Published:Updated:

வேதாளம் - சினிமா விமர்சனம்

வேதாளம் - சினிமா விமர்சனம்

வேதாளம் - சினிமா விமர்சனம்

வேதாளம் - சினிமா விமர்சனம்

Published:Updated:

'மாணிக்கத்தின்’ பாசமும், 'பாட்ஷா’வின் ஆவேசமும் கலந்துகட்டி மாஸ் பல்ஸ் பிடித்து மரம் ஏறினால்... 'வேதாளம்’! 

அண்ணன் அஜித்தும், தங்கச்சி லட்சுமி மேனனும் பாசமலர்கள். ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடக்கூடப் பிடிக்காத அஜித், போலீஸுடன் டெம்பிள் ரன் விளையாடும் வில்லன் ஒருவனைக் காட்டிக்கொடுக்கிறார். அஜித்தைப் பழிவாங்க வில்லன் குரூப் அவரைத் தூக்கிச் செல்ல, 'நீங்க என்னைத் தூக்கிட்டு வரலைடா... நானே ஸ்கெட்ச் போட்டு வந்திருக்கேன்’ எனத் தெறிக்கவிடுகிறார். அஜித் யார்... லட்சுமி மேனன் யார்... ஆச்சர்ய ஃப்ளாஷ்பேக்கும் துவம்ச க்ளைமாக்ஸும் தொடர்கின்றன.

அட... பலப்பல வருடங்களுக்குப் பிறகு பளீர் ஸ்மைல் அஜித். பார்த்துப் பழகிய ஆக்‌ஷன் அதகளங்களுக்கு இடையே, அந்த சாந்தசொரூபி கணேஷ் பாத்திரம் கச்சிதம். தன் ரசிகர்களை மட்டும் கணக்கில்கொள்ளாமல், தங்கச்சி சென்டிமென்ட், காமெடி, தாய்க்குல ஆதரவு அத்தியாயங்கள் என 'மேட்னி ஷோ ஹிட் ஃபார்முலா’வுக்கு அட்டகாசமாகப் பொருந்தியிருக்கிறார். படம் நெடுக அவருடைய பளிச் ஸ்கிரீன் பிரசென்ஸைத் தாண்டி கவனம் ஈர்ப்பது லட்சுமி மேனன் மட்டுமே. ஹீரோயின் ஸ்ருதியே பாடல், காமெடி காட்சிகளில் மட்டும் கவர்ச்சி காட்ட (ஆம்... காமெடிக்கு எனக் கவர்ச்சி காட்டுகிறார்), டைட்டில் முதல் எண்டு கார்டு வரை பல உணர்வுகளில் அழகு காட்டுகிறார் லட்சுமி மேனன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதாளம் - சினிமா விமர்சனம்

சூரி, கோவை சரளா, பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், யோகிபாபு... என கோடம்பாக்கத்தின் முக்கால்வாசி காமெடியன்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், காமெடியை மட்டும் காணவில்லை. அரை டஜன் வில்லன்கள் இருந்தாலும், ஸ்கோர் செய்யும் வில்லன் என்னவோ அஜித்தான்!

வேதாளம் - சினிமா விமர்சனம்

மாஸ் என முடிவெடுத்து இறங்கி சீன் பிடித்தது எல்லாம் ஓ.கே. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்ட திரைக்கதைதான் உதைக்கிறது. ரசிகர்கள் யூகிக்கும் திசையில் இருந்து இம்மியும் பிசகாமல் பயணிக்கும் திரைக்கதைக்கு டிஸ்லைக்ஸ். டூயட்களைத் தவிர்த்த புத்திசாலித்தனத்தை திரைக்கதை ட்ரீட்மென்ட்டிலும் இயக்குநர் காட்டியிருந்தால், 4-ஜி வேகத்தில் நிஜமாகவே தெறிக்கவிட்டிருக்கலாம்.

இரண்டு குத்து பாடல்களில் அஜித் ரசிகர்கள் பல்ஸை எகிறவைக்கும் அனிருத், பின்னணி இசையிலும் டெம்போ ஏற்றுகிறார்.

முருங்கை மரமே ஈஃபிள் டவர் ஆகிவிட்ட காலம். ஆனாலும், பழைய கதை சொல்லியே அதில் ஏற முயற்சிக்கிறான் இந்த 'வேதாளம்’!

- விகடன் விமர்சனக் குழு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism