Published:Updated:

“இந்த ‘ரெளடி’யைத்தான் காதலிக்கிறேன்!”

ம.கா.செந்தில்குமார்

''ஹீரோயினுக்கு ஒரு பிரச்னை... அதைச் சமாளிக்க தைரியமான ஒரு ஆள் தேவை. அந்தத் தைரியமான ஆளா ஹீரோவை நம்புறாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பெரிய விஷயத்தை பண்ணி முடிக்கணும். அதைச் செய்ய ஹீரோவுக்கு இருக்கிற ஒரே தூண்டுதல், ஹீரோயின் மேல இருக்கிற காதல். காதலுக்காக அவன் எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போவான்? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அப்படி என்ன பண்ணினாங்க? அதை நிறைய காதலும் நிறைய காமெடியும் சேர்ந்து சொல்றோம்!'' - தனுஷ் தயாரிப்பு, அனிருத் இசை, விஜய் சேதுபதி-நயன்தாரா காம்பினேஷன் என 'நானும் ROWDY தான்’ படத்துக்கு ஏரியாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பைப் பற்றவைத்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

''நயன்தாராதான் இந்த புராஜெக்ட்டுக்குள்ள முதல்ல வந்தாங்க. அவங்களைக் கூட்டிட்டு வந்தது தனுஷ் சார். என் முதல் படம் 'போடா போடி’ பார்த்துட்டு விஜய் சேதுபதி, 'சார்... நான் 'பீட்சா’ பட ஹீரோ. பேர் விஜய் சேதுபதி. ஒரு சினிமா ரசிகனா எனக்கு உங்க படம் ரொம்பப் பிடிச்சிருந்தது’னு சொன்னார். அப்ப இருந்தே அவர் என் நலம் விரும்பி. அவர்கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடியே,  'பண்ணிடுவோம் விக்கி’னு கமிட் ஆகிட்டார்!''

 “இந்த ‘ரெளடி’யைத்தான் காதலிக்கிறேன்!”

''விஜய் சேதுபதிக்கு தாடிதான் அடையாளமே... அதை எப்படி எடுக்கச் சம்மதிச்சார்?''

''அவர் எங்கே சம்மதிச்சார்? நாங்கதான் முதல் பார்வையே ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு சொல்லி சலூன் சேர்ல உட்காரவெச்சோம்.  கத்தியை அவர் தாடியில் வைக்கும்போதுகூட, 'ஷேவ் பண்ண பிறகு இன்னும் மோசமா இருந்தா என்ன பண்ணுவீங்க விக்கி? 'நானும் ROWDY  தான்’னு சொல்றோம். கொஞ்சம் மாஸா எதிர்பார்ப்பாங்க. மீசை, தாடி இல்லாம அமுல் பேபி மாதிரி இருந்தா நல்லா இருக்குமா? இப்பக்கூட ஒண்ணும் மோசம் போகலை. மீசை-தாடி போயிட்டா வராது விக்கி’னு சொல்லிட்டே இருந்தார். அப்புறம்  நான்-வெஜ் சாப்பிடவிடாம டயட் இருக்கவெச்சு செம ஸ்லிம் அண்ட் ட்ரிம்மா ஆளை மாத்திட்டோம்!''

 “இந்த ‘ரெளடி’யைத்தான் காதலிக்கிறேன்!”

''படத்துல நயன்தாராவுக்கு என்ன சவால்?''

'' 'விஜய் சேதுபதி நடிக்கிறார்’னு சொன்னதும் அவங்களுக்கு புராஜெக்ட் மேல இன்னும் நம்பிக்கை வந்திருச்சு. 'வுமன் லுக்ல இருந்து கேர்ள் லுக்குக்கு மாறணும்’னு சொன்னேன். அதுல இருந்து காதம்பரி கேரக்டராவே மாறிட்டாங்க. படத்துல அவங்களுக்கு காது கேட்காத கேரக்டர். ஆனா, பேசுவாங்க. மத்தவங்க பேசுறதை 'லிப் ரீட்’ பண்ணி  பதில் சொல்வாங்க. அதுக்குப் பயிற்சியெடுத்து இப்போ இயல்பாவே 'லிப் ரீடிங்’ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி எந்தச் சவால் கொடுத்தாலும், 'கொடுங்கடா டேய்...’னு கேட்டு வாங்கி அசத்திருவாங்க!''

 “இந்த ‘ரெளடி’யைத்தான் காதலிக்கிறேன்!”

''உங்க ஹீரோயினை விட்டுக்கொடுக்காம நீங்க பேசுறீங்க. ஆனா, நீங்களும் நயன்தாராவும் லவ்ல இருக்கீங்கனு வர்ற செய்தியை ரெண்டு பேருமே மறுக்கலையே... என்ன விஷயம்?''  

 “இந்த ‘ரெளடி’யைத்தான் காதலிக்கிறேன்!”

''சார்... அதுலாம் ரொம்ப பெர்சனல் விஷயம். நான் எது சொன்னாலும் அது இந்தப் படத்தையே பாதிக்கும். இப்போதைக்கு என் காதல் இந்தப் படம் மேல மட்டும்தான். எதையும் விசாரிக்காம, உண்மையானு தெரிஞ்சுக்காம பரப்பிடுறாங்க. எது உண்மையோ அதைப் பத்தி யாரும் பேசவோ, எழுதவோ மாட்டேங்கிறாங்க. இப்படி எல்லாம் செய்தி வந்தா, 'இந்தப் பையனை நம்பி படம் கொடுத்தா, கூத்தடிச்சுட்டு இருக்கானே’னு என்னைப் பத்தி நினைக்க மாட்டாங்களா? என் பேர் சந்தோஷ்சிவன் மாதிரி 'சிவன்’னு முடியிறதால, நானும் அவரைப் போல மலையாளினு பரப்புறாங்க. நம்புங்க... நான் பக்கா மதுரை பையன். அங்கே ஜெய்ஹிந்த்புரம்தான் நம்ம ப்ளே கிரவுண்டு. இப்போதைக்கு சினிமா மேல மட்டும்தான் நம்ம காதல் எல்லாம்!''