீங்களே சீஃப்’னு சிரிச்சார். சினிமாவை அவ்வளவு நேசிச்சு உழைப்பார். குடும்பத்துக்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பார்!''

''எவ்வளவு பிரேக் கொடுத்து வந்தாலும் நயன்தாரா பீக்ல இருக்காங்க. அது என்ன நயன் மேஜிக்?''

"அஜித்துக்கு நான் சின்சியர் சீஃப் !”

''நயன், என் ஃபேமிலி ஃப்ரெண்ட்; ரொம்ப ரொம்ப சின்சியர் பொண்ணு. சீனியர் இயக்குநரோ... அறிமுக இயக்குநரோ...  ஒரு படத்துல கமிட் ஆகிட்டா, அதுல அவ்வளவு கேர் எடுத்துப்பாங்க. படத்துக்கு ஏதாவது சிக்கல் வந்தா, 'அது எப்படி விட முடியும்? நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன்’னு மெனக்கெடுவாங்க. ஒருத்தரைப் பத்தி முகத்துக்குப் பின்னாடி பேச மாட்டாங்க. மத்தவங்க விஷயத்துல தேவை இல்லாமல் தலையிட மாட்டாங்க. இவ்ளோ நல்ல குணங்கள் இருக்கிறவங்க, எங்கேயும் எப்போதும் பிரமாதமாத்தான் இருப்பாங்க!''