
''கடைசி நேர ஏமாற்றத்தைத் தாங்கக்கூடிய இதயம் எங்கள் தலைவருக்கு இல்லை என்பதால், தயவுசெய்து இப்போதே சொல்லுங்கள்... 2016-ல் தலைவரை முதலமைச்சர் ஆக்குவீர்களா... மாட்டீர்களா?''
- பா.மனோகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கமிஷனர் ஆபீஸுக்கு வெளியே தலைவர் யாருக்காக வெயிட் பண்றார்?''
''விஷால் வந்து மனு கொடுத்தமாதிரி நயன்தாரா, ஹன்சிகா யாராவது வருவாங்களானு பார்க்கிறார்!''
- அம்பைதேவா

'உங்களைத்தான் கலாய்க்கிறாங்கனு பார்த்தா, இப்போ உங்க புள்ளைங்க நாலு பேரையும் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க தலைவரே?'
'என்னன்னு?'
' 'நாலும் ரௌடிதான்’னு'
- புதுவண்டி ரவீந்திரன்

'நான் என்ன சாப்பிடணும்னு மத்தவங்க தீர்மானிக்க முடியாது!''
'ஜெயில்ல எல்லாம் இந்த வியாக்கியானம்
பேசக் கூடாது... போட்டதைச் சாப்பிடுங்க தலைவரே!''
- வீ.விஷ்ணுகுமார்