தமிழ் சினிமாவைத் தெறிக்கவிடும் இயக்குநர்கள் பற்றிய பரபர டிரெய்லர் கட் இங்கே...

'' 'இந்தக் கதை ஹிட்டடிக்குமா... அடிக்காதா?’ என்பது அல்ல என் கவலை. 'இதைப் படமாக்கலாம்’ என, அது எனக்குள் தீ மூட்டினாலே போதும். என் பட ஒன்லைன் ரெடி'' என்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் இவருக்கு இரு கண்கள். ''அவற்றில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான கதைகள் எடுக்க முடியும்'' என்கிறார் ராஜமௌலி. 'பாகுபலி’யில் பிரமாண்ட ஹிட்டடித்த இவரின் முதல் படம் 'ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’. இந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்குப் பட வாய்ப்பே இல்லை. எடிட்டிங் உதவியாளர், ஏவி.எம் ஒலிப்பதிவுக்கூட வேலை, சத்யம் தியேட்டரில் தினமும் ஒரு படம்... என உதிர்ந்தன இவரது சென்னை நாட்கள். மோகன்லால் நடிக்க, இவர் இயக்கவிருந்த புராணப் படம் ஒன்று ஆரம்பத்திலேயே டிராப் ஆனது. இவரது 'சிம்ஹாத்ரி’ கதை, முதலில் உருவானது பாலகிருஷ்ணாவுக்காக; நடித்ததோ ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு ராஜமௌலி நிகழ்த்தியவை எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் வைரல் ஹிட் வரலாறு. 'நான் ஈ’ வெற்றி, ஜப்பான் வரை டப்பிங்கில் ரீங்கரிக்க... 'பாகுபலி’ பார்த்த அமிதாப், சல்மான் கான் போன்ற டாப் ஸ்டார்கள் ராஜமௌலி கதையில் நடிக்க லைக்ஸ் சொல்லி கட்டை விரலை உயர்த்தினர். ' 'பாகுபலி’யின் வசனம் மொத்தமே 30 பக்கங்கள்தான்... மீதி எல்லாம் விஷுவல்’ என்பதற்கு ராஜமௌலியின் தன்னிலை விளக்கம்... 'நான் ஒரு விஷுவல் ஸ்டோரி டெல்லர்!’

''என் குடும்பம் நடுத்தரவர்க்கம். ஆனா, நான் பழகின ஆட்கள் எல்லாரும் விளிம்புநிலை மனிதர்கள். இப்ப நான் பென்ஸ் காரில் போனாலும், முன்பு நான் பார்த்த அதே மக்களைத்தான் இப்பவும் பார்க்கிறேன். அவங்களைத்தான் என் கதையில் காட்டுகிறேன்'' - இயக்குநர் பாலாவின் வார்த்தைகள் இவை. 'முரடர்’, 'கோபக்காரர்’ என பாலா பற்றி சுவாரஸ்யப் பேச்சுக்கள் பல வெளியில் உலவலாம். ஆனால், உண்மையில் மிக மென்மையான மனசுக்காரர். 'பரதேசி’ படப்பிடிப்புப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சிறப்பு ஆண் குழந்தையைக் கவனித்த பாலா, அவனை அழைத்து இயக்குநர் இருக்கையில் அமரவைத்து, 'ஆக்ஷன்...’ 'கட்!’ சொல்லவைத்து... படப்பிடிப்பு முடியும் வரை தன் பக்கத்திலேயே வைத்திருந்தார். கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்து கிளம்பியபோது, அந்தக் குழந்தை அழ, பாலாவின் கண்களிலும் நீர்.

தன் குடும்பம் என்றால் பாலாவுக்கு உயிர். தன் மகளுக்கு பாலா குழந்தைபோல. அதர்வா கொடுத்த ஒரு பார்ட்டிக்குக் குடும்பத்தோடு சென்றார் பாலா. அங்கு இருந்த நீச்சல் குளத்தைத் தாண்டிச் சென்றபோது அவரின் மகள், 'பார்த்து வாப்பா... விழுந்திடாத’ எனச் சொல்ல, பாலா சிரித்தபடியே நடந்து வந்திருக்கிறார். 'அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது’ என்பது மகளின் எண்ணம். 'மகள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்’ என்பது பாலாவின் விருப்பம். 'சேது’ பட நாயகனாக முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் முரளி. விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என பிறகு நினைத்தார் பாலா. அதை முரளியிடம் சொல்ல, அவரும் ஒப்புக்கொண்டார். அதனாலேயே முரளி மீது பாலாவுக்குத் தனி மரியாதை. பாலு மகேந்திராவிடம் ஐந்து படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார் பாலா!

'நான் நடிச்சுக் காட்ட மாட்டேன்... சீன் விவரிப்பேன். அதுக்கு உயிர்கொடுக்கிறது நடிகர்கள் கையில்தான் இருக்கு. நாங்க ஒரு குழுவா இருந்து, கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஜீவன் கொடுக்கிறோம்' - இது மணிரத்னத்தின் சினிமா மேக்கிங் ஸ்டேட்மென்ட். 'டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட 'உலகின் சிறந்த 100 படங்கள்’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் சினிமா, மணிரத்னம் இயக்கிய 'நாயகன்’.

'நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்...’ எனச் சொன்னது மணிரத்னம் இயக்கிய 'தளபதி’ படம். நிஜ வாழ்க்கையிலும் மணிரத்னம் அப்படித்தான். சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த புதிய ஆப்பிள் 'ஏர்’ லேப்டாப் அவர் மனதைக் கவர, அதைத் தன் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு வாங்கித் தந்து ஸ்மைலி பூத்திருக்கிறார்.

மழை - ரயில் இரண்டும் மணிரத்னத்தின் இரு கண்கள். இவரின் எல்லா படங்களிலும் அவை இடம்பெற்றுவிடும். எவ்வளவு முக்கியமான விஷயம் பேசினாலும் எழுதினாலும் அப்போது மழை வந்துவிட்டால், அப்படியே ஜன்னல் ஓரம் ஒதுங்கிவிடுவார். ஆனால், 'ஆசைப்பட்டபோது ரயிலில் போய் வரத்தான் முடியலை’ என்பது மணிரத்னம் சிரிப்பின் அளவுக்கு, அவருக்குள் இருக்கும் சின்ன வருத்தம்.

'இருவர்’ பட பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு ஆடிஷன் நடத்தி மணிரத்னம் முதலில் டிக்கடித்தது மாதவன். ஆனால், அப்போதைய இளம் மாதவன் அந்தக் கேரக்டருக்குப் பொருந்தவில்லை. பிறகு, 'இருவர்’ பட நடிப்பில் பிரகாஷ்ராஜ் தட்டியது தேசிய விருது.

தமிழ் சினிமா, ஒரு சென்டிமென்ட் குடோன். ஆனால், மணிரத்னம் சற்று வித்தியாசமானவர். நல்ல நாள், பூஜை இவை எல்லாம் இவரது படத்துக்குக் கிடையாது. ஸ்கிரிப்ட், நடிகர்களின் தேதி... இவை போதும், அடுத்த நாளே ஆரம்பமாகிவிடும் படப்பிடிப்பு.

பட ஸ்கிரிப்ட்டை பென்சிலில் எழுதுவது மணிரத்னம் ஸ்டைல். '' 'இருவர்’ பட ஸ்கிரிப்டை எழுதத்தான் நிறைய பென்சில்கள் தேவைப்பட்டன. அந்தக் கதையை எழுதி முடிக்கவும் எடுக்கவும்தான் நிறைய சவால்கள் இருந்தன'' என்கிறார்.

மணிரத்னத்தின் ஃபேவரிட் லிஸ்ட்டில் '16 வயதினிலே’ படத்துக்கும், இயக்குநர் பாலாவுக்கும் எப்போதுமே முதல் இடம் உண்டு.

பெண் குழந்தைகளை மிகப் பிடிக்கும். 'அஞ்சலி’, 'தளபதி’, 'கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்களில் பெண் குழந்தைகளுக்கு முக்கியமான காட்சிகள் இருக்கும். 'ஆய்த எழுத்து’ படத்தில் சித்தார்த், த்ரிஷாவிடம் 'நமக்கு பெண் குழந்தை வேணும்’ எனச் சொல்லும்படி காட்சி வைத்திருப்பார் மணிரத்னம். நிஜத்தில் அவருக்கு ஒரே ஒரு மகன், பெயர்... நந்தன்!

''ஒரு கதையை யோசிக்கிறப்ப முதலில் பெஸ்ட் ஐடியாக்கள் வரணும். அப்புறம் நல்ல டீம் அமையணும். லொக்கேஷனும் படத்தோட ட்ரீட்மென்ட்டும் தடதடனு முடிவாகணும். இதெல்லாம் முடிஞ்ச அப்புறம்தான் எவ்ளோ பட்ஜெட், யார் நடிகர்னு யோசிப்பேன்'' - 'உங்கள் மீது காஸ்ட்லி இயக்குநர் முத்திரை இருக்கே?’ என்ற கேள்விக்கு, இயக்குநர் ஷங்கர் சொன்ன பதில் இது.

