Published:Updated:

“அந்த குண்டுப் பையன் நான்தான்!”

பா.ஜான்ஸன்

“அந்த குண்டுப் பையன் நான்தான்!”

பா.ஜான்ஸன்

Published:Updated:

'போக்கிரி’யில் அசினின் தம்பியாக வடிவேலுவுடன் அட்ராசிட்டி செய்த 'கொழு கொழு’ தம்பி இந்தத் தம்பிதான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பரத் இப்போது ஸ்லிம் அண்டு ஸ்லீக். 'இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்த திருப்தியில் இருக்கிறார் பரத். 

''ஆமாங்க... அந்தக் குண்டுப்பையன் நான்தான். எப்படியோ உடம்பைக் குறைச்சாச்சு. ஆனா, இப்போதைக்குப் படிப்புல மட்டும்தான் கவனம் செலுத்துறேன். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எந்த முடிவும் எடுக்கலை. ஆனா, 'என்ன நடக்கணும்னு இருக்கோ, அது நடக்கட்டும். மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’னு முடிவை ஆண்டவன் கையில விட்டுட்டேன். இப்போ அனுஷ்கா அக்காகூட 'இஞ்சி இடுப்பழகி’ படம் முழுக்க வர்ற மாதிரி ஒரு ரோல் பண்ணியிருக்கேன். அது என்னை இன்னும் ஒரு படி மேலே கொண்டுபோகும்.''

 “அந்த குண்டுப் பையன் நான்தான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நிறைய ஹீரோக்களுடன் நடிச்சிருக்கீங்க... யாரோட ரொம்ப க்ளோஸ்?''

''எனக்கு எல்லா ஹீரோக்களும் க்ளோஸ்தான். விஜய் அண்ணா ரொம்ப நல்ல டைப். தோள் மேல கைபோட்டுப் பேசுவார். தனுஷ் அண்ணாவும் அப்படித்தான்... ரொம்ப சகஜமாப் பழகுவார். எனக்கு ஓவியம் வரையறது ரொம்பப் பிடிக்கும். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதோ வரைஞ்சுட்டு இருந்தேன். யாரோ என் தோள்மேல கை வெச்சாங்க. திரும்பிப் பார்த்தா, தனுஷ் அண்ணா. 'ரொம்ப நல்லா வரையற’னு பாராட்டினார். கமல் சார், விஜய் அண்ணா, சிம்பு அண்ணா மூணு பேரையும் வரைஞ்சு அவங்ககிட்ட போய்க் கொடுத்தேன். எல்லாரும் செம ஹேப்பி. சிம்பு அண்ணா, 'நம்பவே முடியலைடா’னு கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். தெலுங்குல மகேஷ் பாபு அண்ணா, விஷ்ணு அண்ணா, மனோஜ் அண்ணா எல்லாரும் அவங்க குடும்பத்துப் பையன்போல என்கூட ஜாலியாப் பேசுவாங்க.''

''சின்ன வயசுல இருந்து நடிக்கிறீங்க... படிப்பை அது பாதிக்கலையா?''

'' 'ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். போகப் போகப் பழகிடும்னு சொல்வாங்கல... அந்த மாதிரிதான். நான் அடிப்படையில் நல்லா படிக்கிற பையன். நடிப்பு - படிப்பு ரெண்டையும் ஸ்மூத்தா பேலன்ஸ் பண்ணப் பழகிட்டேன்.காலேஜ்ல மெக்கட்ரானிக்ஸ் படிக்கிறதால இப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு ரோபோட்டிக்ஸ் ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட்.  படிப்புக்கு முதல் இடம் கொடுத்து நடிப்பைக் குறைச்சுக்கிட்டேன். அதனாலதான் எங்க காலேஜ்ல நடந்த சயின்ஸ் எக்ஸ்போல என்னால ஃபர்ஸ்ட் வர முடிஞ்சது.''

''மறக்க முடியாத பாராட்டு?''

'' 'பஞ்சதந்திரம்’ படத்தில் என் நடிப்பை கமல் சார் பாராட்டினதை மறக்க முடியாது. 'உத்தமபுத்திரன்’ படம் ஆடியோ ரிலீஸப்போ தனுஷ் அண்ணா, 'இந்தப் படத்தில நான் மட்டும் ஹீரோ இல்லை. இன்னொரு ஹீரோவும் இருக்கார்’னு என்னை மேடையேத்திப் பாராட்டினார். மறக்கவே முடியாத தருணம் அது.''

 “அந்த குண்டுப் பையன் நான்தான்!”

''ஃபேன்ஸ் எல்லாம் உண்டா, என்ன சொல்றாங்க?''

''ஒருமுறை திருப்பதி போயிருந்தேன். மலை பகுதியைச் சேர்ந்த சிலர் என்னை ஃபாலோ பண்ணிட்டே வந்தாங்க. ஒரு இடத்துல நிறுத்தி, 'நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. எங்களுக்காக ஒரு படத்துல இதைப் போட்டுக்கிட்டு நடிக்கணும்’னு சொல்லி ஒரு பாசி மாலையைக்  கொடுத்துட்டுப் போனாங்க. அதை இப்போ நினைச்சாலும் நெகிழ்ந்திருவேன்.''

வீட்ல என்ன சொல்றாங்க?

'' 'நைனா’, 'பஞ்சதந்திரம்’ படங்கள் பார்த்துட்டு தெலுங்குல நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்போ எனக்கு தெலுங்கு கத்துக்கொடுத்தது அப்பாதான். நான் நடிக்க ஆரம்பிச்சதும் என்னைக் கவனிச்சுக்கிறதுக்காக அம்மா, தன்னோட மார்க்கெட்டிங் வேலையை விட்டுட்டு முழுநேரமும் என்னைப் பார்த்துக்க வந்துட்டாங்க. என் குடும்பம்தான் எனக்கு எல்லாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism