Published:Updated:

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

Published:Updated:

கொஞ்சம் `எக்ஸ்ட்ரா' எடையோடு இருப்ப தால் விதவிதமான இம்சைகளை சந்திக்கும் ‘இஞ்சி இடுப்பழகி'யின் கதை!

சிறு வயதில் இருந்தே அனுஷ்கா டிரிபிள் எக்ஸ்எல் சைஸ்தான். பாசத்தோடு ஜிலேபி வாங்கித் தரும் அப்பா திடீரென மறைந்துவிட, அனுஷ்காவை நல்ல இடத்தில் திருமணம் செய்துதரப் போராடுகிறார் அம்மா ஊர்வசி. ஒரே பிரச்னை ‘ஓவர் வெயிட்.’ அதை எப்படியாவது குறைக்கச் சொல்லி ஊர்வசி பிரஷர் தர, டுபாக்கூர் வெயிட் லாஸ் கிளினிக்கில் சேர்கிறார் அனுஷ்கா. அங்கே அவர்கள் தரும் தவறான மருந்தால் அனுஷ்காவின் தோழி நோய்வாய்ப்பட, தோழிக்கு நீதி கேட்டு ஆர்யாவுடன் களம் இறங்குகிறார். கடைசியாக குண்டு அனுஷ்காவுக்கும், ஃபிட்னெஸ் ஃப்ரீக் ஆர்யாவுக்கும் திருமணம் நடந்ததா என்பது க்ளைமேக்ஸ்.

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருமனான உடல், குழந்தைத்தனமான முகம் என கேரக்டருக்கு ஏற்ப அழகாக எடை கூடியிருக்கிறார் ஸ்வீட்டி அனுஷ்கா. ஆர்யாவைப் பார்த்து ஜொள்ளுவிட்ட பின் தாத்தாவிடம் `ஜிலேபி' என வழிவதாகட்டும், எடை மெஷின் சொல்லும் ஜோதிடத்தைப் படித்து குழந்தைபோல துள்ளுவதாகட்டும்... தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோயின்ஸ் லிஸ்ட்டில் இடம்பிடிக்கிறார். அனுஷ்கா அடிப்பது எல்லாமே சிக்ஸர் என்பதால், நான்-ஸ்ட்ரைக்கர் ஆர்யாவுக்கு வேலை இல்லை. கலகல கண்டிப்பான அம்மாவாக ஊர்வசி பெர்ஃபெக்ட்.

உடலில் கொழுப்பு மட்டும் கூடினால் ஆரோக்கியம் அல்ல; அதுபோல படத்தில் ஸ்வீட்டி மட்டுமே ஜொலிக்கிறார். கதை கண்டபடி அலைபாய,  திரைக்கதை தொளதொள தொப்பையாகத் தள்ளாடுகிறது. சேலஞ்ச் முடிந்து 25 லட்சம் சேர்ந்த இடத்தில், அனுஷ்கா ஆர்யாவைக் கட்டிப்பிடித்திருந்தால் படம் முடிந்துவிட்டது. ஆனால், அங்கிருந்து ஒரு பைபாஸ் போட்டு கால் மணி நேரம் ஆடியன்ஸை தரதரவென இழுத்துச் செல்கிறார்கள்.

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

ஒட்டாத உதட்டு அசைவு, தேவையற்ற ஐட்டம் பாடல், அதிகமான தெலுங்கு நடிகர்கள்... என படம் நெடுக டப்பிங் பட எஃபெக்ட். அனுஷ்காவின் நட்புக்காக ஜீவா, ஹன்சிகா, தமன்னா, நாகார்ஜுனா, ராணா என ஸ்டார் பட்டாளமே வந்து அட்வைஸ் மழை பொழிகிறார்கள். அதை இன்னும் பளிச் எனச் சொல்லி இருந்தால், `குண்டாக இருப்பது பிரச்னை அல்ல; ஃபிட்டாக இருக்க வேண்டும்' என்ற மெசேஜாவது போய் சேர்ந்திருக்கும்.

மரகதமணியின் இசையில் ‘தெலுங்கு’ ஃப்ளேவர் மட்டுமே. பவின் புடியின் எடிட்டிங் ஸ்லீப்பிங் மோடிலேயே இருப்பது சோகம். புதுப்புது ‘ஃபிஷ் ஐ’ லென்ஸ் மூலம் ஈர்க்க நினைக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.

இந்தப் படத்துக்காக அனுஷ்கா எடை ஏற்றிய அளவுக்காவது கதையில் வலுசேர்த்திருக்கலாம். `இஞ்சி இடுப்பழகி' யிடம் இருந்து வெறும் காத்துதாங்க வருது!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism