Published:Updated:

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

Published:Updated:

ரு கிராமங்களுக்கு இடையிலான பல வருட 'தண்ணீர் தாவா’வைத் தீர்ப்பானா 'சண்டி வீரன்’?

 ஹிட் அடித்த ஹோம் கிரவுண்டுக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தண்ணீர் சிக்கல் என, 'கொதிக்கும்’ பிரச்னையை கையில் எடுத்தது ஓ.கே. ஆனால், அதை இவ்வளவு 'பழங்கஞ்சி’யாகவா பரிமாறுவது?!  

வயல்பாடி ஊரில் நிலத்தடி நீர் உப்பாக மாற, பக்கத்து ஊரான நெடுங்காட்டின் குளத்து நீரைப் பயன்படுத்துகிறார்கள் வயல்பாடி மக்கள். ஆனால், இரு ஊர்களுக்கு இடையிலான பல வருடப் பகையால், அந்தக் குளமும் கை நழுவுகிறது. ஊர் மக்களின் துயரத்துக்குத் தீர்வு காண நினைக்கிறார் நெடுங்காட்டின் அதர்வா. அதில் என்ன சிக்கல் எனில், குளத்தை ஏலத்தில் எடுத்த மில்லுக்காரரின் மகளையே அவர் காதலிக்கிறார். குளமும் குமரியும் என்ன ஆனார்கள் என்பது க்ளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

சிங்கப்பூரில் 'ரோத்தா’ அடிவாங்கி ஊர் திரும்பும் அதர்வாவுக்கு முறுக்கேறிய உடம்பு எல்லாம் சரிதான். ஆனால், அந்த அரும்பு மீசைக்கும் ஏற்றிக் கட்டிய லுங்கிக்குமே 'சண்டி வீரன்’ பட்டமா?  தமிழ் சினிமாவின் 'கிராமத்து ஹீரோ’ என்னவெல்லாம் செய்கிறாரோ அதை எல்லாம் செய்கிறார்... அவ்வளவே! வாவ், வாவ், வாவ் பாவாடை தாவணியில் அவ்வளவு பாந்தம் ஆனந்தி...  அவ்வளவே! படத்தில் வேறு என்ன விசேஷம்... அவ்வளவே!

மண் மணத்துடன் மண் சார்ந்த பிரச்னை என யோசித்தது எல்லாம் சரி. ஆனால், ஈரமும் இயல்புமாக அந்த வாழ்க்கையை மனதுக்குள் கடத்தியிருக்க வேண்டாமா? தாவணித் துரத்தல்களுடன் முன் பாதியும் அரிவாள் விரட்டல்களுடன் பின் பாதியுமாக, தயங்கி, தேங்கி, சுணங்கி நிற்கிறது திரைக்கதை. அனைத்துக் கதாபாத்திரங்களும் நினைத்த நொடியில் மனம் மாறுகிறார்கள். இடைவேளை வரை அம்மாவைக்கூடக் கண்டுகொள்ளாமல் 'கலர்’ பார்த்துத் திரியும் அதர்வா, திடீரென புரட்சி மோடுக்கு மாறுகிறார். டெரர் வில்லன் லால், கட்டக்கடைசியில் கிக்லிபிக்லி செய்கிறார்.  

'தேர்டு அம்பயராக’ச் செயல்படும் செல்போன், 'வீடியோ காலிங்’ வியூகம் என சில இடங்களில் மட்டும் ஐடியா மின்னல். 'அலுங்குறேன்... குலுங்குறேன்...’ பாடலில் அருணகிரியின் இசை வசீகரம்.    

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

குளத்துத் தண்ணீர்தான் பிரச்னை எனில், வயல்பாடிக்காரர்கள் ஒரு குளத்தை வெட்டிக் கொள்ளலாமே! ஊரின் எல்லையோரத்தில் பக்கத்துக் கிராமத்தில் தேங்கும் தண்ணீர், வயல்பாடியில் நிற்காதா?! இரண்டு மணி நேரம்தான் படம் என்பதை சாமி சத்தியமாக நம்ப முடியவில்லை. கதைக்களம் எந்த மாவட்டம் என்பதை சூசகமாகக்கூட தீர்மானிக்க முடியாதபடி, செம காட்டு காட்டுகிறார்கள்.

' 'வாகை சூட வா’ சற்குணமா இது?’ என்ற 'நய்யாண்டி’ அதிர்ச்சியை 'அதுக்கும் மேல’ கொண்டுசெல்கிறான் 'சண்டி வீரன்’!

- விகடன் விமர்சனக் குழு