Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 3

'' 'வெற்றிக் கூட்டணி அமைக்கப்போகிறேன்’ எனச் சொல்லிவிட்டு, இப்படி ஒரு 'வெட்டிக் கூட்டணி’யை அமைத்திருக்கும் தலைவர் அவர்களே..!''

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ் - 3

'' கால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாவிட்டாலும் பெரிய 'பருப்பு’ மாதிரி

மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர் அவர்களே..!''

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ் - 3

''18வது வட்டம் சார்பாக, தலைவருக்கு பட்டாசு மாலை அணிவிக்கிறேன்!''

''27வது வட்டம் சார்பாக, அதை நான் பற்றவைக்கிறேன்!''

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 3

'' 'நான்தான் கூட்டணிக்குத் தலைமை வகிப்பேன்’ என எங்கள் தலைவர் கூறியதற்கு, 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ எனக் கிண்டல் செய்த சக கூட்டணித் தலைவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!''

- வி.சகிதாமுருகன்