சினிமா
Published:Updated:

பாரதிராஜா, செல்வராகவன், ரஜினி, விஜய், சைந்தவி.... வாழ்க்கை அழகா இருக்கு!

சார்லஸ்படம் : சு.குமரேசன்

##~##

கோலிவுட்டின் 'மெல்லிசை இளவரசன்’ ஜி.வி.பிரகாஷ் குமார்! 'மதராசபட்டினம்’, 'ஆடுகளம்’, 'தெய்வத் திருமகள்’, 'மயக்கம் என்ன’ என வரிசை கட்டி ஹிட்! இளம் இயக்குநர்களின் செல்லமாக இருந்தவர், இப்போது பாரதிராஜாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதற்கு வாழ்த்து சொல்லி பேட்டியைத் தொடங்கினேன்...

 ''தமிழ் சினிமாவின் இப்போதைய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி பாரதிராஜா சார். படம் சூப்பர் ஸ்க்ரிப்ட். பீரியட் படம் என்பதால், நிறைய ஸ்கோப் இருக்கு எனக்கு. ஒரு நாவல் மாதிரி படம் ரொம்ப அழகா இருக்கும்!''

''செல்வராகவனுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை... திரும்பவும் பிரிஞ்சிட்டீங்களாமே?''

''சேர்ந்தே இருக்க செல்வராகவனும் நானும் என்ன கணவன் - மனைவியா? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் படம் பண்ணணும்னு எந்தக் கட்டாயமும் இல்லையே? 'ஆயிரத்தில் ஒருவன்’, 'மயக்கம் என்ன’ - செல்வராகவனின் இந்த இரண்டு படங்களுக்கும் பெஸ்ட் மியூஸிக்தான் கொடுத்திருக்கேன். இயக்குநர் களுக்கு வெரைட்டி தேவை. விதவிதமான  இசையமைப்பாளர்களுடன் வேலை செய்யும்போதுதான் ஒரு இயக்குநரின் படங்களில் இசை வெவ்வேறு ரசனையுடன் வெளிப்படும். இன்னும் சொல்லணும்னா, 'ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் நீங்க ஒரு படம் பண்ணுங்க. அது உங்களை வேற லெவலுக்குக் கொண்டுபோகும்’னு நானே தொடர்ந்து செல்வாகிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன்!''

பாரதிராஜா, செல்வராகவன், ரஜினி, விஜய், சைந்தவி.... வாழ்க்கை அழகா இருக்கு!

''சமீபத்தில் உங்களை நெகிழவைத்த பாராட்டு?''

'' 'மதராசபட்டினம், 'ஆடுகளம்’ படங்களைப் பார்த்துட்டு ரஜினி சார் பாராட்டி யதை மறக்கவே முடியாது. ரீ-ரிக்கார்டிங்ல இருந்து பாடல், சரணம்னு ஒவ்வொன்றை யும் தனித்தனியாக் குறிப்பிட்டுப் பாராட்டி னார். அவருக்கு இவ்வளவு டெக்னிக்கல் விஷயங்கள் தெரிஞ்சிருக்கானு எனக்கு அவ்வளவு ஆச்சர்யம். 'ஆடுகளம்’ பாடல்கள் கேட்டுட்டு 'இந்தப் படம் உங்களை வேற ரேஞ்சுக்குக் கொண்டுபோகும்’னு சொன்னார். ரொம்ப தேங்க்ஸ் ரஜினி சார்!''

'' 'நீ போட்ட பாட்டு சரி இல்லைப்பா’னு முகத்துக்கு நேரே யாரும் சொல்லி இருக்காங்களா?''

''முகத்துக்கு நேராவா... முதுகில் ரெண்டு அடி அடிச்சே 'இந்தப் பாட்டு நல்லாவே இல்லை.. வேஸ்ட்’னு சொல்வா என் தங்கச்சி பவானிஸ்ரீ. அதேசமயம் பாட்டு நல்லா இருந்தா, பாராட்டிக் குவிச்சுடுவா.  அவகிட்ட பாஸானா அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகிடும்னு தைரியமா இருக்கலாம்!''

''உங்களுக்குப் பிடிச்ச பின்னணிப் பாடகர் யார்?''

''ஷ்ரேயா கோஷல்! என்னைப் பொறுத்தவரை அவங்கதான் அடுத்த லதா மங்கேஷ்கர்!''

''ஆங்கில இசை ஆல்பங்களில் இருந்து கம்போசிஷன்களை அப்படியே காப்பி அடிப்பதாக உங்கள் மேல் இருக்கும் விமர்சனம் குறித்து...''

'' 'ஆரிரோ... ஆராரிரோ’, 'பூக்கள் பூக்கும் தருணம்’னு நல்ல மெலடி களைக் கொடுக்க முடிஞ்ச நான் ஏன் காப்பி அடிச்சு மியூஸிக் பண்ணணும்? 'தெய்வத் திருமகள்’ படத்தில் வர்ற 'பப்பப்பாபாப்பா’ பாட்டைத்தான் நீங்க கேக்குறீங்கன்னு தெரியுது. அந்தப் பாட்டைப் பொறுத்தவரை ஒரிஜினல் மாதிரியே

பாரதிராஜா, செல்வராகவன், ரஜினி, விஜய், சைந்தவி.... வாழ்க்கை அழகா இருக்கு!

வேணும்னு இயக்குநர் விஜய்தான் கேட்டு வாங்கினார். அதை நான் செஞ்சு கொடுத்தேன். இயக்குநர்கள் கேட்கும் போது என்னால் வேண்டாம்னு சொல்ல முடியலை. ஆனா, இனி மேல் அப்படி மியூஸிக் பண்ண மாட்டேன்!''

''சைந்தவியுடனான லவ் லைஃப் எப்படி இருக்கு?''

''நான் ஒண்ணுமே இல்லாதவனாக இருந்தபோதே என்கூட வந்தவர் சைந்தவி. நாளைக்கே நான் ஒண்ணுமே இல்லாமல் போனாலும் என்கூட இருக்கப் போறவங்களும் அவங்கதான். எனக்கும் அவங்களுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வாழ்க்கை ஜாலியா இருக்கு. அடுத்த வருஷம் கல்யாணப் பத்திரிகை ரெடி ஆகிடும்!''