Published:Updated:

"10 எண்றதுக்குள்ள" - சினிமா விமர்சனம்

"10 எண்றதுக்குள்ள" - சினிமா விமர்சனம்

"10 எண்றதுக்குள்ள" - சினிமா விமர்சனம்

ந்த தில் சவாலையும் '10 எண்றதுக்குள்ள’ தூள் தூளாக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர் பையா’ விக்ரம்.

விக்ரம் கடத்திச் செல்லும் ஒரு காரில் சமந்தா இருக்கிறார். ஏன்? தெரியாது. அந்தப் பயணத்தில் தான் காதல்கொள்ளும் சமந்தாவை, அவரே வில்லன் கையில் சேர்க்கிறார். ஏன்? தெரியாது. அந்த வட இந்திய வில்லன் சமந்தாவைக் காவுகொடுக்க முயற்சிக்கிறார். ஏன்? தெரியாது. இத்தனை 'தெரியாது’களுக்கும் விடை கண்டுபிடித்து, '10 எண்றதுக்குள்ள’ சிக்கல் தீர்க்க வேண்டும் விக்ரம்!

ரேஸ் சேஸ் டிரைவர் விக்ரம், சேட்டை பியூட்டி சமந்தா, வட இந்திய சாதிக் கொடுமை, திடுக் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என 'ரோடு மூவி’க்கான ரூட்மேப் கச்சிதம். ஆனால், ஜன்னலோரப் பயண சுவாரஸ்யம் ஏனோ மிஸ்ஸிங்!

"10 எண்றதுக்குள்ள" - சினிமா விமர்சனம்

விக்ரம் வழக்கம்போல மிஸ்டர் பர்ஃபெக்ட்! 'பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’, 'ரத்னம்... மணிரத்னம்’ என உட்டாலக்கடி பெயர்களுடன் டகால்டி வேலை பார்ப்பதாகட்டும், சமந்தாவைக் கடுப்பாக 'சனியன்’ என அதட்டுவதும் பின்னர் கனிவாக பனியனுக்குள் புதைத்துக் கொள்வதுமாக செம ஸ்மார்ட். 'ஷகிலா’ கிளாமரும் 'சரளா’ கிராமருமாகக் கிறுகிறுக்கிறார் சமந்தா. 'நான் காட்ட மாட்டேனா... ஏன் எட்டிப் பார்க்கிற?’ என எகிறும் இடத்தில் தமிழ் ஹீரோயின்களின் கவர்ச்சி எல்லையும் எகிறுகிறது! உறுமும் இருமும் வில்லன்களுக்கு மத்தியில் கிச்சுகிச்சு வில்லனாக ஈர்க்கிறார் பசுபதி.

எந்த கலாட்டாவுக்கும் இடம்கொடுக்கும் கேன்வாஸ் பிடித்த இயக்குநர் விஜய் மில்டன், இதில்

"10 எண்றதுக்குள்ள" - சினிமா விமர்சனம்

எந்த மேஜிக்கும் நிகழ்த்தாதது ஏனோ? இடைவேளைக்குப் பிறகு பரபரக்க வேண்டிய கதை... தீபாவளி சீஸன் தாம்பரம் டிராஃபிக்கில் சிக்கிய ஆம்னி பஸ் கணக்காக தட்டுத் தடுமாறுகிறது. டான் வில்லன் கதை முடிந்த பிறகு மாஸ்டர் வில்லன் அத்தியாயம் தொடங்கி நீள்வது... மிடில!

'ரோடு மூவி’யில் இசைதானே செகண்ட் ஹீரோவாக இருக்க வேண்டும்? ஆனால், இமானுக்கு என்னதான் ஆச்சு? திரைக்கதையில் இல்லாத பரபரப்பை திரையில் பற்றவைக்கிறது பாஸ்கரனின் ஒளிப்பதிவு.

'10 எண்றதுக்குள்ள’ ஹீரோவும் இயக்குநரும் அடுத்த படத்துல ஹிட் அடிச்சிருங்கஜி!

- விகடன் விமர்சனக் குழு