Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 5

''எங்கள் ஆட்சியில் தேவதைகளாக வலம்வந்த அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாராக்களை பேய்களாகக் காட்டிய இந்த ஆட்சி தேவைதானா... யோசியுங்கள் மக்களே!'' 

- 'எவரெஸ்ட்’ பூபதி

ஜோக்ஸ் - 5

'' 'ஊரில் இருந்து வெறும் கையுடன் வந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்று தினமும் பருப்பு சாம்பார் சாப்பிடும் அளவுக்கு வசதி எப்படி வந்தது?’ எனக் கேட்க விரும்புகிறேன்!''

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ் - 5

''முதலமைச்சர் வேட்பாளர்களை பெரிய கட்சிகள் அறிவித்துவிட்டபடியால்... எங்கள் தலைவரை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை...''

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 5

''தலைவர் ஏன் கோபமா இருக்கார்?''

'' 'அவசரமாக கட்சி மாற, அணுகவேண்டிய தொலைபேசி எண்’னு அவர் ரூம்ல யாரோ எழுதிப்போட்டிருக்காங்க!''

- அம்பைதேவா