'' 'வேலையில்லா பட்டதாரி’ முடிச்சதுமே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சில ஹீரோக்கள் பேசினாங்க. தனுஷ் சார்கிட்ட சொன்னப்ப, 'டாப் ஹீரோஸ் படங்கள் வந்தா மட்டும் பண்ணுங்க. இல்லேன்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ன்னார். இப்போ டாப் ஹீரோ தனுஷ் சாருடனே மறுபடியும் 'தங்கமகன்’ பண்றேன்'' - உற்சாகமாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் வேல்ராஜ். 'தங்கமகன்’ ரிலீஸ் டென்ஷனில் இருந்தவருடன் ஒரு கலகல ஃபேமிலி சந்திப்பு...

''ஒளிப்பதிவாளர் டு இயக்குநர்... இந்த மாற்றம் எப்படி இருக்கு?''

'' 'வி.ஐ.பி’-க்குப் பிறகு என்னை ஈஸியா அடையாளம் கண்டுக்கிறாங்க. குறிப்பா தனுஷ் ரசிகர்கள், 'கண்டிப்பா அடுத்த படமும் ஹிட் கொடுத்துடுங்க சார்’னுதான் பேச்சையே தொடங்குறாங்க. ஒளிப்பதிவாளருக்கு பொதுவா ரசிகர்களோட நேரடி பரிச்சயம் இருக்காது. ஆனா, ஒரு இயக்குநரா படத்தின் வெற்றி, தோல்விக்கு நேரடி காரணமா நாம இருக்கோம். இந்த அனுபவம் கம்ப்ளீட்டா வேற மாதிரி இருக்கு.''

''தனுஷ்-வெற்றி மாறன்-வேல்ராஜ்... இந்த ஸ்பெஷலான காம்போ அனுபவம் எப்படி இருக்கு?''

'' 'பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ பண்ணின நட்பில், 'இவரை வெச்சுக்கங்க’னு வெற்றி மாறனுக்கு 'பொல்லாதவன்’ டைம்ல தனுஷ் சார்தான் என்னை அறிமுகப்படுத்தினார். வெற்றி மாறனுக்குதான் என்மேல நிறைய டவுட். 'போலீஸ்காரன் மாதிரியான என் முக அமைப்புல எங்க தேடியும் கேமராமேனுக்கான முகவெட்டு இல்லையே’னுகூட அவர் நினைச்சிருக்கலாம். ஒரு மாசம் வரைக்கும் என்னைக் கூப்பிடவே இல்லை. பொறுமை இழந்து ஒருநாள், 'நான் படத்துல இருக்கேனா, இல்லையா?’னு நேரடியாக் கேட்டுட்டேன். அதுக்கப்புறம் அவரோட சேர்ந்து பண்ணினதுதான் 'பொல்லாதவன்’. படத்தை முடிச்ச பத்தாவது நாளே, அடுத்த படத்துக்கு லொக்கேஷன் பார்க்க மதுரைக்குக் கிளம்பிட்டோம். அதுதான் 'ஆடுகளம்’. அப்புறம் 'விசாரணை’க்கும் என்னைத்தான் கூப்பிட்டார். அந்த நேரத்துல நான் 'கொம்பன்’ ஷூட்ல இருந்ததால, பண்ண முடியலை. இப்ப திரும்பவும் 'வடசென்னை’க்குக் கிளம்புறோம்.''

''ஸ்கூல், காலேஜ் பையன், ரௌடினு தனுஷூக்கு எல்லா கேரக்டர்களுமே செமையா செட் ஆகுது. அவரை வியூஃபைண்டர் வழியா பார்க்கும்போது என்ன தோணும்?''

'' ''3’-யில் ஸ்கூல் பையனா பண்ணப்போறேன்’னார். 'இனிமே இவரை எப்பிடிடா ஸ்கூல் பையனா காட்ட முடியும்?’னு டவுட். மீசையை எடுத்துட்டு தலைமுடியை கம்மி பண்ணி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூல் பையனாவே மாறிட்டார். அவரோட உடல்வாகுக்கு எல்லாமே செட் ஆகுது. அதேபோல எந்த சவாலான சூழலையும் சமாளிப்பார். 'வேலையில்லா பட்டதாரி’யில் ஒரு நீளமான டயலாக்; சாக்கடை மாதிரி லொக்கேஷன்; லைட் போய்க்கிட்டே இருக்கு; அடுத்து ரெண்டு ஷாட் பேலன்ஸ் இருக்கு; மழை வேற வர்ற மாதிரி இருக்கு. அதையெல்லாம் மேனேஜ் பண்ணி, ஒரே ஷாட்ல மிஸ் பண்ணாம பேசி நடிச்சார். எந்தச் சூழல்லயும் தன்னோட பெஸ்ட்டைக் கொடுப்பதால்தான், அவர் பெஸ்ட்!''

''உங்களுக்கு போலீஸ் லுக். அப்பப்ப சில படங்கள்ல போலீஸாகவும் நடிக்கிறீங்க. இதைப் பற்றி யாராவது, ஏதாவது சொல்லியிருக்காங்களா?''

''நிறைய இடங்கள்ல சொல்லுவாங்க. டிராஃபிக் போலீஸ்கூட மத்தவங்களை வழி மறிப்பாங்க. என்னை சல்யூட் அடிச்சு விட்டுருவாங்க. 'ஆடுகளம்’ல ஒரு போலீஸ் கேரக்டருக்கு வேறொரு ஆர்ட்டிஸ்ட் ஃபிக்ஸ் பண்ணியிருந்தாங்க. 'புதுப்பேட்டை’ பட ஷூட்டிங்ல தனுஷ் சாரை அடிக்கிற மாதிரி அடிக்கிறதுக்குப் பதிலா ரியலாவே அடிச்சிட்டாங்களாம். 'என்னை வேற யாரும் அடிக்க வேணாம், நீங்களே அடிங்க வேல்ராஜ்’னார். 'எனக்கு நடிக்கவே வராது’னுட்டேன். ஆனா, கட்டாயப்படுத்தி என்னை நடிக்கவெச்சாங்க. அப்படி தனுஷ§ம் வெற்றியும் சேர்ந்து மாட்டிவிட்டதுதான் என் போலீஸ்காரன் கேரக்டர்.''

''உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க. இந்தப் பரபர ஓட்டத்துல அவங்களுக்காக நேரம் ஒதுக்க முடியுதா?''

''விவசாயக் குடும்பம். அம்மா-அப்பா எல்லாம் மதுரையில் இருக்காங்க. சினிமா துறையில் இருக்கிறதால யாரும் அவ்வளவு சீக்கிரம் பொண்ணு தரலை. மேடம்தான் சம்மதிச்சாங்க. அன்பான மனைவி. அழகான குடும்பம். அர்த்தமுள்ள வாழ்க்கை. இப்போ எங்களுக்கு ரெண்டு பசங்க. நல்லா இருக்கோம்!''