Published:Updated:

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

Published:Updated:
##~##
யக்குநர் வரிசையில் ஷங்கர், கே.வி.ஆனந்த் தொடங்கி அறிமுக இயக்குநர்கள் வரை... ஹீரோயின்களில் ஸ்ரேயா, திவ்யா ஸ்பந்தனா தொடங்கி கார்த்திகா, தப்ஸி வரையிலான அறிமுகங்கள் வரை என... ஜீவா காட்டில் இப்போது சிரபுஞ்சி மழை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெரிய ஹீரோக்களே தட்டுத் தடுமாறும்போது, அடுத்தடுத்து 'சரசர’ன்னு உங்க படங்கள்தான் ரிலீஸுக்குக் காத்துட்டு இருக்கு. எப்படி இந்த சாமர்த்தியம் கைவந்தது?''

''ரொம்ப சிம்பிள் சார். இனிமேல் பண்ற ஒவ்வொரு சினிமா வும், ஏற்கெனவே செய்த படமா இல்லாம பார்த்துக்கணும்.அவ்வளவுதான்! என் கேரியர் கிராஃப் ரொம்பவே நிதானமானது. அழுத்தமான நடிகன்னு அமீர், ஜனநாதன், ராம் படங்களில் பேர் கிடைச்சது. 'எது சரி... எது தப்பு’ன்னு ஓரளவு புரிகிற பக்குவம் வந்திருக்கு இப்போ. நாம என்ன செஞ்சாலும்ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்னு எல்லாத்திலும் வாங்கு வாங்குன்னு வாங்கிடுறாங்க. சுளீர்னு உறைக்கிற மாதிரியான சில விமர்சனங்களும் அதில் இருக்கு. இப்போ நான் நடிக்கிற 'கோ’, 'த்ரீ இடியட்ஸ்’, 'சிங்கம்புலி’, 'ரௌத்திரம்’ 'வந்தான் வென்றான்’ எல்லாமே ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத படங்கள். இனிமேல் இப்படி அமைச்சுக்கிட்டாதான் நிலைச்சு நிற்க முடியும். கொஞ்ச மும் யோசிக்காமல், பெரிய பெரிய படங்களைக்கூட தூக்கிக் கடாசிடுறாங்க ரசிகர்கள். ரசிகனுக்குத் தவிர்க்காம, தயங்காம முதல் மரியாதை கொடுக்க வேண்டிய காலம் இது!''

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

'' 'கோ’ படத்தில் சிம்பு நடிச்சிருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் உங்களுக்குக் கிடைச்சது வாய்ப்பு. எதிர்பார்ப்பைச் சமாளிச்சுட்டீங்களா?''

''சூப்பர் தமாஷ் கேள்விங்க! கமல், விக்ரம் மாதிரி பெர்ஃபார்மன்ஸ் நடிகர்கள் நடிக்க இருந்து, நான் நடிக்க வேண்டி வந்தால் பயப்படலாம். ரொம்பவே நடுக்கம் இருக்கும். சிம்புவும் என் பிளாட்ஃபார்ம்ல இருக்குற ஒரு நடிகர்தானே. இதில் என்ன பயம், டென்ஷன் இருக்கு. நான் எந்தக் குறையும் வைக்காமல் நடிச்சிருக்குறதா யூனிட்ல சொன்னாங்க. படம் பார்த்துட்டு நீங்களும் அதைத்தான் சொல்வீங்க!''

''நீங்க, ஆர்யா, 'ஜெயம்’ரவிலாம் 'நண்பேன்டா’ நண்பர்களாமே... எப்படி சாத்தியம் இந்த இண்டஸ்ட்ரியில்?''

''முதல் பார்வையிலேயே மலர்ந்து சிரிச்சு நண்பன் ஆனவர் ஆர்யா.  துளி கர்வம் கிடையாது. 'மச்சான் பின்னிட்ட’னு மனசு விட்டுப் பாராட்டுற கேரக்டர். 'ஜெயம்’ ரவியின் பாச மழைக்கு பத்து குடை பிடிச்சாலும் தாங்காது.  'இன்னும்  செஞ்சுருக்கலாம்!’னு ஒருத்தருக்கு ஒருத்தர் குறை நிறை சொல்லி, அன்பைப் பகிர்ந்துக்கு வோம். 'அவன் நம்மகிட்ட பேசட்டுமே’னு சினிமா ஈகோ பார்த்துட்டு நின்னா, அங்கே ஃப்ரெண்ட்'ஷிப் கவுந்துரும். அது எங்ககிட்ட இல்லவே இல்லை.

சீக்கிரமே ஆர்யாவுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிடலாம்னு பார்த்தா, சிக்க மாட்டேங்குறார் ஆர்யா. 'நீங்க ரெண்டு பேரும் படுற கஷ்டம் பார்த்தும் நான் சிக்கிக்குவேனா’ன்னு டபாய்ச்சுட்டே இருக்காரு. சீக்கிரமே அவருக்கும் ஆப்பு கன்ஃபர்ம்!''

ஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்!

'' 'த்ரீ இடியட்ஸி’ல் முதல் இடியட் ஆக இடம் பிடிச்சிட்டீங்களே?''

''முதல் ஆளாக அட்டென்டன்ஸ் கொடுத்ததால் இந்தியில் ஷர்மான் ஜோஷி பண்ண கேரக்டரை நான் கேட்டு வாங்கிக்கிட்டேன். கொஞ்ச நேரம்தான் வர்ற மாதிரி இருக்கும். ஆனா, நிறைவா இருக்கும். ஷங்கர் சாரை ரெண்டு தடவை சந்திச்சேன். 'இந்தியப் பிரபல இயக்குநர்’னு ஒரு சின்ன செய்கைகூட இல்லை அவர்கிட்ட. ஸ்ரீகாந்த் ஒரு பார்ட்னர். இன்னொருத்தர் சூர்யான்னு சொல்றாங்க. யார் வந்தாலும் வெல்கம் பாஸ்!''