Published:Updated:

நாலு பேர்... நாலு நியூஸ் !

நா.சிபிச்சக்ரவர்த்தி, பா.ஜான்ஸன், கார்க்கிபவா, படம்: ஆ.முத்துக்குமார்

நாலு பேர்... நாலு நியூஸ் !

நா.சிபிச்சக்ரவர்த்தி, பா.ஜான்ஸன், கார்க்கிபவா, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:

மக்கு நல்லா தெரிஞ்ச  நாலு  ஹீரோயின்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் இங்கே... 

''ஐ யம் சிங்கிள் அண்ட்  ஐ யம் ஸ்லிம்!''

''ஹாய் மச்சான்ஸ்... நான் இப்போ ஒல்லி பெல்லி கில்லி!'' என ரிட்டர்ன் அடித்திருக்கிறார் நமீதா. "

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் 94 கிலோ இருந்துச்சு... இப்போ ஏகப்பட்ட வொர்க்-அவுட் பண்ணி 76 கிலோ ஆகிருச்சு. இன்னும் குறைக்கும்!''

"''எங்கே போனீங்க இவ்ளோ நாளா?''"

  ''சென்னையிலேயேதான் இருக்குது. சில வருஷம் முன்னாடி லைஃப்ல பிரச்னை... கொஞ்சம் டிப்ரெஸ்டா இருந்தது. அதான் வொர்க்-அவுட் பண்ண முடியலை. அப்படியே வெயிட் கூடிருச்சு. இதுக்கு மேல எடை குறைக்கலைனா அவ்ளோதான்னு ஆகிடுச்சு. ஓவர் வெயிட்னால என் கேரியரும் பிரச்னை ஆச்சு. என் ஃப்ரெண்ட் சிவாஜி வெயிட் லாஸ் டெக்னிக் பத்தி சொன்னார். சரி... ஒரு தடவை ட்ரை பண்ணுதுனு போனேன். இப்போ ஹேப்பி!''

நாலு பேர்... நாலு நியூஸ் !

"''அடுத்து என்ன?''

  ''கதைகள் கேட்டுட்டு இருக்குது. தமிழ், கன்னடத்துல ரெண்டு படங்கள் கமிட் பண்ணியிருக்குது!''

"''அயிட்டம் ஸாங் ஆஃபர் வந்திருக்குமே... அதானே உங்க ஸ்பெஷல்!''"

''இல்லை. இப்ப என் கேரியருக்கு அது செட் ஆகாது. அப்படி ஓ.கே சொல்றதுன்னா, முன்னாடியே நிறையப் பேர் கூப்பிட்டது. அப்பவே ஆடியிருப்பேனே! என் கேரக்டர் வெயிட்டா இருக்கணும். வில்லியாக்கூட நடிக்குது. அப்படி யாராச்சும் கதை சொன்னா உடனே ஷூட் போயிடலாம். ஏன்னா, இதுவரை நமீ வெயிட்டா இருந்தா... இனி அவ நடிக்கிற கேரக்டர் வெயிட்டா இருக்குது!''

"''இந்த கேப்ல இண்டஸ்ட்ரியில் யார் உங்களுக்கு ஆதரவா இருந்தாங்க?''"

''குஷ்பு மேம். அவங்க ரொம்ப ஸ்வீட். அப்புறம் காதல் சந்தியா. இன்னும் நிறையப் பேர்!''

"''கூட நடிச்ச ஹீரோக்கள்ல?''"

''ஹா...ஹா... அவங்க எல்லாம் பிஸியாச்சே. சரத் சார், பரத் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவங்ககிட்ட பேசுவேன். அப்புறம் என் ஸ்வீட் ஹார்ட் ஸ்ரீகாந்த்!''

''நமீக்கு "எப்போ கல்யாணம்?''"

''கல்யாணமா... எனக்கா..? (எகிடுதகிடாக அதிர்ச்சியாகிறார்). நோ சான்ஸ். சினிமா தவிர வேற எதுவும் நான் யோசிக்காது!''

''சரி... உங்க மச்சான்கள் சார்பா கேtட்கிறோம்... நீங்க சிங்கிளா, கமிட்டடா?''

''சந்தேகமே வேணாம் மச்சான்ஸ். நான் சிங்கிள்தான்..!''

''நல்லா தில்லா காதல் சொல்லுங்க!''

'பிட்டு படம் பார்க்காம இருந்துருவியா?’ - தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஹீரோவிடம் கருத்தான கேள்வி கேட்ட உற்சாகத்தில் திளைக்கிறார் ஆனந்தி. அறிமுகமான ஜோரில் அடுத்தடுத்து சுவாரஸ்ய புராஜெக்ட் பாக்கெட் செய்திருக்கும் காந்தக் கண்ணழகி!

''நான் ஸ்கூல்ல நல்லா படிக்கிற ஸ்டூடன்ட். டீச்சர் பாடம் சொல்லிக்கொடுக்காம, புக்ஸ் படிச்சே நல்ல மார்க் எடுத்திருவேன். அந்த சின்சியாரிட்டி சினிமாவிலேயும் இருக்கு. அதான் இப்போ பி.பி.எம் படிச்சுட்டே நடிக்கிறேன். அடுத்து ஃபேஷன் டிஸைனிங் படிக்க ஐடியா!''

நாலு பேர்... நாலு நியூஸ் !

""''ஒரு நடிகையா உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''

''என் ப்ளஸ்... ம்ம்ம்... என் கண்ணும், உதட்டுக்கு கீழ இருக்கிற மச்சமும். 'அந்த மச்சம் உண்மையா... இல்லை வரைஞ்சதா?’னு நிறையப் பேர் கேட்பாங்க. என் மைனஸ்... நான் பயங்கர சோம்பேறி. எந்த அளவுக்குன்னா... கண்ணும் மச்சமும் எனக்கு அழகுனு சொன்னேன்ல... அதைப் போய் கண்ணாடியில் பார்த்து ரசிக்கக்கூட நகர மாட்டேன். ஆனா, வீட்லதான் அப்படி. ஷூட்டிங் கிளம்பிட்டா... எக்ஸ்ட்ரா எனர்ஜி வந்துரும்!''

''உங்க ஃபேமிலி பத்திச் சொல்லுங்க?''

''அப்பா ஒரு நகைக்கடை வச்சிருக்கார். அம்மா பியூட்டிஷியன். ஆனா, நான் நடிக்க வந்த பிறகு அதை விட்டுட்டாங்க. ஒரு தங்கச்சி ரோஷினி. இப்போ டென்த் படிச்சுட்டு இருக்கா. என் மேல விழும் சினிமா லைம்லைட் பார்த்துட்டு, 'உனக்கு நடிக்க வாய்ப்பு வந்தா நடிப்பியா?’னு அவகிட்ட கேட்டேன். 'நான் எதுக்கு நடிக்கணும்?’னு  கேக்கிறா. என்ன நடக்குதோ பாப்போம்!''

"''நேர்ல எப்படி காதல் சொன்னா உங்களுக்குப் பிடிக்கும்?''

''நல்லா தில்லா... கண்ணுக்கு கண் பார்த்துச் சொல்லணும். இதுவரை சொன்னவங்க அப்படிச் சொல்லவே இல்லை. பயந்து பயந்து சொல்றவங்களை எனக்குப் பிடிக்காது!''

"''நடிப்பு, டான்ஸ் தவிர வேற எதுல ஆர்வம்?''"

''புக்ஸ்! எந்த புக் கைல கிடைக்குதோ அதைப் படிச்சிருவேன். சேத்தன் பகத் என் ஃபேவரிட். கடைசியா அவர் எழுதின 'ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்டு’ வரை படிச்சுட்டேன்.''

''அடுத்து என்ன?''

''நிறையப் படிக்கணும்... நிறைய நடிக்கணும். முக்கியமா விஜய் சார் கூட நடிக்கணும். அந்த நாளுக்காக வெயிட்டிங்!''

''தேவை... ரியல் சவால்!''

காபி டேபிள் ஷோக்களில் அவ்வளவு கலகலப்பு சேர்த்த அனுஹாசன், இப்போது லண்டனில் செம பிஸி. பி.பி.சி-யின் ஆங்கில சீரியலில் வேலை செய்பவர், தமிழில் 'வல்லதேசம்’ எனும் படத்தில் நடிக்கிறார்.

'''என்ன திடீர்னு சினிமாவில் ரீ-என்ட்ரி’னு விசாரிக்கிறாங்க. எனக்கு எப்பவும் சினிமாவில் நடிக்கப் பிடிக்கும். ஆனா, நான் நடிக்கிறது புகழுக்காகவோ, பணத்துக்காகவோ இல்லை. என் திருப்திக்கு மட்டும்தான். முதல்ல 'அக்கா’ன்னாங்க... அப்புறம் 'அண்ணி’ன்னாங்க. அப்புறம் எல்லா படத்திலும் சாவடிச்சாங்க. எனக்கே போரடிச்சது. அதான் நடிக்கிறதை நிறுத்திட்டேன். இப்போ 'வல்லதேசம்’ டைரக்டர் நந்தா என் கேரக்டர் பத்திச் சொன்னது பிடிச்சது. குழந்தையைத் தொலைச்சுட்டு தேடும் ஒரு தாயின் கதை. ரொம்ப உண்மையாகவும், அதே சமயம் சினிமாவுக்குத் தேவையான சுவாரஸ்யங்களும் இருந்தது. அதான் உடனே கமிட் ஆகிட்டேன். கமல் டிரெய்லர் பார்த்துட்டு, 'டெக்னிக்கலா ரொம்ப நல்லா வந்திருக்கு. சின்ன பட்ஜெட்ல பிரமாண்டம் கொண்டுவந்திருக்கீங்க’னு பாராட்டினார். டீமுக்கு செம சந்தோஷம்!

நாலு பேர்... நாலு நியூஸ் !

நான் நடிக்கணும்னா கேரக்டருக்குனு ஒரு விசேஷம் இருக்கணும்.  எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ண ஆசை. ஆனா, யாருமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. 'ஆக்கி’னு ஒரு படத்துல ஹாக்கி கோச்சா நடிச்சேன். அதுக்காக ஹாக்கி கத்துக்கிட்டேன். இப்படி அதுவரை எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை அந்த கேரக்டர் டிமாண்ட் பண்ணா, கண்டிப்பா பண்ணுவேன்.  இப்ப 'வல்லதேச’த்துக்காக உடம்பை இளைச்சு ஃபிட் ஆனேன். அந்த மாதிரி ரியல் லைஃப்லயும் சவால் கொடுக்கணும் அந்த ரீல் கேரக்டர்!''

"''லண்டன்லயே செட்டில் ஆகிடுவீங்களா?''

''இருக்கிற வேலைகளை முடிக்கவே மூணு வருஷம் ஆகிடும். அதுவரை அங்கேதான். அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கு எப்படித் தெரியும்?''

அதார் உதார்

கமல் அவதார்!

கமல்தான் பலப்பல அவதார் எடுப்பார். ஆனால், 'கமல் அவதார்’களே எடுத்திருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமௌலி. 'சுட்ட கதை’, 'கள்ளப்படம்’ சினிமாக்களில் ஈர்த்த லட்சுமி பிரியா, கமல் கெட்-அப் போட்டு, போட்டோ ஷூட்டி யிருக்கிறார்.

நாலு பேர்... நாலு நியூஸ் !
நாலு பேர்... நாலு நியூஸ் !

''இந்த லைக்ஸ் எல்லாம் நாலு பேருக்குச் சொந்தம். போட்டோகிராபர் சுபாஷினி வணங்காமுடி, காஸ்டியூம் டிசைனர் தக்‌ஷனா ராஜாராம், மேக்-அப் வுமன் லலிதா ராஜமாணிக்கம், அப்புறம்... நானு... நானு! நாங்க நாலு பேரும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். இந்த ஐடியா தோணவும் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரமாக கடைசி டீடெய்ல் வரை வொர்க்-அவுட் பண்ணிட்டு களமிறங்கிட்டோம். '16 வயதினிலே’-ல இருந்து 'உத்தம வில்லன்’ வரையிலான கமல் கெட்-அப்களில் 12 மட்டும்தான் பண்ண முடியும்னு தோணுச்சு. சில மேக்கப் போடும்போதுதான் தெரிஞ்சுது, கமல் சார் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்னு. உதாரணமா அப்பு கமல் மாதிரி காலை மடக்கி நிக்கணும். காலைப் பின்னாடி கட்டினா வலி தாங்கலை. அஞ்சு நிமிஷத்துக்கே அப்படின்னா, மணிக்கணக்கா நடக்கும் பட ஷூட்டிங்ல வலியை தாங்கிட்டு முகத்துல உணர்ச்சிகளோட நடிக்க வேற செய்யணும். கமல் சார் பண்ணது எல்லாம் சான்ஸே இல்லை..! 'அன்பே சிவம்’ கெட்-அப்புக்கு பாடிலாங்வேஜ்லயே மாற்றம் இருக்கணும்.  அப்படி நிக்கும்போதுதான் அவர் எந்த மனநிலையில் மொத்தப் படமும் நடிச்சிருப்பார்னு ஒரு நடிகையா புரிஞ்சுக்க முடிஞ்சது. இப்போ கமல் சார் மேல பாசம் இன்னும் அதிகமாகிடுச்சு. கமல் சார் கமென்ட்டுக்காக வெயிட்டிங்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism