Published:Updated:

தமிழின் முதல் ஸோம்பி!

பா.ஜான்ஸன்

தமிழின் முதல் ஸோம்பி!

பா.ஜான்ஸன்

Published:Updated:

‘‘என் முதல் படம் `நாணயம்'. தமிழில் ஒரு முழு நீள பேங்க் ராபரி சப்ஜெக்ட்ல வந்த முதல் படம் அதுதான். ரெண்டாவது படம் `நாய்கள் ஜாக்கிரதை' ஒரு Dog-cop படம். இதுவும் தமிழுக்குப் புதுசு. இது மாதிரி ஒவ்வொரு படத்திலும் புது விஷயம் பண்ணணும்னு விருப்பம். அதனாலதான் இந்த முறை `மிருதன்' படத்தில் ஸோம்பி (Zombie) கான்செப்ட். இதுவும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. சொல்லப்போனா இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல் முறை. இந்தியில வந்த `Go goa gone'கூட ஒரு ஸ்பூஃப் மாதிரிதான் பண்ணியிருப்பாங்க. எல்லாத்தையும் ஃபர்ஸ்ட் பண்ணணும்கிறது என் விருப்பம் கிடையாது. ஆனா, நான் பண்ற விஷயத்தை ஒரு புது ஜானர் மூலமா பண்றதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு’’ உற்சாக இன்ட்ரோ கொடுக்கிறார் `மிருதன்' இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

தமிழின் முதல் ஸோம்பி!

``சத்தமே இல்லாம மூணாவது படம் பண்ணிட்டிருக்கீங்க. நீங்க யார்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்துல இருக்குற பாச்சலூர். சினிமா ஆசையில் விஸ்காம் படிச்சிட்டு நாசர் சார்கிட்ட சேர்ந்தேன்.  அப்போ அவர் ஒரு படம் இயக்குறதா இருந்தது. அந்தப் படத்துக்கான கதை விவாதம் எல்லாம் அவர் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்தில்தான் நடக்கும். `அந்நியன்’, `சந்திரமுகி’, `மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆரம்பிச்சு இன்னும் ரிலீஸே ஆகாத படங்கள் வரை அந்த ஒன்றரை வருஷம் அவர் நடிச்ச எல்லாப் பட ஷூட்டுக்கும் போவேன். அதுக்குப் பிறகு `சரோஜா' படத்தில் வெங்கட் பிரபுகிட்ட உதவி இயக்குநர். அதன் மூலமா எஸ்.பி.பி.சரண் நட்பு கிடைச்சது. அவர்தான் `நாணயம்' படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.''

தமிழின் முதல் ஸோம்பி!

" `ஸோம்பி' ஹாலிவுட்ல ஹிட்டடிக்கும் கான்செப்ட். தமிழுக்கு அது எப்படிப் பொருந்தும்?’’

``நிச்சயம் பொருந்தும். ஹாலிவுட் `ஸோம்பி’ படம் தமிழ்ல டப் பண்ணி ரிலீஸ் ஆனதும், அதை ஓடிப்போய் முதல் ஆளா பார்க்கிறவங்க இங்க அதிகம். எல்லா புது விஷயங்களைப் பார்க்கவும் கொண்டாடவும் இங்க ஆட்கள் இருக்காங்க. `ஸோம்பி’ ராவான சப்ஜெக்ட்தான். அப்படி ஒரு விஷயம் நம்ம ஊர்ல நடந்தா எப்படி இருக்கும்கிறதுதான் ஐடியா. `இப்படி ஒரு வியாதி ஊர் முழுக்கப் பரவிட்டிருக்கு. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறாங்க?'ங்கிறதுதான்  படத்தின் ஒன்லைன்.’’

``இந்தக் கதைக்குள் ஜெயம் ரவி எப்படி வந்தார்?’’

``சிபி கூட இரண்டு படங்கள் பண்ணிட்டேன்.அடுத்து ஜெயம் ரவி சார்கிட்ட கதை சொல்லிட்டு, `கொஞ்சம் டிரிம் ஆகணும் சார்'னேன். நான் எதிர்பார்த்தது மாதிரியே வந்து நின்னார். ஹீரோயின் லஷ்மி மேனனுக்கு டாக்டர் ரோல். இந்தப் படத்தில் இமான் சார்கிட்ட இருந்து வேற மாதிரி ஓர் இசையை நீங்க எதிர்பார்க்கலாம். படம் பொங்கலுக்கு ரிலீஸ்.''

தமிழின் முதல் ஸோம்பி!

`` ‘ஸோம்பி’ கதையை ஷூட் பண்றது சவாலானது இல்லையா?’’

``கூட்டத்தைச் சமாளிக்கிறதுதான் பெரிய சவால். சில காட்சிகள்ல 300-க்கும் மேல ஆட்கள் இருப்பாங்க. அவங்களை ஒழுங்குபடுத்தி தேவையானதை வாங்கணும். ஒரு ஹீரோ, ஹீரோயினுக்கு மேக்கப் போடுற மாதிரி அந்த 300 பேருக்கும் மேக்கப் போடணும். காலையில ஷூட் பண்ணணும்னா, நைட் 12 மணிக்கே மேக்கப் பண்ணி முடிக்கணும். நேருனு ஒரு மேக்கப் மேன்தான் படத்தில், அந்தக் கூட்டத்துக்கே மேக்கப்பைக் கவனிச்சுக்கிட்டார். அதுக்கான பொருட்களை மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ணினோம். சில காட்சிகளுக்காக ஒரு ஊரையே செட் போட வேண்டியிருந்தது. போட்ட செட் மொத்தத்தையும் அடிச்சு உடைக்கிற மாதிரி சீன்ஸ். உடைக்கிறதுக்காகவே அவ்வளவு கஷ்டப்பட்டு செட் போட்டோம்.''

`` `மிருதன்'னுக்கு என்ன அர்த்தம்?''

``ரெண்டு அர்த்தம் இருக்கு. ஒண்ணு, ஜெயிப்பவன் அல்லது ஜெயம். இன்னொண்ணு ஸோம்பி. மதன் கார்க்கிதான் இந்த வார்த்தையைச்  சொன்னார். 'ஸோம்பி'யுடைய சரியான தமிழ் வார்த்தைதான் மிருதன்.''

ஸோம்பி (Zombie)

 1968-ம் ஆண்டு ஜார்ஜ் ரொமேரியோ இயக்கி வெளியான `நைட் ஆஃப் த லிவிங் டெட்' மிகப்பெரிய வெற்றி பெற்ற ஸோம்பி படம். அதன் பிறகு, `இந்த கான்செப்ட்டை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்' என ஓப்பன் சோர்ஸாக வைக்கப்பட்டது.

தமிழின் முதல் ஸோம்பி!

**  'ஸோம்பிகள் மிகக் கொடூரமாக இருப்பார்கள். ரத்தம் குடிப்பவர்கள்' என்ற விஷயமே தவறு. ஒரு மனிதனை இறந்தநிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; அதே நேரம் அவன் உயிரைப் பறிக்கக் கூடாது. கிட்டத்தட்ட நடைப்பிணமாக இருக்க வேண்டும். சொல்லும் வேலைகளை ஓர் அடிமையைப்போல செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகள் பலவற்றின் கதைக்குப் பின்னால், ஒரு ஸோம்பி கூட்டத்தின் உழைப்பு உள்ளது என சில கதைகள் உலவுகின்றன.

** ஸோம்பி என்பது முழுமையாக ஒரு சினிமா கற்பனைதான் என்றாலும், அதை உண்மை எனச் சொல்லி பல கிளைக் கதைகள் முளைத்துவிட்டன. `ஸோம்பி என்பது ரேபிஸ் போன்று ஒரு வைரஸ். அது மனிதனைத் தாக்கும்போது, அவன் மிருகமாகிறான். இப்படி ஸோம்பியான மனிதன், இன்னொருவரைக் கடிப்பதன் மூலம் எச்சிலின் வழியாக ரத்தத்தில் கலந்து கடிபட்டவனும் ஸோம்பியாக மாறுகிறான்’ என்பது அதில் ஒன்று.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism