
''என்ன தலைவரே, 'முடியட்டும்... விடியட்டும்’னு ராத்திரி 12 மணிக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் போட்டு இருக்கீங்க?''
''என் பொண்டாட்டியோட சண்டைய்யா!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- ப.நரசிம்மன்

''நமக்கு நாமே!''
''யூ மீன் செல்ஃபி?''
- அ.ரியாஸ்

'தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்?'
' 'கழகத்தின் அடிதாங்கியே வருக’னு எவனோ போஸ்டர் போட்டிருக்கான்!'
- சே.வெங்கடசுப்ரமணியன்

'அப்புக்குட்டி, ஷாம்லி ஆகியோரைத் தொடர்ந்து எங்கள் தலைவரையும் போட்டோஷூட் எடுக்குமாறு தல அஜித் அவர்களை வற்புறுத்திச் சம்மதிக்கவைப்போம் என்பதை...'
- எஸ்கா