''படிக்கும்போது நாடகத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன்... இப்போ சினிமாவில் நடிக்கும்போது படிச்சுக்கிட்டிருக்கேன். நகைச்சுவைச் சக்கரவர்த்தி வி.கே.ராமசாமி ஒருமுறை என்கிட்ட, 'தமிழ் சினிமாவுல இருந்த பல நகைச்சுவை ஜாம்பவான்கள் பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. நீ அதைப் பதிவுபண்ணு’னு சொன்னார். அந்த வார்த்தைகள்தான் எனக்குள் விதைகளாக விழுந்தன. 2013-ம் ஆண்டில் 'தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் எம்.ஃபில் பண்ணினேன். இப்போ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துல பிஹெச்.டி-யின் இறுதிக்கட்டத்துல இருக்கேன். இந்த சப்ஜெக்ட்ல ஒரு நடிகர் முனைவர் பட்ட மாணவராக இருப்பது இதுதான் முதல் முறை' - இயல்பாகப் பேசுகிறார் நடிகர் சார்லி.

'காளி என்.ரத்தினம், டி.என்.சிவதாணு, ஏ.வீரப்பன், 'பசி’ நாராயணன், எம்.ஆர்.கே., லூஸ் மோகன் போன்ற பல நாடகக் கலைஞர்கள் நகைச்சுவையில் மிரட்டியிருக்காங்க. இவங்களைப்போல வெளியில் தெரியாத பல நபர்களை உலகுக்கு உரக்கச் சொல்லணும். இதுக்காக, உலகம் முழுக்கப் போய் நிறையத் தகவல்களைச் சேகரிச்சிருக்கேன்.'

'இத்தனை வருட நடிப்பு அனுபவத்தில் நீங்க கற்றுக்கொண்டது என்ன?'

'சகிப்புத்தன்மை, காத்திருப்பு. இப்பவும் காத்திருக்கேன். மோகன்கூட 10 படங்கள், முரளிகூட 30 படங்கள், ஆனந்த்பாபுகூட 20 படங்கள், கார்த்திக்கூட 20 படங்கள்னு என் இளமை முழுவதிலும் கல்லூரி மாணவனாகவே நடிச்சேன். நாற்பது வயசுக்குப் பிறகு நிறைய வித்தியாசமான ரோலில் நடிக்க பல வாய்ப்புகள் வந்துச்சு. இப்பவும் வித்தியாசமான கேரக்டருக்காகக் காத்திருக்கேன்.'

'உங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலசந்தரின் மரணம், உங்களை எந்த அளவுக்குப் பாதிச்சது?''

'1982-ம் ஆண்டு 'பொய்க்கால் குதிரை’ படத்துல 'எங்கள் கண்டுபிடிப்பு சார்லி’னு டைட்டில் போட்டு என்னை அறிமுகப்படுத்தினார் எங்க டைரக்டர். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கின அத்தனை படங்களிலும் நடிச்ச ஒரே நடிகர் நான் மட்டும்தான். இது எனக்குக் கிடைச்ச பாக்கியம். 'சர்வர் சுந்தரம்’ மாதிரி முழுநீள காமெடி படத்துல என்னை நடிக்கவைச்சு இயக்கணும்னு பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ஆனா, அது நிறைவேறாமலே போயிருச்சு. அவரைக் கடைசியாக ஒரு திருமணத்துல பார்த்தேன். 'என்னடா... என்னைப் பார்க்கவே வர மாட்டேங்கிறே; உன்னைப் பார்க்க நான் வரணுமா?’னு பாசமா கேட்டார். இதுதான் அவர் என்கிட்ட கடைசியாகப் பேசினது. 'பொய்க்கால் குதிரை’ ஷூட்டிங்லதான் என் இயற்பெயர் மனோகரை 'சார்லி’னு மாற்றி ஆசீர்வாதம் பண்ணினார். அதுதான் இப்போ வரை என்னை வாழவைக்குது.'

'இப்ப என்னென்ன படத்துல நடிச்சுட்டு இருக்கீங்க?'

' 'கிருமி’ படத்துக்குப் பிறகு 'ஒரு நாள் கூத்து’, 'மாநகரம்’னு இளம் தலைமுறை இயக்குநர்கள்

படத்துல நடிச்சிட்டிருக்கேன். 'கிருமி’ படத்துல என் ரோல் ஒரு பெரிய சேலஞ்ச். 'இந்த கேரக்டர், பெர்ஃபார்ம் பண்ணக் கூடாது; அந்தச் சூழ்நிலையில் நடப்பதைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி ரியாக்ட் பண்ணணும்’னு இயக்குநர் சொன்னார். முதல் ஷாட் எடுக்கும்போதே ஒரு படத்தோட அவுட்புட் எப்படி வரும்னு எனக்குத் தெரியும். 'கிருமி’ படம் ரொம்ப இயல்பா இருந்தது. 'ஒரு நடிகன், கதாபாத்திரத்தைத் தேடிப் போகக் கூடாது; கதாபாத்திரம், நடிகனைத் தேடி வரணும்’னு நினைப்பேன். இப்ப 'கிருமி’ படம் எனக்கு நிறைய வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கு.'

'32 வருடங்களாக சினிமாவில் இருக்கீங்க. ஆனா, நம்பர் 1 காமெடியனா வர முடியலையே!''

'புள்ளி ஒரு சதவிகிதம்கூட அந்த வருத்தம் இல்லை. ஏன்னா, நம்பர் 1-ஐ நோக்கிப் போகணும்கிற உணர்வுதான் என்னை உற்சாகமா இயங்க வெச்சுக்கிட்டு இருக்கு. நான் நம்பர் 1-ஐ ரீச் பண்ணிட்டேன்கிறதைவிட ‘I am Going to Number 1’ என்பதுதானே சந்தோஷம்?''

'பல படங்களில் கல்லூரி மாணவராக நடிச்சிருக்கீங்க. இன்றைய கல்லூரி இளைஞர்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?'

'இன்றைய ஜெனரேஷனுக்கு எதிலும் ஃபோக்கஸ் இல்லை. வாசிப்பு குறைஞ்சிருச்சு. எல்லாத்தையும் பார்த்தே பழகுறாங்க. முக்கியமா, ரௌத்திரம் குறைஞ்சிருச்சு. அப்பல்லாம் ஏதாவது பிரச்னைன்னா சும்மா புகுந்து விளையாடிருவாங்க. இப்ப, 'நமக்கு எதுக்கு வம்பு?’னு எஸ்கேப் ஆகிடுறாங்க. ஆனா, இந்தத் தலைமுறை பசங்ககிட்ட இருந்து பெரியவங்க கத்துக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. ரெண்டு தரப்பும் பரஸ்பரம் கத்துக்கணும். கத்துக்கிறதுதானே வாழ்க்கை!''