Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

'' 'தேர்தலில் ஜெயித்தால் போதுமா... பருப்பு விலையில் ஒரு ரூபாயாவது உங்களால் குறைக்க முடியுமா?’ என விஷால் அணியினருக்கு சவால்விடுகிறேன்!'' 

''இவர் நமக்கு பாஸா...

இல்ல லூஸா?''

- புதுவண்டி ரவீந்திரன் 

ஜோக்ஸ் - 2

''மன்னர் ஏன் கோபமா இருக்கார்?''

''ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் ஆன்லைன் ஸ்டோர்ஸ்ல 'பதுங்குகுழிக்கு எல்லாம் டெலிவரி செய்ய முடியாது’னு சொல்லி, மன்னரோட ஆர்டரை ரிஜெக்ட் செஞ்சுட்டாங்களாம்!''

- விக்னேஷ்வரி

ஜோக்ஸ் - 2

''கண்டுபிடிச்சுட்டேன் சார்!''

''அக்யூஸ்டு இருக்கிற இடத்தையா?''

''இல்லை, அவன் வாட்ஸ்அப் நம்பரை!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 2

''தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு!''

''நிஜமாவா சொல்றே?''

'' ஆமாம், 'நாட்டுல சட்டம்ஒழுங்கு செத்துப்போச்சு’னு சொன்னதுக்கே

அழ ஆரம்பிச்சுட்டார் பார்!''

- வி.சாரதி டேச்சு