
“தெறிக்கவிடலாமா...?”
“அச்சச்சோ... தலைவரே, நாம வெள்ள நிவாரணப்பொருள் கொடுக்க வந்திருக்கோம். அடக்கிவாசிங்க..!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- டி.சிவக்குமார்

“ரோட்டைக் காணோம்...”
“என்னய்யா சொல்றே?”
“அட... உங்களைச் சந்தேகப்படலை தலைவரே... இது வெள்ளத்தால...”
- தஞ்சை தாமு

‘‘ஹலோ சன் மியூசிக்... சொல்லுங்க... உங்களுக்கு என்ன ‘பாட்டு’ வேணும்?”
“பாட்டெல்லாம் வேணாம், வேளச்சேரிக்கு ஒரு ‘போட்டு’ மட்டும் அனுப்புங்க!”
- எஸ்கா

“தலைவர் அஜித் ரசிகரா இருக்கலாம். அதுக்காக எதிர்கட்சித் தலைவரைப் பார்த்து, ‘நீ கெட்டவன்னா, நான் கேடுகெட்டவன்’-னு ஓப்பனா மேடையில சொல்றது நல்லாவா இருக்கு..!”
- எஸ்கா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism