பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

''தலைவரைக் கண்டு எல்லாரும் ஏன் பயப்படுறாங்க?'' 

'''கூட்டணி அமைய நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டேன்’னு சொல்லியிருக்காரே!''

- அம்பைதேவா

ஜோக்ஸ் - 1

''மேடையில் அமர்ந்திருக்கும் என் கட்சி எதிரிகளே... ஆங்காங்கே நின்றிருக்கும் எதிர்க்கட்சி நண்பர்களே..!''

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ் - 1

'எங்கள் தலைவர் முன்ஜாமீனுக்காக அலைந்துகொண்டிருக்கும்போது 'முதல் நாள்... முதல் களி’ என எழுதிய பதாகைகளை அவர் முன்பாகக் காட்டும் எதிரிகளை...'

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ் - 1

''நான் OLX பறவை...''

''மானத்தை வாங்காதீங்க தலைவரே, அது ஃபீனிக்ஸ் பறவை!''

-  கே.ஆனந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு