Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 1

‘‘தலைவர் சினிமா பைத்தியமா... எப்படி?’’

‘‘தேர்தல் அறிக்கையோட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்போறாராம்!’’

 - வந்தவாசி குமார்

ஜோக்ஸ் - 1

‘‘மீட்டிங்ல என் பேச்சு எப்படிய்யா?’’

‘‘அவதூறு வழக்குல ஆஜர் ஆகுற ஸ்டாண்டர்டுல இருந்துச்சு தலைவரே!’’

 - பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 1

‘‘உங்க தலைவர் எப்படிப்பட்டவர்?’’

‘‘அவர் போகாத ஜெயில் இல்லை... வாங்காத பெயில் இல்லை!’’

 - பெ.பாண்டியன்

ஜோக்ஸ் - 1

‘‘நான் மோடியைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்... ‘த்ரிஷா’வின் வழிகாட்டுதலின்படிதான் நீங்கள் நடப்பதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா?’’

‘‘நாசமாப்போச்சு... அது ‘அமித் ஷா’ தலைவரே!’’

 - கே.லக்ஷ்மணன்
 

அடுத்த கட்டுரைக்கு