Published:Updated:

“கவுண்டமணி தலைவர் சத்யராஜ் தளபதி நான் ரசிகன் !”

சிவகார்த்திகேயன் காமெடி என்கவுண்டர்ம.கா.செந்தில்குமார்

“கவுண்டமணி தலைவர் சத்யராஜ் தளபதி நான் ரசிகன் !”

சிவகார்த்திகேயன் காமெடி என்கவுண்டர்ம.கா.செந்தில்குமார்

Published:Updated:

''கவுண்டமணி அண்ணன் என் ஆல்டைம் ஆதர்சம். சத்யராஜ் சாருடன் நடிக்கிறப்ப இதை நான் சொல்லவும், அவரும் கவுண்டர் அண்ணன் பராக்கிரமங்களை அடுக்க ஆரம்பிச்சுட்டார். கவுண்டமணி அண்ணனைப் பார்த்துப் பேசணும்கிற ஆசை வெறியாவே மாறிடுச்சு. அடிச்சுப்

“கவுண்டமணி தலைவர் சத்யராஜ் தளபதி நான் ரசிகன் !”

பிடிச்சு இப்போ பார்த்துட்டேன்ல. சினிமாவுல பார்த்த அதே எனர்ஜி, அதே பன்ச், அதே கவுன்டர் வசனங்கள். சினிமால பாட்டு ஷூட் பண்றது பத்தி பேசிட்டிருந்தப்ப, ''ஸ்பாட்ல சாங் எடுக்குறோம். யாரும் வராதீங்க... யாரும் வராதீங்க’னு ஒருத்தனையும் உள்ளே விட மாட்டாங்க. அதனாலதானோ என்னவோ தியேட்டர்லயும் பாட்டு போட்டதும் எல்லா பயலுகளும் டபக்குனு வெளியில எந்திரிச்சுப் போயிடுறானுங்க’னு போறபோக்குல சொல்லிட்டுப் போயிட்டே இருக்கார். என்னால சிரிப்பை அடக்க முடியலை. 'அலப்பறை அன்லிமிடட்’னா அண்ணன்தான்!'' - சிலாகித்துச் சிரிக்கிறார் சிவகார்த்திகேயன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ரஜினி முருகன்’ பட வெளியீட்டுக்குக் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு,  கவுண்டமணியுடனான 'ஃப்ரெண்ட்ஷிப்’... என இரட்டை உற்சாகத்தில் திளைக்கிறார்.

''மிமிக்ரில அவர் குரல், சினிமாவுல அவர் பன்ச்னு பலரும், நீங்க உள்பட இமிடேட் பண்ணியிருக்கீங்க. அதைப் பத்தி ஏதாவது சொன்னாரா?''

''அது பத்தி கேட்டா, 'அட இல்லாதவங்க எடுத்துக்கிறாங்க... விடுங்கப்பா’னு சொல்லிட்டு அடுத்த டாபிக் போயிடுவாராம். எதைப் பத்தியும் வருத்தப்பட்டுக்க மாட்டார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஷூட்டிங் சமயத்துலயே 'நாம மூணு பேரும் சேர்ந்து நடிக்கலாம்’னு சத்யராஜ் சார்கிட்ட சொன்னேன். 'செமத்தியா இருக்குமே’னு சந்தோஷமாகிட்டார். ஆனா, கதை சிக்கணும். அதுவரைக்கும் கவுண்டர் அண்ணன் - தலைவர்; சத்யராஜ் சார் - தளபதி, நான் இவங்க ரசிகன்னு சொல்லி ஒரு குரூப் ஆரம்பிச்சுட்டோம்.  செம கலாட்டாவா இருக்கு!''

'' 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ மாதிரி உங்க படங்கள்ல பாடல்களை ஹிட் ஆக்கிடுறீங்களே... அது என்ன ரகசியம்?''

''அதுக்குக் காரணம் இமான்-யுகபாரதி கூட்டணிதான். நான் நடிச்ச 30 பாடல்கள்ல யுகபாரதி சார் மட்டுமே 14 பாடல்கள் எழுதியிருக்கார். அதேபோல இமான் அண்ணன் கீபோர்டும் பெரிய ரோல் பண்ணியிருக்கு. அடுத்து, 'பாலைக் குடிச்சாலும் கள்ளுங்கிறாய்ங்க... தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாய்ங்க... சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாய்ங்க...’ பாட்டு போட்டிருக்காங்க. ஒரு நாள் முழுக்க இந்தப் பாட்டைக் கேட்டுட்டே இருந்தேன். 'இப்படி வேணும்னு நானோ, டைரக்டரோ கேக்கலை.  ஆனா, அவங்களே அதைப் பண்ணிடுறாங்க. நான்கூட, 'படத்துல ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியைவிட இமான்-யுகபாரதி கெமிஸ்ட்ரி அசத்தலா இருக்கே’னு சொல்வேன். 'சிவாவுக்கு மட்டும்  என்ன ஸ்பெஷலா போடுறீங்க’னு இமான் அண்ணன்ட்ட கேட்டிருக்காங்க. 'அது என்னவோ தம்பிக்கு தானா அமைஞ்சிருது’னு  சிரிச்சாராம்!''

''அடுத்து பி.சி.ஸ்ரீராம், அனிருத், ரசூல் பூக்குட்டினு பெரிய காம்பினேஷன்ல படம் பண்றீங்கபோல...''

''ஆமா... கொஞ்சம் லிமிட் ஏறி அடிக்கிறோம். இதுவரை நான் ரொமான்டிக் காமெடி பண்ணது இல்லை. ஹாலிவுட்ல இருந்து மேக்கப்மேன் வரவெச்சு, கெட்டப் மாத்தினு இதுவரை பண்ணாத பல வேலைகள் பண்றோம். அதுல பி.சி சார்கூட வேலை பார்க்கிறது... வரம். ஆரம்பத்துல, 'நிறைய கமிட்மென்ட்ஸ இருக்கு’னு எங்க படத்துல வொர்க் பண்ண மறுத்துட்டார். 'சரி சார். ஸ்கிரிப்ட் மட்டுமாவது படிச்சுட்டு உங்க கமென்ட் சொல்லுங்க’னு சொல்லிக் கொடுத்தோம். மறுநாளே கூப்பிட்டு, 'எனக்குப் பிடிச்சிருக்கு. நானே பண்றேன்’னு சொல்லி டீம்ல சேர்ந்தார். இப்போ சார்தான் எங்களுக்கு ஹெச்.ஓ.டி. அவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னா, நாம தயாரா இருக்கணும்னு ஓடிட்டே இருக்கோம்!''

''விஜய், அஜித் மாதிரியான மாஸ் ஹீரோக்களோடு நடிக்க வாய்ப்பு கிடைச்சா ஏத்துப்பீங்களா?''

''கண்டிப்பா! ரொம்ப சந்தோஷமான விஷயம். நான் ஆசைப்படுற விஷயமும்கூட. அவ்வளவு பெரிய மாஸ் ஹீரோக்களோடு நடிக்கிற அனுபவம் கிடைச்சா கசக்கவா செய்யும். ஸ்கிரிப்ட்ல யாருக்கு  முக்கியத்துவம்னு எல்லாம் கவலைப்படாம அவங்களோட நடிக்க நான் தயார்!''

''சமீபத்தில் ஒரு விருது விழாவுல நீங்க பேசின விஷயம் பரபரப்பாகிருச்சே...''

''அந்தக் குறிப்பிட்ட விருது விழாவுக்கு வந்திருந்தவங்களைப் பார்த்தப்ப, அவங்க யாரையும் தாஜா பண்ணிக் கூப்பிட்டிருந்த மாதிரி தெரியலை. 'நீங்க வந்துடுங்க. சிறந்த நடிகர் மாதிரி ஒரு விருது கொடுத்து அதுக்குன்னே தனியா ஒரு ஃபங்ஷன் பண்ணிக்கலாம்னு எல்லாம் என்னை சில விழாக்களுக்குக் கூப்பிட்டிருக்காங்க. ஆனா, இந்த விழா அப்படி இல்லை’னு ஜாலியா சொல்லிட்டு இன்னும் நிறையப் பேசியிருந்தேன். ஆனா, அதெல்லாம் இல்லாமல் சின்னதா ஒரு விஷயத்தை மட்டும் ஷார்ப்பா கட் பண்ணிப் போட்டிருந்தாங்க. அதனால நான் விஜய் டி.வி-யைத்தான் அப்படிச் சொன்னதா தப்பா கிளப்பிவிடுறாங்க. ஒவ்வொரு வார்த்தைக்கும் பல நூறு அர்த்தங்களை தப்புத்தப்பா கண்டுபிடிச்சா, என்ன பண்ண முடியும்? விஜய் டி.வி என்னை வளர்த்த சேனல்... அவங்களுக்கு என்னை நல்லாவே தெரியும்!''

''நடிகர் சங்க விவகாரம், விருந்து, விழாக்கள்னு இளம் ஹீரோக்கள் ஒண்ணா டிராவல் பண்றாங்க. ஆனா, நீங்க தனிச்சே இருக்கிறீங்களே... ஏன்?''

''விஷால், சிம்பு, 'ஜெயம்’ ரவி, ஜீவா... இவங்க படங்கள் பார்த்துட்டு அவங்ககிட்ட பேசியிருக்கேன். ஊர்ல இருக்கும்போது அவங்க படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கோம். அப்ப பேச வாய்ப்பு கிடைக்கலை. இப்ப வாய்ப்பு கிடைச்சிருக்கு. பேசுறேன். மத்தபடி எனக்கு சினிமாவில் இருக்கிற ஒரே நண்பன் அனிருத். ரொம்ப வருஷமா என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளோடு மட்டுமே இருக்கேன். சினிமா நட்பு கிடைக்குதுனு அவங்களை விட்டுட முடியாது. அவங்களை வம்படியா சினிமாவில் சேர்க்கவும் முடியாது. அதான் அப்படியே இருக்கேன். மத்தபடி யார்கூடவும் சேரக் கூடாது, தனியாவே இருக்கணும்னு எந்த ஐடியாவும் கிடையாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism