
அவர் : ''தலை முடிக்கு தடவற தைலத்தை போய் ஏன் தேளுக்கு தடவறீங்க..?''
இவர் : ''அப்பதானே கொட்டாது...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர் : !!!!!
- வி.சாரதிடேச்சு


''காது வர வர மந்தமா கேட்குதுடா!''
''காது மூக்கு தொண்டை ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேட்டியா?''
''அவர் பேசுறதும் அப்படிதான் கேட்குதுடா!''
- பா.விஜயராமன்

''இருந்தாலும் இந்தளவுக்கு தலைவருக்கு எதிர்க்கட்சிக் காரங்க மேல அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது!''
''எதனால சொல்ற?''
''நில மோசடி வழக்கு தொடர்வதற்கு ஆட்கள் தேவைன்னு பேப்பரில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்!''
- எஸ்.ராஜன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism