சினிமா
Published:Updated:

அமலா பாலுடன் ஒரு 20-20

ம.கா.செந்தில்குமார்

##~##

''டீன் ஏஜ்ல இருந்து லேடி ஏஜுக்குப் போறேன். இந்த 19 வருஷங்களையும் திரும் பிப் பார்க்குறப்ப ரொம்ப ஹேப்பி. இவ்வளவு சின்ன வயசுல ஏதோ பெருசா சாதிச்சுட்ட மாதிரி இருக்கு. 16 வயசுல இன்னும் ஒரே வருஷத்துல வாழ்க்கையில இவ்வளவு கலர் சேரும்னு நினைச்சுக்கூடப் பாக்கலை. நான் ரொம்ப லக்கி!'' - கிளி கொஞ்சுவதுபோலப் பேசிக்கொண்டே இருக்கிறார் அமலா பால். அக்டோபர் 26-ல் அமலாவுக்கு வயசு 20. அமலாவுடன் ஒரு 20-20...

 1. ''நீங்க என்ன ஆகணும்னு வீட்ல நினைச்சாங்க?''

''என்ட்ரன்ஸ் முடிஞ்சு இன்ஜினீயரிங் சேர்ற ஐடியா... திடீர்னு சினிமா சான்ஸ். அப்போ வீட்ல கொஞ்சம் பிரஷர். நான் தான் எங்க குடும்பத்துல இருந்து சினிமா வுக்கு வர்ற முதல் ஆள். ஆனா, அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. சக்சஸோ, ஒரு கோடி ரூபாய் சம்பளமோ பெரிய விஷயம் இல்லை. எனக்குக் கிடைக்கிற நல்ல பேர் தான் அவங்களைச் சந்தோஷப்படுத் தும்!''

அமலா பாலுடன் ஒரு 20-20

2. ''சாக்லேட் பாய் ஆர்யா..?''

''ஆர்யா நிச்சயம் சாக்லேட் பாய் இல்லை. பயங்கர மெச்சூர்ட். ரொம்பவே சிம்பிள்!''

3. ''யாரை மிஸ் பண்றீங்க?''

''யாரை இல்லை... எதை? ஷூட்டிங்ல இருக்கும்போது காலேஜ் ஃபன், ஃப்ரெண்ட்ஸ்கூட நேரம் செலவழிக்கிறது, குடும்ப விழாக்கள்னு நிறைய மிஸ் பண்றேன்!''

4. ''டியர் ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?''

''ரியா, கென்சா, அச்சு, அஃப்ரா... நாலு பேரும் எனக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ். ரியாவும் நானும் மாடல் ஆகணும்; அச்சுவுக்கு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ஆசை. ரியாவுக்கு மட்டும் நினைச்சது நடக்கலை!''

5. ''நிறைவேறாத ஆசை?''

''பைலட் ஆகணும் ஆசைப்பட்டது!''

அமலா பாலுடன் ஒரு 20-20

6. ''தமிழ்நாட்ல பிடிச்ச ஸ்பாட்?''

''ரொம்ப நாள் தங்குறதால சென்னை பிடிக்கும். முதல் பட ஷூட்டிங் நடந்த மதுரை ரொம்பப் பிடிக்கும். அதுவரை அப்படி ஒரு இடத்துக் குப் போனது இல்லை என்பதால், குரங்கனி, தேனி பிடிக்கும். சூப்பர் சாப்பாடு கிடைக்கிறதால காரைக்குடியும் பிடிக்கும்!''

7. சென்டிமென்ட்?

''எந்த சென்டிமென்ட்டும் வெச்சுக்கக்கூடாதுங்கிறதுதான் என் சென்டி மென்ட்!''

8. ''பிரபு சாலமன்?''

''என் குரு. முழு நம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் சொல்லி, அவர்கிட்ட வழிகாட்டுதல் கேட்டுக் கலாம்!''

9. ''சினிமாவில் யார் உங்க ஃப்ரெண்ட்ஸ்?''

''சினிமா ஃப்ரெண்ட்ஸ்னா, அது அந்தப் படத்தோட ஷூட்டிங் முடியிற வரைதான். அப்படிப் பார்த்தா, ஹீரோவில் இருந்து புரொடக்ஷன் பாய் வரை எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்தான்!''

10. ''இந்த லிஸ்ட்ல டைரக்டர் விஜய்க்கு முக்கியமான இடம் இருக்கா?''

''இதுக்குப் பதிலா 'உங்களுக்கும் டைரக்டர் விஜய்க்கும் லவ்வா’னு நேரடியாவே கேட்டு இருக்கலாம். விஜய் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். லைஃப்ல நிறைய பேரைப் பார்த்திருக்கேன். அதுல விஜய் ரொம்பவே ஸ்பெஷல்!''

11. ''அவ்வளவுதானா?''

''அவ்வளவேதான். என் காதுக்கே எல்லா ரூமர்ஸும் வருது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. ரொம்பவே கம்ஃபர்டபிளா இருக்கோம்!''

12. ''உங்க வருங்கால கணவர் எப்படி இருக்கணும்?''

''அப்படிலாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனா, பார்த்ததுமே 'இவன் நமக்கான ஆள்’னு தோணணும். அந்த இளவரசனுக்காகக் காத்திருக்கேன்!''

அமலா பாலுடன் ஒரு 20-20

13. ''நடிகை ஆன பிறகு, யாராவது உங்ககிட்ட லவ் புரொபோஸ் பண்ணி இருக்காங்களா?''

''யார் புரொபோஸ் பண்ணலைனு கேளுங்க! ஆனா, நானே புரொபோஸ் பண்ண கதை தெரியுமா? பக்கத்து வீட்டுப் பையன் அவன். சின்ன வயசுல இருந்தே என் ஃப்ரெண்ட்தான். அவன் கூட வந்தாதான் ஸ்கூலுக்கே போவேன்னு அடம் பிடிப்பேனாம். அவனுக்கு நான் லவ் லெட்டர் கொடுத்தேனாம். ஆனா, அப்போ நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிச்சுட்டு இருந்தேனாம்! ஹாஹாஹா... சென்சேஷன் தலைப்பு ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சா?''

14. ''உங்க ரோல் மாடல்?''

''கல்ச்சர், வேல்யூஸ்னு நிறையக் கத்துக் கொடுத்த என் அம்மா. சினிமாவில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித்!''

15. ''உங்களிடம் உங்களுக்கே பிடிச்ச விஷயம்?''

''எந்தச் சூழ்நிலையையும் ஈஸியா அடாப்ட் பண்ணிக்குவேன்!''

16. ''பிடிக்காத விஷயம்?''

''எனக்கு ஒருத்தரோட பழக்கவழக்கங்கள் பிடிக்கலைன்னா, அவங்ககூட பேசக்கூட மாட்டேன்!''  

17. ''விக்ரம்...''

''அவர்கூட நடிச்சது இப்பவும் ஒரு கனவு மாதிரி இருக்கு. விக்ரம்... என் ஃப்ரெண்ட், அட்வைஸர், மனசுக்கு நெருக்கமானவர்!''

18. ''அனுஷ்கா, சமீரா...''

''இவங்ககூட நடிச்சப்பலாம் 'உங்களுக்குள்ள ஈகோ க்ளாஷ் இல்லையா’னு கேட்டுட்டே இருந்தாங்க. ஆனா, ஆஃப் ஸ்க்ரீன்லயும் நிறைய ஷேர் பண்ணிப்போம். ரெண்டு பேருமே நடிப்பு இல்லாத உண்மையான ஃப்ரெண்ட்ஸ்!''

அமலா பாலுடன் ஒரு 20-20

19. ''லிங்குசாமி...''

''வொர்க்கஹாலிக்! ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா இருப்பார். என்னை 'சமீரா’னு கூப்பிடுவார். அவங்களை அமலாம் பார். மேடியை ஆர்யாம்பார். ஆர்யாவை அமலாம்பார். கேட்டா, உங்க யாரையும் பிரிச்சுப் பாக்கலைம்பார். அவர் ஃபுல் சார்ஜ்டு பேட்டரி ஆஃப் ஃபன்!''

20. ''தமிழ் சினிமாவில் தமன்னாவை அமலா ரீப்ளேஸ் பண்ணிட்டாங்களா?''

''இப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி அவங்களைப் பார்த்துப் பேசிட்டு இருந்தேன். 'நான் வந்தபோதும் இப்படித்தான் வேற யாரையோ நான் ரீ-ப்ளேஸ் பண்ணிட்டதா சொன்னாங்க. இது சினிமாவில் நேச்சுரல்’னு சொன்னாங்க. நீங்க இதுக்கு என்ன சொல்றீங்க?''