சினிமா
Published:Updated:

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

சார்லஸ்

##~##

'இது எந்த உலக சினிமாவில் இருந்து உருவிய படம்?’ - ஒவ்வொரு தமிழ்ப் படம் வெளியாகும்போதும் கூகுள் தட்டுவது தமிழகத்தில் சகஜமாகிவிட்டது. ஆனால், அப்படியெல்லாம் பெரிதாக அலுத்துக்கொள்ளாமல், 'ஜஸ்ட் லைக் தட்’ ஹிட் தமிழ் சினிமாக்களை அப்படியே தழுவிக்கொள்வதுதான் இப்போது பாலிவுட்டின் புது டிரெண்ட்!

 முறைப்படி ரைட்ஸ் வாங்கியும் ரைட்ஸ் வாங்காமலும் தமிழ்ப் படங்கள் இந்தியில் வரிசை கட்டி ரீ-மேக் ஆகின்றன. அங்கு இந்தப் போக்கைத் தொடங்கிவைத்த படம் 'கஜினி’. அமீர் கான் நடிக்க, இந்தியிலும் 'கஜினி’யாகவே வெளியான அந்தப் படம் வாரிக் குவித்தது

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

170 கோடி! அலாரம் அடித்ததுபோல விழித்துக்கொண்டது பாலிவுட். 'போக்கிரி’யின் ரீ-மேக் 'வான்டட்’

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

75 கோடி, 'சிங்க’மாகவே வெளியான 'சிங்கம்’

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

90 கோடி, 'ரெடி’

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

130 கோடி, 'காவலன்’ 'பாடிகார்டு’

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

225 கோடி என சவுத் ஸ்பெஷல் மசாலா அனைத்தும் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்!

தமிழ் சினிமாக்கள் அடர்த்தியான கதையுடன் இருப்பதாலும் (!) பெரிய செலவு வைக்காமல், ஏற்கெனவே ரசிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட்டுடன் இருப்பதாலும் ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால், உடனே ஷூட்டிங் தொடங்கி கல்லா கட்டிவிடலாம். இதனால்தான் யு டி.வி, ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்கள் தமிழ்ப் படங்களின் ரீ-மேக் உரிமையை வாங்கிவைத்துக் கொண்டு, அதை இந்தியில் சினிமா வாக்க முட்டி மோதுகின்றன! சமீபத் தில் திரைக்கு வந்த/வரவிருக்கும் சில கோலிவுட் ரீ-மேக்குகளின் ஸ்டேட்டஸ் இங்கே...  

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

'ஃபோர்ஸ்’ - 'காக்க காக்க’

'காக்க காக்க’ அங்கு 'ஃபோர்ஸ்’ ஆக வெளியாகி இருக்கிறது! தமிழில் 'எவனோ ஒருவன்’ படம் இயக்கிய நிஷிகாந்த் காமத்தான் இயக்குநர். சூர்யா கேரக்டரில் ஜான் ஆப்ரஹாம், ஜோதிகா நடித்த 'மாயா’ கேரக்டரில் ஜெனிலியா. இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஜான் ஆப்ரஹாமுக்கும் ஜெனிலியா வுக்கும் இடையேயான கல்யாண காட்சியைத் தத்ரூபமாக எடுப்பதற்காக நிஜ புரோகிதரை ஷூட்டிங்குக்கு வரவழைத்து, ஒரிஜினல் மந்திரங்களையே சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். இது தெரியவந்ததும், 'ஒரிஜினல் மந்திரங்களைச் சொன்னால், அது ஒரிஜினல் கல்யாணம் போலவே ஆகிவிடும்’ என்று பதறிச் சிதறி, ஷூட்டிங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் ஜெனிலியாவின் காதலர் ரித்தேஷ் தேஷ்முக். இது படத்தின் பப்ளிசிட்டிக்கு நன்றாகவே பயன்பட்டது. தமிழைவிடப் பல மடங்கு எக்குத்தப்பான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தில், ஜான் ஆப்ரஹாமின் ஸ்டன்ட்கள் தியேட்டரை அதிரச் செய்கின்றன. ஒரு பைக்கை அலேக்காகத் தலைக்கு மேலே தூக்கி ஒரு ஆளை அடிக்கிறார்!

'காதலும் ஆக்ஷனும் கலந்த இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்று பாராட்டிக் குவிகின்றன விமர்சனங்கள்!

'ரவுடி ரத்தோர்’ - 'சிறுத்தை’

இந்தியில் பிரபுதேவா இயக்க, கார்த்தி வேடத்தில் அக்ஷய் குமார். தமன்னா கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா. 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா’ என காமெடியிலும் ஆக்ஷனிலும் அக்ஷய் குமார் கலக்கு வார் என்பதால், பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது ரவுடி ரத்தோர். 'வான்டட்’ படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் படம் என்பதால், ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இரண்டு மாதங்கள் சிறப்பு கராத்தே பயிற்சி பெற்றுத் தயாராகி இருக்கிறார் அக்ஷய். சோனாக்ஷி இடுப்பைக் கிள்ள கராத்தே பயிற்சி எதுக்குப்பா?

எ ஃபிலிம் பை கோடம்பாக்கம்!

'ஏக் திவானா தா’ - 'விண்ணைத் தாண்டி வருவாயா’

இந்தியிலும் 'விண்ணைத் தாண்டி வருவாயா’ என்று அழைக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். சிம்பு கேரக்டரில் பிரத்திக் பாபர், 'ஜெஸ்ஸி’யாக எமி ஜாக்சன். கேரக்டரோடு ஒன்ற வேண்டும் என்பதற்காக எமி ஜாக்சனை 'வி.டி.வி’-யை 15 முறை பார்க்க வைத்தாராம் கௌதம். தமிழ்ப் பாடல்களைத் தவிர, இந்தி வெர்ஷனுக்கு எனக் கூடுதலாக இரண்டு பாடல்கள் இசையமைத்துக் கொடுத்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் படங்களைத் தவிர, 'மைனா’, 'நான் மகான் அல்ல’, 'சாமி’, 'கோ’ என பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் நுழைய வரிசை கட்டி நிற்கின்றன தமிழ் சினிமாக்கள்!