Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

''அந்த ஐ.டி கம்பெனியில் ஆள் எடுக்கிறாங்களாம்... போய்ப் பார்த்தியா?''

 ''ம்... அவங்க ஆள் எடுக்கிறது வெளியே இருந்து இல்லை, உள்ளே இருந்து!''

- வி.சாரதி டேச்சு

ஜோக்ஸ் - 3

''தலைவரை திடீர்னு போலீஸ் கைதுசெஞ்சு கூட்டிட்டுப் போறாங்களே... என்ன விஷயம்?''

'' 'தனித்துப் போட்டியிடுவோம்’னு தலைவர் அறிவிச்சதுக்கு, 'தற்கொலை முயற்சி’னு கைது பண்ணிட்டாங்க!''

- அப்துல்

ஜோக்ஸ் - 3

'இந்தப் படத்தை ரெண்டரை மணி நேரத்துல எப்படி எடுத்தீங்க?'

'தியேட்டர்ல ஓடறப்ப..!'

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 3

'என்னது, எக்ஸ்ரேவுல ரெண்டு எலும்புக்கூடுகள் தெரியுது?'

'செல்ஃபினு நினைச்சு என் மனைவியும் சேர்ந்து நின்னுட்டா டாக்டர்!'

- எஸ்கா