Published:Updated:

ஷாப்பிங் தீபாவளி!

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன், படங்கள்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

ஷாப்பிங் தீபாவளி!

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன், படங்கள்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

Published:Updated:

ஸ்டார்களுக்கு தினம் தினம் தீபாவளிதான். இந்தத் தீபாவளிக்கு இவர்களிடம் என்ன ஸ்பெஷல்?

ரேஷ்மி மேனன் (நடிகை) 

'நான் கேரளா பொண்ணு. இருந்தாலும்  தீபாவளி எனக்கு எப்பவும் ஸ்பெஷல்தான். ரெண்டு வாரத்துக்கு முன்னாலயே அம்மா, அக்கா, நான் மூணு பேரும் ஷாப்பிங் ஆரம்பிச்சுடுவோம். ஜீன்ஸ், டி-ஷர்ட், தாவணி, சல்வார், சேலைனு வெரைட்டியா பார்த்துப் பார்த்து வாங்குவோம். பட்டாசு வாங்குறது அப்பா ஏரியா. நானும் அக்காவும் 'எனக்கு இதெல்லாம் வேணும்’னு போட்டி போட்டு லிஸ்ட் தருவோம். அப்பா அப்படியே வாங்கிட்டு வந்திடுவார். எங்க வீட்டுல ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறோம். எங்க செல்லம் அது. அதுக்கு வெடி வெடிச்சா பிடிக்காது. அதனால சங்கு சக்கரம், புஸ்வாணம் மாதிரி வெடிகள்தான் வாங்குவோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷாப்பிங் தீபாவளி!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிற படத்தை அன்னைக்கே ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து விசில் அடிச்சு செம ஜாலியா பார்ப்போம். இந்த வருஷம் தீபாவளிக்கு ஏதாவது ஒரு தியேட்டர்ல 'வேதாளம்’ ஷோவில் என்னைப் பார்க்கலாம். ஓப்பனிங் ஷோவுல 'தல’ படத்தை விசில் அடிச்சுப் பார்க்கணும்னு ப்ளான்' என சியர்ஸ் காட்டுகிறார்.

ஆனந்தி (நடிகை)

ஷாப்பிங் தீபாவளி!

''தீபாவளி மட்டுமா, எல்லா பண்டிகைகளையும் திருவிழாக்களையும் எங்க வீட்டுல தடபுடலா கொண்டாடுவோம். எல்லா சொந்தக்காரங்களும் வீட்டுக்கு வருவாங்க. இந்தத் தீபாவளிக்கு என்ன வாங்குறதுனு இன்னும் முடிவுபண்ணலை. ஆனா, தங்கச்சிக்கு அழகான ஒரு டிரெஸ் வாங்கிக் கொடுக்கலாம்னு யோசிச்சிருக்கேன். அவளுக்கு விதவிதமா டிரெஸ் பண்ண ரொம்பப் பிடிக்கும். தீபாவளினா பட்டாசு, ஸ்வீட்ஸ்தானே... இது ரெண்டும் வீட்டுல குவியும். வீட்லயே ஸ்வீட்ஸ் செய்வோம். அம்மாகிட்ட 'நானும் ஸ்வீட் செய்வேன்’னு சொல்லி அடம்பிடிச்சுக் கத்துகிட்டேன். அந்த ஸ்வீட்டை ஆந்திராவுல 'பொப்பட்லு’னு சொல்வாங்க. அதுதான் இங்க போளி!''

சக்திஸ்ரீ கோபாலன் (பின்னணிப் பாடகி)

ஷாப்பிங் தீபாவளி!

''கொச்சியில் இருக்கும்போதும் சரி, சென்னை வந்த பிறகும் சரி... தீபாவளினாலே ஹேப்பிதான். நான், பாட்டி, அம்மா மூணு பேரும் சேர்ந்து குலோப்ஜாமூன், ஜிலேபினு தினமும் ஒரு ஸ்வீட் செய்வோம். அப்பாவும் அண்ணனும் பண்டல், பண்டலா பட்டாசு வாங்கி வெடிப்பாங்க. எனக்கு சங்குச்சக்கரமே ஜாஸ்தி தருவாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு காலி இடம் இருக்கு. அதுல சின்ன வாண்டுங்க எல்லாம் போட்டி போட்டு வெடி வெடிப்பாங்க. அதை வேடிக்கை பார்க்கிறதுதான் எனக்குப் பொழுதுபோக்கு. இந்த வருஷம் தீபாவளி எனக்கு  கலிஃபோர்னியாவில். அங்கேதான் டிரெஸ் எடுக்கப்போறேன். மாடர்ன் டிரெஸ், சுடிதார் வாங்கணும்னு ஆசை. அப்புறம் தீபாவளி அன்னிக்கு அங்குள்ள தமிழர்களுக்காக ஒரு ஷோவில் பாடப்போறேன். இந்தத் தீபாவளிக்கு செம கச்சேரி இருக்கு'' எனக் குதூகலக் குரலில் சொல்கிறார்.

ஷஷா த்ருப்தி (பின்னணிப் பாடகி)

ஷாப்பிங் தீபாவளி!

''எனக்கு எப்பவும் ஷாப்பிங்ல ஆர்வம் இல்லை. தீபாவளி மட்டும் இல்ல, எந்தப் பண்டிகை வந்தாலும், அது எனக்கு நினைவுபடுத்துறது ஒண்ணே ஒண்ணுதான். இப்போ நாம ஒரு நல்ல நிலைமையில் இருக்கோம். கடவுள் அந்த இடத்தில் நம்மை வெச்சிருக்கார். இதுக்கு நாம எவ்வளவு அதிர்ஷ்டமானவங்களா இருக்கணும். இந்த இடத்தில் இருக்கோம்னா, கண்டிப்பா நம்மளால இன்னொருத்தருக்கு உதவ முடியும். அதனால, எப்பவும் சின்னதோ பெருசோ என்னால முடிஞ்ச உதவியை மற்றவங்களுக்கு செஞ்சுக்கிட்டே இருப்பேன். அந்த வகையில் இந்தத் தீபாவளிக்கும் ஏதாவது ஒருவிதத்தில் உதவி செய்யலாம்னு இருக்கேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism