Published:Updated:

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

Published:Updated:
##~##
''நமக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு புதுக் களம் இந்த ஆடுகளம். 'இதுதான் கதை’ன்னு சொல்லிட முடியாது. ஆடுகளத்தில் நீங்க பார்க்கப்போற அனுபவம் உங்களுக்கு ஸ்கூலில் நடந்து இருக்கலாம். அலுவலகத்தில் நடந்துகொண்டு இருக்கலாம். உலகம் முழுக்க நடக்கும் ஒரு விஷயத்தை மதுரை ஸ்லாங்கில் சொல்லி இருக்கேன்!'' - தாடியை வருடிக்கொண்டே பேசுகிறார் வெற்றிமாறன். 'பொல்லாதவன்’ படைத்தவர்.  

''நீங்களும் 'மதுரை மேனியா’வுக்கு இரை ஆயிட்டீங்களோ?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்படி இல்லை. இது மதுரையைக் களமாகக் கொண்ட படம்... அவ்வளவுதான்! 'பொல்லாதவன்’ படம் முழுக்க நார்த் மெட்ராஸ். திரும்பவும் அந்த ஏரியா கதையை கையில் எடுத்தா, என்னை நானே சுருக்கிக்கொள்வது மாதிரி இருக்கும். அதனால், புது ஏரியாவுக்குப் போகலாம்னு முடிவு பண்ணேன். அப்போகூட மதுரைதான்னு முடிவு பண்ணலை. ஆனா, 'ஆடுகளம்’ கதை பிடிச்சப்போ, இந்தக் கதைக்கு மதுரை மண்தான் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதான்... மதுரை!''

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

''ஆனா, தனுஷ் பக்கா சென்னைப் பையன். கிராமத்து இளைஞன் கேரக்டரில், என்ன ட்ரில் வாங்கினீங்க?''

''நாங்க ரெண்டு பேருமே மெட்ராஸ்காரங்கதான். எங்களுக்கு சென்னையைத் தாண்டி எதுவுமே தெரியாது. எங்க ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், வசனகர்த்தா விக்ரம் ரெண்டு பேரும் மதுரைக்காரங்க. அந்தத் தைரியத்தில்தான் மதுரைக்குக் கிளம்பினேன். 'இவனே தைரியமாப் போறானே... நாமளும் இறங்கலாம்’னு தனுஷ் நம்பி வந் தார். முதல் நாள் பேப்பர்ல வசனம் படிச்சுட்டு பேச ரொம்பவே கஷ்டப்பட்டார். 'எனக்கு டயலாக் பேசி ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்திருங்க’ன்னு கேட்டு வாங்கி, அதை திரும்பத் திரும்பக் கேட்டு, மதுரை ஸ்லாங் பழகினார். ஒரு ஷெட்யூல் முடியறதுக்குள்ளேயே ஏரியா பேச்சு, நடை, உடைன்னு எல்லாம் பிக்கப் பண்ணிட்டார். படத்தில் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது 'கருப்பு’ங்கிற தனுஷ் கேரக்டர்தான். டயலாக் பேப்பரைக் கையில் வெச்சுக்கிட்டு 'இவன் ஏன் சார் இப்படிப் பண்றான்? இவனாலதான் எல்லா பிரச்னையும் வருது... கருப்பு பேசாம இருந்தா, எந்தப் பிரச்னையும் இல்லை. இவன் இப்படிப் பேசுறதாலதான் இவ்வளவு பிரச்னையும்’னு தனுஷே ஆதங்கப்படுற அளவுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர்!''  

''வருஷத்துக்கு 100 படங்கள் ரிலீஸ் ஆனாலும் 10 படங்கள் ஓடுறதே கஷ்டமா இருக்கு... என்ன பிரச்னை?''

''சினிமா பார்க்குறது, சினிமா காட்டுறது எல்லாமே மாறிடுச்சு. முன்னாடி 10 தியேட்டரில் 100 நாள் ஓட்டினாங்க. இப்போ 100 தியேட்டரில் 10 நாள் ஓட்டுறாங்க. இப்போ இருக்குற மார்க்கெட்டிங், புரமோஷன் ஸ்டைலுக்கு இயக்குநர்கள் பழகணும். நமக்கும் மக்களுக்கும் பிடிக்கிற மாதிரி ஸ்க்ரிப்ட் பிடிக்கணும். புரமோஷன் இல்லைன்னா, ஒரு நல்ல படம் வந்ததே தெரியாது. அதே புரமோஷன் நல்லா இருந்து, ஸ்க்ரிப்ட் நல்லா இல்லைன்னாலும் மக்களிடம் போய்ச் சேராது. இந்த மாற்றத்தை நிறையப் பேர் புரிஞ்சுக்கலை. அதான் பிரச்னை!''

யதார்த்த முயற்சிகள் ஜெயிக்காது!

''யதார்த்த சினிமாக்கள் அதிகமா வருதே?''

''நல்ல விஷயம்! எனக்கு யதார்த்த சினிமாதான் பிடிக்கும். ஹாரி பாட்டர் மாதிரி கதைகள் போர் அடிக்கும். எது யதார்த்தம்னு புரிஞ்சுகிறதுல பிரச்னை இருக்கு. அழுக்குச் சட்டையும், பீடியும் மட்டுமே யதார்த்தம் கிடையாது. கார்ப்பரேட் அண்டர்வேர்ல்டோ, லோக்கல் ரவுடியிஸமோ எதைக் காட்டினாலும் அதோட ஒரிஜினல் முகத்தைக் காட்டணும். இந்த மாதிரிப் படங்களுக்கு என்னிக்கும் வயசே ஆகாது. மக்களோட வாழ்க்கையை, போராட்டத்தைப் பேசுற படங்கள் நிச்சயம் தோற்காது. எளிமையான விதிதான்... யதார்த்தமா எடுக்கப்படுற படங்கள் தோற்காது. யதார்த்தமா எடுக்க முயற்சி பண்ற படங்கள் நிற்காது. இது என் தனிப்பட்ட கருத்து!''