தன் படத்துக்கான பாடலை பாடலாசிரியர் எழுதுவதற்கு முன்பே, அதை எங்கு படம் பிடிப்பது, என்ன தீம்... என எல்லாவற்றையும் முடிவுசெய்துவிடுவார். பாடலாசிரியருக்கு அந்தப் பாடலின் விஷ§வல் கண் முன் ஓடும் அளவுக்குத் தகவல்கள் தருவார். அந்தக் கனவுக்கு சொல் வடிவம் கொடுப்பதே பாடலாசிரியருக்கான சவால்.

'எந்திரன்’ படத்துக்கு வசனம் எழுதியது மூன்று பேர். சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி. ஒவ்வொரு காட்சியையும் உதவியாளர்கள் படிக்க, மூன்று பேரின் வசனங்களில் இருந்து பொருத்தமானவை தேர்வுசெய்யப்பட்டதாம். இப்படி வசனங்கள் முடிவாவதற்கே பல வார டிஸ்கஷன் நடத்தினாராம் ஷங்கர்.

ஷங்கர், நடிப்பின் மீது கொண்ட காதலில்தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால், கிடைத்தவை எல்லாம் துக்கடா வேடங்கள். பிறகு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அதன் பின் நடந்தவை தமிழ் சினிமா வரலாறு.

தமிழில் மிகப் பெரிய வெற்றி இயக்குநரான ஷங்கருக்கு, எல்லா மொழிகளுக்கும் ஏற்ற ஒரு கதையை படமாக்கி, இந்திய அளவில் ஹிட்டடிக்க வேண்டும் என்பதுதான் கனவு.

அப்புறம் இருக்கிறது ஓர் உலக சினிமா!

'அதிகாலையில புல்வெளியில் நடக்கிறப்போ, கால் வழியா மனசு குறுகுறுக்குமே... அந்த உணர்வு இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கலை. அவங்களுக்குள் நாமதான் அதைக் கடத்தணும்’ - தன் நெருக்கமான நண்பர்களிடம் இப்படிச் சொல்வார் இயக்குநர் வெற்றி மாறன். வெளியேதான் விருதுகள் குவிக்கும் படங்களின் இயக்குநர்... உள்ளுக்குள் தீவிர விவசாய ஆர்வம்கொண்டவர்.

புறா வளர்ப்பது, சேவல் சண்டை, நாய் வளர்ப்பு... என வெற்றி மாறனின் ஹாபி எல்லாம் வித்தியாசமானவை. இவர் வீட்டில் வளரும் இரு பெண் நாய்களின் பெயர் மலர், அழகி. அழகி மீது இவரின் மனைவி ஆர்த்திக்கு அதிகப் பிரியம். அழகி பிரசவித்த குட்டி ஒன்றை நடிகர் கிஷோருக்குப் பரிசாக அளித்திருக்கிறார் வெற்றி மாறன்.

இவர் இயக்கி, வெனிஸ் திரைப்பட விழாவில் 'மனித உரிமைகள் பற்றிய சிறந்த படம்’ என்ற விருது வென்ற 'விசாரணை’ படத்தை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து புகழ்ந்திருக்கிறார்.

ஸ்கிரிப்ட் விஷயத்தில் வெற்றி மாறன் ஸ்ட்ரிக்ட் வாத்தியார். 'பொல்லாதவன்’ கதை, கறுப்பு பல்சர் பைக்கைச் சுற்றித்தான் நகர்கிறது என்ற விஷயத்தை முன்னரே தெரிந்துகொண்ட ஒரு பைக் நிறுவனம், தன் தயாரிப்பில் ஒரு பைக்கைப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்லி இலவசமாகத் தர முன்வந்தபோது, 'நான் எழுதிய ஸ்கிரிப்ட்டில் பல்சர் பைக்தான் இருக்கிறது’ என மறுத்துவிட்டாராம்.

சினிமா கற்க விரும்புகிறவர்களுக்கு பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது இந்தப் பொல்லாதவனின் நல்ல கனவு.

''நடிகர்களுக்காக நான் கதை எழுதுவது இல்லை. அதில் நடிக்க நடிகர்கள் விருப்பம் தெரிவித்தால், அது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்குமா... இல்லையா என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன்' என்கிறார் 'கபாலி’ இயக்குநர் பா.இரஞ்சித்.

'சாதிகள் மட்டுமே சமுதாயம் என்றால் வீசும் காற்றிலும் விஷம் கலக்கட்டும் ’ - என்கிற பழநிபாரதியின் புகழ்பெற்ற கவிதை வரிகளை சற்றே மாற்றி, 'சாதிதான் சமூகம். வீசும் காற்றில் எப்போது விஷம் பரவும்?’ என, தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார் இரஞ்சித்.

'தல’ என்பது ரஞ்சித்தின் ஃபேவரிட் வார்த்தை. நண்பர்களையும் உடன் பணிபுரிபவர்களையும் 'தல’ என்றுதான் அழைக்கிறார். 'எனக்குத் தமிழ்ல பிடிச்ச வார்த்தை...’ என இரஞ்சித் சொல்வது 'மகிழ்ச்சி’யை. 'கபாலி’ திரைப்படம் உறுதியானதும், ட்விட்டரில் இரஞ்சித் பகிர்ந்த ஒரே வார்த்தை 'மகிழ்ச்சி’. மகளுக்குக்கூட மகிழினி என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறார். இரஞ்சித், அவரது மனைவி அனிதா இருவரும் ஓவியர்கள். சென்னை ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, திருமணம் செய்துகொண்டனர்.

நன்கு படித்த, டாப் பிசினஸ்மேன் ஒருவர் பற்றிய கதை ஒன்றை வைத்திருக்கிறாராம் இரஞ்சித். அந்தக் கதையின் பெயர் 'மஞ்சள்’. இதைத்தான் அடுத்த படமாக அறிவிக்க இருந்தாராம். அதற்கு முன்னர் அடித்தது 'கபாலி’ ஜாக்பாட்!

'சினிமா படைப்பாளி ஆகிற வரை துவைப்பாளியாக இருப்பேன்’ - ஒரு சலவை நிலையத்தில், துணிக்கு ஒரு ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பன்ச் அது. ''சினிமா இயக்குவதற்கு முன்னர், பல படங்களின் ஸ்கிரிப்ட்டிலும் டிஸ்கஷனிலும் ஈடுபட்டதால்தான், என் படத்துக்கான திரைக்கதைகளை விறுவிறுப்பாக அமைக்க முடிந்தது. இதுதான் என் சக்சஸ் சீக்ரெட்'' என்கிறார். இவர் பட ஒன்லைன் எல்லாம் வில்லனை மையமாக வைத்தே இருக்கும். 'துப்பாக்கி’ பட வில்லன் கேரக்டரை உருவாக்கவே சுமார் இரண்டு மாதங்கள் டிஸ்கஷன் நடந்தது. 'வில்லனுக்கு தீம் மியூஸிக் வேண்டும்!’ என இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்குவார்.

கி.ராஜநாராயணன் கதைகள் அனைத்தும் முருகதாஸுக்கு அத்துபடி. அதிலும் 'கோபல்ல கிராமம்’ மிகப் பிடித்த புத்தகம்!

''உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் பார்க்க விரும்பும் படங்களைத் தமிழில் எடுக்கணும்'' என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சொன்னபோது அவர் கல்லூரி மாணவர்.

கனவு, கவனம்... என அனைத்துமே சினிமா மீது இருந்தாலும், அம்மாவுக்காக இன்ஜினீயரிங் படித்தார். அப்போது அவர் செய்த சேட்டைகள், இன்று அவரது சினிமாவின் சீன்கள். 'மின்னலே’ பட ஓப்பனிங்கில் மாதவன், ஹாஸ்டல் வார்டன் அறைக்குள் வெடியைக் கொளுத்திப்போடுவது எல்லாம் கௌதம் தன் கல்லூரிப் பருவத்தில் செய்த சேட்டைகளில் ஒன்று.

எந்த அம்மா இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னாரோ, அதே அம்மாதான் இயக்குநர் ராஜீவ் மேனன் எண் கொடுத்து, சினிமாவுக்கு அனுப்பியவர்.

கௌதமின் பெற்றோர், காதல் திருமணம் புரிந்தவர்கள். அதனால் வீட்டில் எப்போதும் காதல் தளும்பித் ததும்பும். அதுதான் கௌதம் இயக்கும் காதல் காட்சிகளுக்கு இன்ஸ்பிரேஷன்.

கதை அளவுக்கு பாடல் காட்சிகளுக்கும் மெனக்கெடுவார். பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை மனசுக்குள் குட்டி ட்ரெய்லர் ஓடவிட்டு, அதற்கு ஏற்ற வரிகள் வாங்குவதில் கௌதம் கில்லாடி.

கௌதமுக்குள் இயக்குநர் கனவை விதைத்த படம் 'நாயகன்’. அந்தப் படத்தின் சின்னச் சின்ன ஷாட்களை இப்போதும் சிலாகிப்பார். ஆங்கிலப் புத்தகங்களின் அதிதீவிர வாசகர்.

கௌதமிடம் உதவி இயக்குநராகச் சேர விரும்புவர்களில், நன்கு படித்தவர்களைவிட லாஸ்ட் பெஞ்ச் அரியர் கோஷ்டியைத்தான் அதிகம் விரும்புவாராம். காரணம், 'அவர்களிடம் நிறையக் கதைகள் இருக்கும். கூடவே, அசட்டுத் தைரியமும்...’ என்பது கௌதம் கணக்கு!

'பீட்சா’ மூலம் த்ரில் என்ட்ரி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், 'ஜிகர்தண்டா’வில் ஆக்ஷன் காமெடி கலந்து ரசிகர்களை ஈர்த்தவர். இப்போது 'இறைவி’ ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் வேலைகளில் பரபர பிஸி. படத்தின் கருவை மட்டும் சுமந்துகொண்டு நண்பர்களுடன் கொடைக்கானல் பறந்துவிடுவார். அங்கே முகில் கூட்டங்களுக்கு மத்தியில் அமர்ந்து சோலோவாக சீன் பிடிப்பது கார்த்திக் ஸ்டைல். ஆனால், 'இறைவி’க்கு சீன் பிடித்தது எல்லாம் பெங்களூரில்.

ஸ்கிரிப்டை அவர் டீம் மெம்பர்களைத் தவிர முதலில் படிக்கும் வெளி ஆள் இயக்குநர் நலன் குமாரசாமி. பிறகு, அப்பா கஜராஜ், மனைவி சத்யா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் படித்து கருத்துச் சொன்ன பிறகே படம்பிடிக்கச் செல்வார்.

'ரஜினியையும் பாலிவுட் நடிகர் நவாஸுதீனையும் ஒரே கதையில் நடிக்கவைத்து தெறிக்கவிடணும்’ என்பது கார்த்திக்கின் பெரும் கனவுகளில் ஒன்று.

கார்த்திக்குக்கு மிகப் பிடித்த படங்கள் 'முள்ளும் மலரும்’, 'தளபதி’. மணிரத்தினத்தை நேரில் சந்தித்தபோது 'தளபதி’ படத்தின் பல சீன்களை ஃபிரேம்பை ஃபிரேம் சொல்ல, பதிலுக்கு மணிரத்தினமும் 'ஜிகர்தண்டா’ படத்தில் 'இந்தந்த சீன்கள் சூப்பர்’ எனச் சொல்ல, 'அதுதான் என் வாழ்வின் வாவ் மொமன்ட்’ என மகிழ்கிறார் கார்த்திக் சுப்புராஜ்!

''ஒரு ரீமேக் படம் கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கே 70 சதவிகித ரீமேக் படங்கள் தோல்விதான். அதுல ஹிட்டடிக்க முடியுதுன்னா அது நல்ல விஷயம்தானே'' - ரீமேக் ராஜா டு 'தனி ஒருவன்’ ராஜாவாக மாறியிருக்கும் மோகன் ராஜாவின் ஸ்டேட்மென்ட் இது.

மலையாளத்தில் சுரேஷ் கோபி, மோகன்லால் நடிப்பில் வெளியான 'தென்காசிபட்டணம்’ படத்தை தெலுங்கில் 'ஹனுமன் ஜங்ஷன்’ என இயக்கி அறிமுகமானவர் ராஜா. அதன் பின்னர் தமிழில் இயக்கி மிகப் பெறிய வெற்றி பெற்ற படம்தான் 'ஜெயம்’.

முதல் சந்திப்பில் எல்லோருக்கும் சிரித்த முகமாக, ஜாலியான நபராகத்தான் அறிமுகமாவார் ராஜா. ஆனால் நிஜத்தில், 'தனி ஒருவன்’ ஜெயம் ரவி கேரக்டர். சமூகக் கோபமும் அக்கறையும் வார்த்தைகளிலும் செயலிலும் கொப்பளிக்கும்.

அநாவசியச் செலவுகள், ராஜாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. இன்று வரை சான்ட்ரோ கார்தான் அவரின் வாகனம்.

ராஜாவின் அதிகபட்சப் பொழுதுபோக்கு, தன் நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடிப்பது மட்டும்தான். 'தனி ஒருவன்’ பட இசைக்கோப்பு சமயத்தில், நள்ளிரவில் தம்பி ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியுடன் சென்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டதும் நடந்திருக்கிறது.