'இந்தப் படம் தீபாவளி ரிலீஸ்’, 'இந்தப் படம் பொங்கல் ரிலீஸ்’ என காத்திருக்க, எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் இருக்கும் சில ஸ்பெஷல் படங்களின் ட்ரெய்லர் கட் இங்கே...

லேபர் ஆஃப் லவ் (Labour Of Love)

படத்தின் முதல் அறிமுகத்திலேயே அத்தனை சுவாரஸ்யம். நாயகனுக்கும் நாயகிக்கும் பெயர் கிடையாது. கொல்கத்தாவில் வேலையில்லா பிரச்னை நிலவிய காலகட்டம்தான் கதைக்களம். நாயகன், கொல்கத்தாவில் வசிக்கும் ஓர் ஆண். நாயகி, கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு பெண். இந்தப் பெயரில்லா தம்பதி பற்றிய கதைதான் 'லேபர் ஆஃப் லவ்’ பெங்காலி சினிமா.

மனைவி ஒரு ஹேண்ட்பேக் தொழிற்சாலையிலும், கணவன் ஓர் அச்சகத்திலும் வேலை செய்கின்றனர். ஒரே வீட்டில் வசித்தாலும் இவர்கள் சந்தித்துக்கொள்வது அரிது. காரணம், அவர்களின் வேலை. மனைவி பகலில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும்போது, கணவன் வேலைக்குச் சென்றிருப்பான். அப்படியே சந்தித்துக் கொண்டாலும் அது முகம் பார்த்து சிரித்துக்கொள்ளக்கூட நேரம் தராத மிக சுருக்கமான சந்திப்பாகத்தான் இருக்கும். அந்தச் சந்திப்புகளும், அவர்களின் வழக்கமான வேலைகளுமாக நீளும் கதைதான் படம். படத்தில் இன்னொரு ஸ்பெஷல், வசனங்கள் கிடையாது. பின்னணியில் மட்டும் சில குரல்கள் ஒலிக்கும். அதை வைத்து காட்சியின் செய்தியைக் கடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஆதித்யா விக்ரம் சென்குப்தா. தேசிய விருது, நியூயார்க் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா என பல விழாக்களில் பல பிரிவுகளில் விருதுகள் வென்றிருக்கிறது 'லேபர் ஆஃப் லவ்.’

ஹராம்கோர் (Haraamkhor)

பள்ளி ஆசிரியர் ஷ்யாம். ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. ஆனாலும் இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறார். அது வேறு யாரும் அல்ல, அவர் வகுப்பு மாணவி சந்தியா. இந்தக் காதல் அதே பள்ளியில் படிக்கும் மின்ட்டு மற்றும் கமலின் நட்பில் பிரச்னையை உண்டாக்குகிறது. இதில் ஏற்படும் சிக்கல்கள், விபரீதங்களைச் சொல்வதுதான் இந்த 'கேடுகெட்ட’ படம் ('ஹராம்கோர்’ என்றால் குஜராத்தியில் 'கேடுகெட்ட’ என்று அர்த்தம்). 'பாலியல் பிரச்னைகளை விவரிக்கும் விதமாக படம் இருக்கும்’ என்கிறார் படத்தின் இயக்குநர் ஸ்லோக் ஷர்மா. குஜராத் நகரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சந்தியாவாக 'மஸான்’ படத்தில் கவனம் ஈர்த்த ஸ்வேதாவும், ஆசிரியர் ஷ்யாமாக நவாஸுதீன் சித்திக்கும் நடிக்கிறார்கள். 16 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம். ஸ்லோக் ஷர்மா, குனீத் மோங்காவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் நடிகை விஷாகா சிங். திரை விழாக்களில் பாராட்டுகளைப் பெற்று வரும் படம், நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நவாஸுதீன் சித்திக்குக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

டாக்ஸி (Taxi)

ஒரு சின்ன டாக்ஸி பயணம் உங்களுக்கு எப்படி இருக்கும்? போகவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்துக்குப் போகவேண்டும். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான், உலகத்தில் உள்ள அனைவரையும் சபிக்கத் தொடங்கிவிடுவீர்கள். அதுவே உங்களுடனான அந்த டாக்ஸி ஓட்டுநரின் பயணம்? அதுதான் 'டாக்ஸி’ என்கிற ஈரானிய சினிமாவின் கதை. படம் பற்றிச் சொல்வதற்கு முன்னர் படத்தின் இயக்குநர் ஜாஃபர் பனாஹி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஈரானிய சினிமாவின் புது அலை இயக்குநராகக் கிளம்பிய ஜாஃபர், ஈரானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும், அவர்களின் அசலான பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படங்களை எடுப்பவர். அரசின் தவறுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட, 'இனி நீ 20 வருடங்களுக்கு படமும் எடுக்கக் கூடாது, வெளியே பயணமும் (மருத்துவக் காரணம், ஹஜ் யாத்திரை தவிர) செய்யக் கூடாது’ என தடை விதித்தது ஈரான் அரசு. கலைஞனால் சும்மா இருக்க முடியுமா? தடை காலத்தில் ரகசியமாக வீட்டுக்குள்ளேயே படம் எடுத்தவர், 'டாக்ஸி’ படத்துக்காக ஈரான் தெருக்களில் காருடன் களம் இறங்கினார். கேண்டிட் முறையில் காருக்குள்ளேயே கேமராவை வைத்து, சில இடங்களில் ஹிடன் கேமராவையும் வைத்து, 'ஆக்ஷன்... கட்!’ சொல்லத் தொடங்கினார். ஒரு டாக்ஸி ஓட்டுநர் சந்திக்கும் விதவிதமான பயணிகள், அவர்களின் தேவைகள்... என படம் வளர்ந்து நிறைவானது. இப்போது பெர்லின் திரைவிழாவில் தங்கக் கரடி விருது வென்றிருக்கிறது. ஜாஃபரின் முந்தைய 'திஸ் இஸ் நாட் எ ஃபிலிம்’, 'குளோஸ்டு கர்டெய்ன்’, 'தி ஒயிட் பலூன்’ படங்கள்போல 'டாக்ஸி’யும் முக்கியமான சினிமாவாகக் கொண்டாடப்படுகிறது. படத்தில் டாக்ஸி ஓட்டுநராக நடித்திருப்பது ஜாஃபர் பனாஹியேதான்.

தீபன் (Dheepan)

எழுத்தாளர் ஷோபா சக்தி, நாடகக் கலைஞர் காளீஸ்வரி உள்ளிட்டோர் நடித்த 'தீபன்’ ஏற்கெனவே உலக அளவில் பல விருதுகளை வென்று பரவலாகப் பேசப்படும் படம். 'தமிழீழ விடுதலைப் புலிகள்’ அமைப்பில் இருந்த சிவதாசன், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் புலிகள் தோற்றதும் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அங்கிருந்து பாரிஸுக்குப் செல்ல நினைக்கிறார். இறந்துபோன தீபன் என்பவரின் பெயரில் தயாரான பாஸ்போர்ட் மூலம் கிளம்பத் தயாராகிறார். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்துபோன தீபனின் மனைவி யாழினி மற்றும் மகள் இளையாளுடன்தான் சிவதாசன் பாரிஸ் செல்ல முடியும். ஒருவழியாக பாரிஸ் வந்தடைகிறார்கள். அங்கு புது வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் மூவரும் சந்திக்கும் சவால்களே படம். பிரெஞ்சு இயக்குநர் ஜாக் வுடியார்ட் இயக்கியிருக்கும் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதை வென்றது. சர்வதேச டொரன்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. புலம் பெயர்தலின் பிரச்னைகள் பற்றி விவரிக்கும் படம், ஈழ அகதிகளின் வாழ்வை நெருக்கமாகப் பேசுகிறது.

ஆங்கிரி இந்தியன் காடஸஸ் (Angry Indian Goddesses)

தன் தோழிகள் அனைவரையும் அழைத்து கோவாவில் இருக்கும் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறாள் ஃப்ரீடா. அங்கு வைத்து தனக்கு திருமணம் ஆகவிருப்பதை அனைவருக்கும் சொல்கிறாள். லேடி பேச்சுலர் பார்ட்டியாக அவர்களின் அடுத்த சில நாட்களே படத்தின் கதை. அந்த ஒரு வாரம் அவர்களின் சந்தோஷம், சண்டை, கோபம், அழுகை, கருத்து வேறுபாடு, லட்சியம், ரகசியம்... எல்லாவற்றையும் வெளிபடுத்துகிறது. பொதுவாக இது போன்ற 'கோவா’ டைப் படங்களில் ஆண்களே பிரதானமாக இருப்பார்கள். வெகுநாட்கள் கழித்து மகளிர் மட்டும் சினிமாக உருவாகி பல திரைவிழாக்களில் இடம் பெற்று பாராட்டு பெற்று வருகிறது. நாம் எந்த அளவுக்கு பெண்களின் உலகத்தைப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நிச்சயமாக ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கும் இந்த 'ஆங்கிரி இந்தியன் காடஸஸ்’ என அடித்துக் கூறுகிறார் இயக்குநர் பான் நலின்.

ஐ.டி (I.D)

சாரு தன் தோழிகளுடன் மும்பையில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருக்கிறாள். என்றும்போல அன்றும் வேலை முடித்து வீடு திரும்புகிறாள். உள்ளே வீட்டில் பெயின்ட் பூசிக்கொண்டிருந்தவர் சுயநினைவின்றி மயங்கிக்கிடப்பதை பார்க்கிறாள். அவளுக்கு, அவர் தன் வீட்டுக்கு பெயின்ட் பூச வந்தவர், அவர் ஒரு பெயின்டர் என்பதைத் தவிர, வேறு எந்தத் தகவலும் தெரியாது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கிறாள். ஆனால், டாக்டர்கள் அவர் இறந்துவிட்ட செய்தியைக் கூறுகிறார்கள். யார் இவர், பெயர் என்ன, இவர் குடும்பம் எங்கே இருக்கிறது என பல கேள்விகள் எழுகின்றன சாருவுக்குள். எல்லாவற்றுக்கும் விடை தேடப் புறப்படுகிறாள். அந்தப் பயணம்தான் படம். சாருவாக நடித்திருக்கும் கீதாஞ்சலி தாபா, இதற்குப் பின் நடித்த படம் 'லயர்’ஸ் டைஸ்’. இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை, கதாநாயகியாக நடித்திருக்கும் கீதாஞ்சலியின் தேடல்தான். 'லயர்’ஸ் டைஸ்’ படத்தில் காணாமல்போன கணவனைத் தேடிப் புறப்படுவார். இன்னும் வெளியாகாத இந்த இரண்டு படங்களுக்காகப் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார் கீதாஞ்சலி. கமல்.கே.எம் இயக்கியிருக்கும் 87 நிமிடப் படம் இது.

சாருவாக நடித்திருக்கும் கீதாஞ்சலி தாபாவின் நடிப்பு அத்தனை அழகு. பிணத்தை செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு தெருத்தெருவாக இறந்துபோனவனின் முகவரி தேடி அலைவது, சிலரை மிரட்டி தகவல் கேட்பது, சிலர் சொல்லும் தகவல்களைக் கேட்டு மிரள்வது... என ஒற்றை ஆளாக படத்தைத் தாங்குகிறார்.