Published:Updated:

"கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

ஆ.விஜயானந்த், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

"கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

ஆ.விஜயானந்த், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

''எங்க காதலுக்கு வயசு 15. ஒரு கேக்கைக் கொடுத்து இவர் என்னைக் கவுத்துட்டார் பாஸ்'' என

 "கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

தன் காதல் கணவர் ஃபெரோஸைப் பார்த்துக் கண்ணடிக்கிற விஜயலட்சுமி, 'பண்டிகை’ படத்தின் மூலம் தன் காதல் கணவருக்காகத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஃபெரோஸ், இயக்குநர் அறிவழகனிடம் சினிமா கற்றவர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ஒருத்தியோட பிறந்த நாள் விழாவுக்கு வந்த ஃபெரோஸ், விழா முடியும் வரைக்கும் ஒரு கேக்கை கையில வெச்சுக்கிட்டு, 'சாப்பிடு சாப்பிடு’னு என்னைத் துரத்திட்டே இருந்தார். எந்தப் பக்கம் திரும்பினாலும் கேக்கும் கையுமா நின்னுக்கிட்டு இருந்தார். கேக் மீது பரிதாபப்பட்டு நான் வாங்கிக்கிட்டேன்'' எனக் கலகலக்கிறார் விஜயலட்சுமி.

'நானாவது கேக்கோடு விஜியைத் துரத்திட்டு இருந்தேன். இன்னொருத்தன் விஜியையே லுக் விட்டுட்டு இருந்தான். எங்கே நம்ம லவ்வுக்கு வில்லனா வந்துடுவானோனு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை' என காதல் கேக் ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் ஃபெரோஸ்.

 "கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

''காதலுக்கு உங்க அப்பா அகத்தியன் உடனே ஓ.கே சொல்லிட்டாரா?''

''இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்'' எனக் கை தூக்கினார் ஃபெரோஸ்... ''எங்க காதல் தெரிஞ்சதும், என்னைக் கூப்பிட்ட இவங்க அப்பா, 'தம்பி... நான் ரொம்பக் கண்டிப்பானவன். என் பொண்ணைப் பத்திரமா பார்த்துக்கணும். வெளியில எல்லாம் ரொம்பச் சுத்தக் கூடாது’னு மிரட்டினார். 'இவ்ளோ டெரரான அப்பாவா?’னு நான் பயந்துட்டேன்.''

'ஹலோ... எங்க அப்பா மிரட்டினாரா? அவரைப் பத்தி இண்டஸ்ட்ரிக்கே தெரியும்'' என விஜயலட்சுமி செல்லக் கோபம் காட்ட, 'அது இல்லம்மா... மகள் பாசத்துல என்கிட்ட அன்பா நடந்துக்கிட்டார்னு சொன்னேன். மத்தபடி அவர் செம ஜாலியானவர்' எனச் சமாளித்தார் ஃபெரோஸ்.

 "கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

''உங்க காதல் சண்டைகள் பற்றி சொல்லுங்க...''

'சண்டை வரலைனா, அது காதலே இல்லை. எனக்குக் கோபம் வந்தா, விஜி அமைதியாகிடுவாங்க. அப்போ அணுகுண்டைக்கூடத் தாங்கிடலாம்... அந்த அமைதியைத் தாங்க முடியாது. ஒருமுறை பெரிய சண்டை வந்தப்போ, அவங்க அப்பாதான் சமாதானம் பண்ணிவெச்சார்'' என்கிறார் ஃபெரோஸ்.

''ஃபெரோஸ் ஸ்பெஷல் என்ன?''

'தமிழ் நல்லா படிப்பார். அவரை நான் டிக் அடிக்கக் காரணம், அவர் படிச்ச தமிழ். தன்னம்பிக்கை அதிகம். அரசியல் விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டு'' என விஜயலட்சுமி சொல்ல, பதிலுக்கு மனைவி புகழ் பாடுகிறார் ஃபெரோஸ்... 'எந்த விஷயத்துக்கும் பெஸ்ட் சொல்யூஷன் சொல்றதுல, விஜிதான் பெஸ்ட்.'

''கல்யாண நேர டென்ஷன் என்ன?

'விஜி இந்து; நான் முஸ்லிம். எங்க கல்யாண நாள் வரைக்கும் ஒரே திகில் படமாத்தான் இருந்தது. எங்க அம்மா இஸ்லாம் மதம் மேல் அதிகப் பற்று கொண்டவங்க. ஆரம்பத்துல அவங்களுக்கு என் காதல் பிடிக்கலை. அப்புறம் ஒப்புக்கிட்டாங்க. நான் இந்து முறையில் கல்யாணம் பண்ணிக்கிட்டது, எங்க மதத்தில் சிலருக்குப் பிடிக்கலை. ஏதேதோ நம்பர்ல இருந்து கூப்பிட்டு மிரட்டினாங்க. தப்புத்தப்பா மெசேஜ் அனுப்பினாங்க. நாங்க ரெண்டு பேரும், ரொம்பப் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதைச் சிலர் புரிஞ்சுக்கலையேனு வருத்தமா இருந்தது.'

 "கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

''விஜயலட்சுமி எந்த விஷயத்துல சரிசெஞ்சுக்கணும்?''

'டைமுக்கு பால் பாக்கெட்டை எடுத்து உள்ளே வைக்கணும். காலை 10 மணிக்கு மேல எடுத்தா, பக்கத்து வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க? 'பால் காய்ச்சி காபி போட வேணாம். எடுத்து உள்ளேயாவது வை’னு கெஞ்சிட்டு இருக்கேன்' என ஃபெரோஸ் நக்கலடிக்க, 'ஹலோ... கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆகுது. இப்பத்தான் வீட்டு வேலைகள் கத்துக்கிட்டு இருக்கேன். ஸோ... கொஞ்சம் லேட் ஆகும்'' என கவுன்ட்டர் கொடுக்கிறார் விஜயலட்சுமி.''

 "கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்!”

''விஜயலட்சுமிகிட்ட நீங்க ரசிக்கிற விஷயம்?''

'நல்லா கவிதை எழுதுவாங்க.'

''ஃபெரோஸை நினைச்சு எழுதின கவிதை ஒண்ணு சொல்லுங்க?''

'' 'காதல் வளர்த்த / ஒரு கர்வக்காரியாகத் திரிகிறேன் / என் நாட்கள் முழுக்க / உன்னை மட்டும் / நிரப்பிக்கொண்டு...’ எனக் கடகடவெனக் கவிதை சொல்ல, ''அடடே ஆச்சர்யக்குறி'' என்கிறார் ஃபெரோஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism