சினிமா
Published:Updated:

கோலிவுட் வேடந்தாங்கல்!

விகடன் டீம்

த்ரிஷா, அசின், தமன்னாக்கள் ஆங்காங்கே செட்டில் ஆக, காலி இடத்தை நிரப்ப எட்டுத் திக்கிலும் இருந்து படபடத்து வந்திருக்கிறார்கள் பட்டாம்பூச்சிகள். கோடம்பாக்க வேடந்தாங்கலில் தஞ்சம் அடைந்திருக்கும் அழகிகளின் அறிமுகம்...

 ஜெராக்ஸ் கேத்ரீனா!

கோலிவுட் வேடந்தாங்கல்!

ஷாரின் கானின் அம்மா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். வாரிசுகள் அரசியலில் மட்டும்தான் வர வேண்டுமா? ஷாரினும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார். சல்மான் நடிக்கும் படம் ஒன்றில் பத்தோடு பதினொன்றாக ஆடிக்கொண்டு இருந்த ஷாரின், சல்மானின் கண்ணில் பட்டது அதிர்ஷ்டம்தான். ஐஸ்வர்யா ராயைப் பிரிந்ததும் அவர் சாயலில் இருந்த சினேகா உல்லாலை நடிக்கவைத்தார் சல்மான். இப்போது கேத்ரீனா கைஃபை சல்மான் பிரிந்திருக்கிறார். அவருடைய ஜெராக்ஸ்போல இருக்கும் ஷாரினை விட்டுவிடுவாரா என்ன? 'வீர்’ படத்தில் ஷாரினைத் தனக்கு ஜோடியாக்கி புகழ் வெளிச்சம் பாய்ச்சினார். கேத்ரீனாவோடு நடிக்க வேண்டும் என்பது நம்மூர் தல, தளபதி, புயல் நடிகர்களின் கனவு. இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை. அதனால், அவரது ஜெராக்ஸ் ஷாரின் கானை விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்’ படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்!

 மாடர்ன் மயில்!

கோலிவுட் வேடந்தாங்கல்!

'வாகை சூட வா’வில் விழிகளால் அபிநய நாட்டியம் ஆடியிருக்கும் நாயகி இனியா, கேரளக் கரையில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் அழகு கதகளி. மலையாள ஸ்ருதி தமிழுக்காக இனியாவாக மாறிக்கொண்டார். நான்காவது படிக்கும்போதே நடிப்புப் பக்கம் வந்துவிட்டவர், இதுவரை எக்கச்சக்கக் குறும்படங்களில் தலைகாட்டிவிட்டார். 2005-ல் 'மிஸ் திருவனந்தபுரம்’, 2010-ல் 'மினி ஸ்க்ரீன் மகாராணி’ என அழகுப் பட்டங்கள் அலங்கரிக்கும் வீட்டு வரவேற்பறை. கிளாஸிகல் டான்ஸ் கற்று அரங்கேற்றம் முடித்திருப்பவர், இப்போது சல்சா, ஹிப் ஹாப் என மாடர்ன் பக்கம் மனசைத் திருப்பியிருக்கிறார். அடுத்ததாக, அருள்நிதியோடு 'மௌன குரு’ படத்தில் நடித்து வருகிறார் இனிய இனியா!

டார்லிங் டார்லிங்!

கோலிவுட் வேடந்தாங்கல்!

நிஷா அகர்வால்... தெலுங்கில் கிளாமர் காட்டி, தமிழில் முகம் காட்ட இருக்கும் கிளாமர் இளவரசி. இவரின் அக்கா காஜல் அகர்வால் என்பது ஹாட் விசிட்டிங் கார்டு! காலேஜ் படிக்கும்போதே பார்ட் டைம் மாடலாக இருந்தவர், 'ஏமன்டி ஈ வேலா’ படத் தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார். ஊரே 'டார்லிங்’ என்று கூப்பிட ஆசைப்படும் காஜலை, 'டார்லிங்’ என்று அழைக்கும் அன்புத் தங்கச்சி. ஆந்திராவில் அக்காவோடு இணைந்து விளம்பரப் படங்களில் நடிப்பதுதான் நிஷாவின் லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் விமலுடன் 'இஷ்டம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ரொம்பவே இஷ்டத்தோடு காத்திருக் கிறார்கள் தமிழ் ரசிகர்கள்!

ஓமணப் பெண்ணே!

கோலிவுட் வேடந்தாங்கல்!

பார்வதி ஓமனக் குட்டன்... கேரளா பார்ட்டி... மும்பையில் வசிக்கும் பியூட்டி. 2008-ல் 'மிஸ் இந்தியா வேர்ல்டு’ வென்றவர். அதே வருடத்தில் 'உலக அழகிப் போட்டி’யில் இரண்டாம் இடம் வென்று இந்தியக் கவனம் ஈர்த்தவர். இந்தியில் 'யுனைடெட் சிக்ஸ்’ என்கிற படத்தில் நடித்தவர் அடுத்ததாக, மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கத்தில் டபுள் ரோலில் நடிக்கவிருக்கிறார். கேரளக் கிளிகள் தமிழில் தலைகாட்டாமல் தாவிச் செல்ல முடியுமா? 'பில்லா-2’ படத்தில் 'தல’யோடு தலைகாட்ட இருக்கிறார் இந்த ஓமனப் பெண்!

ஆறடி அல்வா!

கோலிவுட் வேடந்தாங்கல்!

றடி உயரத்துக்கு அடுக்கிவைத்த அல்வாபோல இருக்கிறார் தீக்ஷா சேத்! தெலுங்கில் 'வேதம்’ படத்தில் (தமிழில் 'வானம்’) அல்லு அர்ஜுன் ஜோடியாக தம்மாத்துண்டு ரோலில் தலைகாட்டினார் தீக்ஷா. கொஞ்ச நேரம்தான். ஆனாலும், அதிலேயே அசரடித்த அவரது அழகு... ரவி தேஜா, கோபிசந்த் என்று தெலுங்கின் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு அவரை ஜோடி ஆக்கியது! இரண்டு படங்கள் ஹிட் அடிக்க, திமுதிமு என்று தீக்ஷாவைப் பார்த்தாலே தீப்பிடித்ததுபோலத் துடிக்கிறார்கள் ரசிகர்கள். தெலுங்கு ஹீரோயின் தமிழுக்கு வரும் ஜனநாயக மரபை மீறவில்லை தீக்ஷாவும். விக்ரமோடு 'ராஜபாட்டை’, சிம்புவோடு 'வேட்டை மன்னன்’ என்று அறிமுகத்திலேயே தமிழர்களை அட்டாக் பண்ண தீக்ஷா சேத் தயார்!

கார்டன் காக்டெய்ல்!

கோலிவுட் வேடந்தாங்கல்!

பூஜா ஹெக்டே... கார்டன் சிட்டி பெங்களூரின் ஜில் பியூட்டி! 2008-ல் 'மிஸ் சவுத் இந்தியா’ ரன்னர்-அப், 2009-ல் 'மிஸ் இந்தியா டேலன்டட் கேர்ள்’, 2010-ல் 'மிஸ் கிளாமர் ஹேர் ஸ்டைல்’ என்று ஒவ்வொரு வருடத்தையும் விருதுகளால் அடையாளப்படுத்துபவர். வழக்கமாக, அழகு ஹீரோயின்களை அழுக்கு ஆக்குவது மிஷ்கினின் ஸ்டைல். 'முகமூடி’ படத்துக் காக பூஜா ஹெக்டேவைக் கன்னட பூமியில் இருந்து கடத்தி வந்திருக்கிறார் மிஷ்கின். படத்தில் பூஜா அழகா இருப்பாரா, இல்லை... அழுக்காக இருப்பாரா?