Published:Updated:

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

Published:Updated:

ர், உலகத்தையே வளைத்துப் போட்டிருக்கும் ஒரு 'சூப்பர் ஸ்மார்ட்’ வில்லனை  'தனி ஒருவனாக’ ஹீரோ எதிர்கொண்டால்..? 

'ரீமேக் ராஜா’ பெயரை அதிரடியாகக் கடாசியிருக்கிறார் 'மோகன் ராஜா’. 'நல்லவன் Vs கெட்டவன்’ கதைதான். ஆனால், ஆரம்ப ஃப்ளாஷ்பேக் காட்சியின் எதிர்பாராத திருப்பம் தொடங்கி, க்ளைமாக்ஸ் திடுக்கிடல் வரை களைகட்டுகிறது படம். அப்ளாஸ், கங்கிராட்ஸ் இயக்குநரே!

தனக்குத் தகுதியான ஓர் எதிரியை நிர்ணயித்து அவனை அழிப்பதே ஐ.பி.எஸ் அதிகாரி 'ஜெயம்’ ரவியின் லட்சியம். அதற்காக மிக மோசமான மூன்று கிரிமினல்களைத் தேர்ந்தெடுத்தால், அந்த மூன்று பேரின் மாஸ்டர் பிரெயினும் ஒருவனே எனத் தெரியவருகிறது. அந்த ஒருவனை, ரவி எப்படிக் காலிசெய்கிறார் என்பதே இரண்டரை மணி நேர விறுவிறு சேஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனி ஒருவனில் அசத்தல் 'ஒன் மேன் ஷோ’ கொடுப்பது அர்விந்த் சுவாமி. சித்தார்த் அபிமன்யூவாக ஒட்டுமொத்த லைக்ஸையும் அள்ளி கோட் பாக்கெட்டில் குவித்துக்கொள்கிறார். பதற்றத் தருணங்களில் உதட்டின் ஓரமாகப் பூக்கும் சிரிப்பு, கிடுகிடுவெனத் திட்டமிடும் கண்கள், சிறையில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் அலட்டிக்கொள்ளாத உடல்மொழி... என மெர்சல் காஸ்ட்டிங். தனக்கு ஒரு பிரச்னை என்றால் கேர்ள் ஃப்ரெண்ட் முதல் அப்பா வரை யாரையும் பலி கேட்கும் அந்தக் 'கெத்து’, க்ளைமாக்ஸ் காய் நகர்த்தலில் முழுமை அடைவது... அட்டகாசம்.  

எதிர்பாராத திசையில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட் அடித்திருக்கிறார் 'ஜெயம்’ ரவி. மித்ரனாக இறுக்கமும் மூர்க்கமுமாக... இரும்பு வார்ப்பு. அட, வெறுமனே வலம்வராமல் துறுதுறுவென நடிக்கவேண்டிய கேரக்டர் நயன்தாராவுக்கு.  'ஜெயம்’ ரவி, நயனிடம் காதலைச் சொல்லும் காட்சியில் 'தட்றா க்ளாப்ஸ்’ என அதிர்கிறது அரங்கம்.

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

திரைக்கதையில் திடுக் திருப்பங்கள் மட்டும் அல்லாமல்... ஆச்சர்ய ஆனந்த ட்விஸ்ட்களையும் புதைத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா. அதில் செம விசேஷம் தம்பி ராமையா, அர்விந்த் சுவாமி இடையிலான 'அப்பா-மகன்’ லகலக காம்போ. மகனுடைய மிரட்டலுக்கு மிரளும் அப்பா என செம ரவுசு. சின்னச்சின்னக் குற்றங்களை இயக்கும் 'ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத் தலைமையகம்’, நடப்புச் செய்திகளைத் தீர்மானிக்கும் வணிகச் செய்திகள், 'பக் விளையாட்டு எனப் படம் நெடுக பல 'பவர் ப்ளே’ அத்தியாயங்கள் (ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஸ்பேஸ் கொடுத்தது உள்பட!).  

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

எக்ஸ்பிரஸ் ஓட்டத்தில் யோசிக்க அனுமதிக்காத சம்பவங்களால், தியேட்டரில் இருக்கும் வரை 'மேஜிக்’ காட்டுகிறது லாஜிக். ஆதியின் பின்னணி இசையில் தடதடக்கிறது ஆக்ஷன் மேளா. பரபர திருப்பங்கள், திக் திடுக் திருப்பங்களைக் கச்சிதமாகக் கவர்ந்துகொடுக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு மற்றும் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங்  கூட்டணி.  

'தனி ஒருவன்’ நினைத்தால் எதுவும் சாத்தியமே என அதிரடியாக வெடித்திருக்கிறார்கள்.

ஆசம்... ஆவேசம்!      

- விகடன் விமர்சனக் குழு