பிரீமியம் ஸ்டோரி
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானின் பிறந்தநாள் அன்று அவனது மனைவி, ஜானை ஆச்சர்யப்படுத்த வெளியூரில் இருக்கும் ‘அந்த வகை’ பாருக்கு அழைத்துச் சென்றார். லிட்டில் ஜான் இதுவரை அவர் மனைவி முன் குடித்ததேயில்லை. அங்கு இருக்கும் பார் அட்டெண்டர் “என்ன ஜான் எப்படி இருக்கீங்க?” என்றார். மனைவி சந்தேகிப்பதைப் பார்த்த ஜான், “நாங்கள் எல்லாம் ஃபேஸ்புக் நண்பர்கள். அது தான் நலம் விசாரிக்கிறார்”என்றார். அடுத்து ஒரு இளம்பெண் அங்கு வந்து, “என்ன ஜான், ரொம்ப நாள் ஆச்சு?”எனக் கேட்க, ஜானின் மனைவி செம காண்டு ஆனார். “உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்டா. நான் ரூமுக்குப் போறேன்” எனக் கோபமாக வெளியே நின்ற டாக்ஸியில் ஏறச் சென்றார். ஜானும் வேகமாய் டாக்ஸியில் ஏற,“என்ன ஜான், குடும்பப்பொண்ணு மாதிரியே இருக்கு” என்றார் டாக்ஸி ஓட்டுனர்.

- மதயானை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு