Published:Updated:

ஸ்டார் க்ளிக்ஸ்!

கார்க்கிபவா, படங்கள்: ஜி.வெங்கட்ராம்

போட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம்... கலைஞர்களைக் கொண்டாடும் கலைஞன்... கலைஞர்களே

ஸ்டார் க்ளிக்ஸ்!

கொண்டாடும் கலைஞன்! அவருடைய க்ளிக் கலெக்ஷன்களில் இருந்து சில சமீப மாஸ்டர்பீஸ் க்ளிக்ஸ் இங்கே...

''என் வாழ்க்கையை டாக்குமென்ட்ரியா எடுக்கிறேன்னு இதுக்கு முன்னாடி நிறையப் பேர் கேட்டாங்க; மறுத்துட்டேன். ஆனா, ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு, 'என் வாழ்க்கை சிலருக்கு இன்ஸ்பிரேஷனா அமையலாம்’னு தோணுச்சு. அதான் இப்போ ஓ.கே சொன்னேன்'' என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அமீர் கான், மணிரத்னம், சுபாஷ் கை என ரஹ்மானோடு பணிபுரிந்த பல இந்தியப் பிரபலங்கள் இடம்பெறும் 'ஜெய் ஹோ’ என்கிற இந்த 90 நிமிட டாக்குமென்ட்ரியை உருவாக்கியிருப்பவர் உமேஷ் அகர்வால். ''என்னால் என்னை ஸ்கிரீன்ல பார்க்க முடியாது. அதனால் நான் அந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன்'' எனச் சிரிக்கிறார்  ஏ.ஆர்.ரஹ்மான்! 

ஸ்டார் க்ளிக்ஸ்!

விளம்பரப் பட நடிப்பிலும் லைக்ஸ் குவிப்பது... கமல் ஸ்டைல்! தீபாவளி ஸ்பெஷல் 'ஒன் டேக்’ விளம்பரத்தில் நடந்துகொண்டே சின்னச் சின்ன ரியாக்ஷன்களிலும் செம ஸ்கோர் அடித்திருப்பவர், அடுத்து மலையாள இயக்குநர் ராஜீவ் குமாரின் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

ஸ்டார் க்ளிக்ஸ்!

26 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் குமார் இயக்கிய முதல் படமான 'சாணக்யன்’ பட ஹீரோ கமல்தான். அந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தவர் ஜெயராம். இப்போது மீண்டும் அதே கூட்டணி கைகோக்கவிருக்கிறது!

விஜய்யின் அடுத்த புராஜெக்ட் என்ன? எஸ்.ஜே.சூர்யாவுடன் 'குஷி பார்ட் 2’-வுக்கான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடக்க, மறுபக்கம் சசிகுமார் ஒரு ஸ்கிரிப்டுடன் தயாராக இருக்கிறாராம். அதோடு விஜய் முன்னர் ஓ.கே செய்த ஒன்லைனை வெங்கட் பிரபுவும், பட்டைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் நடுவில் மோகன் ராஜாவிடம் 'தனி ஒருவன்’ பாணியில் ஒரு கதை தயார்செய்யச் சொல்லியிருக்கிறாராம் விஜய். இதில் எது முதலில் 'டேக் ஆஃப்’ ஆகும் என்பது விஜய்க்கே தெரியாத ரகசியம்!

ஸ்டார் க்ளிக்ஸ்!
ஸ்டார் க்ளிக்ஸ்!

கோலிவுட்டில் இந்த ஆண்டு அதிகபட்ச ஹிட்டடித்தது நயன்தாரா. 'உன் கரியரின் 'கோல்டன் ஹவர்’ல இருக்க. இந்தச் சமயம்தான் 'அடுத்து என்ன?’னு தீர்க்கமா முடிவெடுக்கணும். பெர்சனல் லைஃப் பற்றி எதுவும் ஐடியா இருந்தால், இப்பவே ஒரு டார்கெட் வெச்சுக்க’ என நெருக்கமானவர்கள் நயனுக்கு ஐடியா சொல்கிறார்களாம். ஆனால் அழகி, மம்மூட்டியுடன் நடிக்கும் மலையாளப் படத்துக்கான கதகளி பயிற்சியில் பிஸி!

ஸ்டார் க்ளிக்ஸ்!

சீனியர் ஹீரோயின்கள் ரீஎன்ட்ரி கொடுக்கும்போது, 'எனக்கு நடனம் மட்டும் போதும்’ என அமைதியாக இருக்கிறார் ஷோபனா. 'எல்லா மாதிரியான ரோலும் நடிச்சுட்டேன். இப்போ எனக்கு வர்ற வாய்ப்புகளைப் பார்த்துட்டுத்தான் அதிகம் நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணேன். இம்ப்ரஸ் பண்ற மாதிரி கேரக்டர் கிடைச்சா நடிக்கலாம்’ என்பவரின் நடனப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடனம் கற்றுவருகிறார்கள். அங்கேயும் தனது முன்னாள் மாணவர்களைப் பிரதான பயிற்றுநர்கள் ஆக்கிவிட்டு, தனது மகளுடன் அதிக நேரம் செலவழித்துவருகிறார் ஷோ.

ஸ்டார் க்ளிக்ஸ்!

நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகன் அகில் ஏற்கெனவே விளம்பரப் படங்கள் மூலம் இந்தியா முழுவதுமே பிரபலம். இப்போது அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், அவர் பெயரிலேயே தயாராகி வருகிறது. அதில் ஒரு பாட்டுக்கு நாகார்ஜுனாவும், அவரது முதல் மகன் நாக சைதன்யாவும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். ஆனாலும், 'முதல் பட ரிசல்ட் எப்படி இருக்குமோ?’ என்ற டென்ஷனில் காத்திருக்கும் அகிலுக்கு, ரிலாக்ஸ் ஏரியா ட்விட்டர்தான். ஏனென்றால், முதல் படம் வெளிவருவதற்கு முன்னரே தம்பிக்கு ஏராளமான பெண் ரசிகைகள் கிடைத்திருக்கிறார்கள்!  

ஸ்டார் க்ளிக்ஸ்!

'பாபநாசம்’, கௌதமிக்கு ஏக உற்சாகம். 25 ஆண்டுகள் கழித்து மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்னும் வசீகரமாகிவிட்டவர், இப்போது மோகன்லாலுக்கு சவால் கொடுக்க, ஹோம்வொர்க்கில் தீவிரம் காட்டுகிறார்!

ஸ்டார் க்ளிக்ஸ்!

இசைக் கல்லூரியில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்ற 'டிரம்ஸ்’ சிவமணியின் பல வருடக் கனவு நிறைவேறியிருக்கிறது. அமெரிக்கா, பாஸ்டன் நகரில் உள்ள பிரசித்திபெற்ற பெர்க்லி இசைக் கல்லுரியில்  மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றுள்ளார் சிவமணி. ''என் அடுத்த டார்கெட்... 'குருகுலம் அகாடமி’. அதன் மூலம் இசை ஆர்வம்கொண்ட குழந்தைளுக்கு டிரம்ஸ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான திட்டங்களும் ரெடி'' என்கிறார் ரிதம் ஹீரோ!

ஸ்டார் க்ளிக்ஸ்!

''நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் தொடர்ந்து விருதுகள் ஜெயிச்சுட்டு இருந்தேன். எல்லாம் நல்லபடியா இருக்கிற மாதிரி இருந்தாலும், அப்பதான் என் மனசு ரொம்ப சோர்வா இருந்துச்சு. பாட்டு பாடுற வரை சந்தோஷமா இருப்பேன். ரிக்கார்டிங் முடிஞ்சதும் சந்தோஷமும் ஓவர். அப்ப என்னை நானே ரீசார்ஜ் பண்ணிக்கணும்னு தோணுச்சு. அதான் பாடுறது தவிர பல விஷயங்கள் பண்ண ஆரம்பிச்சேன். மியூஸிக் பண்றது அதுல ஒரு விஷயம்தான். இன்னும் நிறைய வாழணும்!'' என்று புன்னைக்கிறார் கார்த்தி.  

ஸ்டார் க்ளிக்ஸ்!

தலை தீபாவளி கொண்டாட்டக் குஷியில் இருக்கிறது தீபிகா-தினேஷ் ஜோடி. அதற்கு எக்ஸ்ட்ரா டோஸ் உற்சாகம் கொடுத்திருக்கிறது இரு சம்பவங்கள். யூ.எஸ் ஓப்பன் ஸ்குவாஷ் போட்டியில் கால் இறுதி வரை தீபிகா முன்னேறியிருக்கிறார். இதுவரை இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் யாருமே அதுவரை முன்னேறியது இல்லை. மறுபுறம் தினேஷ் கார்த்திக் ரஞ்சிப் போட்டியில் சதம் அடித்திருக்கிறார். 'ஹேப்பி... ஹேப்பி தீபாவளி’ கொண்டாடவிருக்கிறார்கள் இந்தச் சந்தோஷத் தம்பதி!