பிணையாக இருக்கும் செல்ல மகனைக் காப்பாற்ற வேண்டும், டிபார்ட்மென்ட்டின் கறுப்பு ஆட்டைக் கண்டுபிடிக்க வேண்டும், போதை மாஃபியாவைப் பிடிக்க வேண்டும். ஆனால், கையில் இருப்பதோ ஒரே ஓர் இரவு. தூக்கம் தொலைத்த இரவில், காவல் அதிகாரி கமல் வேட்டையாடும் வனம்... 'தூங்காவனம்’!

முதல்முறையாக ஒரு பிரெஞ்சு படத்தின் (ஸ்லீப்லெஸ் நைட்) அதிகாரபூர்வ ரீமேக் என்ற கிரெடிட்டுடன் வந்திருக்கும் படம்.

ஒரே இரவில், ஒரு டிஸ்கோ கிளப்பில் நடக்கும் கதைக்கு விஸ்வரூப எஃபெக்ட் கொடுத்திருக்கிறது கமலின் நச் டச். மகனிடம் அடங்குவது, மனைவியிடம் புலம்புவது, வில்லனிடம் எகிறுவது என வழக்கமான ஸ்கோரிங். விவாகரத்தான மனைவியிடம் 'தையல்’ டிப்ஸ் கேட்பது, மதுஷாலினியை பச்சக் பச்சக் என இச்சுவது, க்ளைமாக்ஸில் மகனை வைத்தே காதல் புகழ் பாடிக்கொள்வது எல்லாம் உண்டுதான். ஆனாலும், 'கமல் ஸ்பெஷல்’ எனச் சொல்லும் அளவுக்கு ஒரு காட்சிகூட இல்லை. சோயா பால் கேட்டு அடம்பிடிக்கும் காட்சியிலும், 'இதை ஏன்ப்பா முன்னாடியே சொல்லலை?’ என தழுதழுக்கும் காட்சியிலும் கமல் இருக்கும் ஸ்கிரீனிலேயே லைக்ஸ் தட்டுகிறார் அமன். த்ரிஷா, ஆக்ஷனில் அதிரடிக்க... கிஷோர், ஷார்ப் லுக்குகளில் மட்டும் ஈர்க்க... பிரகாஷ்ராஜ் மட்டும் சற்றே கலகலக்கவைக்கிறார்.

ஒரு பாட்டுக்கு மட்டும் டிஸ்கோ கிளப்பைப் பயன்படுத்தும் ட்ரெண்டுக்கு நடுவே, முழுப் படத்தையும் அங்கேயே படம்பிடித்தது தில். நைட் கிளப் நுழைவாயில் கெடுபிடி, அதிரடிக்கும் டி.ஜே., ரெஸ்ட் ரூம் அலங்காரங்கள், ரகரகமான போதை கேபின்கள், சில்மிஷச் சீண்டல்கள், பாலியல் தொல்லைகள்... என இசையும் இச்சையுமாக ஒரு நைட் கிளப்பின் அத்தனை சுவாரஸ்யங்களையும் திரைக்கதையில் இணைத்தது செம கிக்! ஆனால், அந்த அத்தனை சுவாரஸ்யங்களும் முன் பாதிக்கு மட்டுமே உதவுகின்றன. இன்ச்கூட முன்னேறாத பின் பாதி... ஆவ்வ். கிளப்பின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் பிரகாஷ்ராஜுக்கு தெரிகிறது. ஆனால், கிச்சனுக்குள் சுனாமியே வந்தாலும் தெரியாதுபோல!

பின்னணி இசையில் எகிறி அடிக்கிறார் ஜிப்ரான். ரெஸ்ட் ரூமின் பெண்கள் பகுதியில் இருந்து உயர்ந்தெழுந்து ஆண்கள் பகுதியில் தரை இறங்கும் கேண்டிட் நேர்த்தியை, படம் முழுக்கத் தவழவிடுகிறது சானு வர்கீஸின் ஒளிப்பதிவு. டிஸ்கோ கிளப்பில் மூலைமுடுக்குகளைக்கூட அக்குவேறு ஆணிவேறாக ஆக்கிய கலை இயக்குநர் பிரேம் நவாஸுக்கு... ஸ்பெஷல் லைக்ஸ்!

ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை இறுக்கிப்பிடித்த படத்தில், அந்த க்ளைமாக்ஸ் ஆடலும்... பாடலும்... செம ஜாலி உட்டாலக்கடி!

சின்ன பட்ஜெட்டில் எடுத்தால் ரிஸ்க் கம்மி என்ற சமீப ட்ரெண்டை முயற்சித்திருக்கிறார் கமல். படத்தின் பலமும் அதுவே... பலவீனமும் அதுவே!

- விகடன் விமர்சனக் குழு