Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: மகேஷ்

ஜோக்ஸ் - 2

'நீ செஞ்ச தீபாவளி பலகாரத்தை யாரும் சாப்பிடலங்கிறதுக்காக, அதை OLX -ல எல்லாம் விக்க முடியாது!'' 

எம்.விக்னேஷ்

ஜோக்ஸ் - 2

'தலைவரே, உங்களுக்குப் போடுற பட்டம் எல்லாம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெச்சது. அதை எல்லாம் மத்திய அரசு விருது மாதிரி திருப்பிக்கொடுக்க முடியாது!'

- எஸ்கா

ஜோக்ஸ் - 2

''ஒரு கோடி கையெழுத்து திரட்டணும்யா!''

''அதெல்லாம் திரட்டலாம் தலைவரே! முதல்ல பத்தரை மணிக்குள்ள போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்திருவோம்!''

- விகடபாரதி

ஜோக்ஸ் - 2

'சகட்டு மேனிக்கு விருதைத் திருப்பிக் கொடுக்கிறீர்களே... எங்கள் தலைவர் மாதிரி நாயா பேயா அலைஞ்சு விருதை 'வாங்கி’ இருந்தால் உங்களுக்கு அதன் மதிப்பு தெரிந்திருக்கும்!'

- கே.லக்ஷ்மணன்