பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

‘‘ ‘சகிப்புத்தன்மை, நாட்டில் இன்னும் உயிரோடதான் இருக்கு’னு தலைவர் எதை வெச்சு சொல்றார்?”

‘‘சகிப்புத்தன்மை இல்லைன்னா, இவர் பண்ற அட்ராசிட்டிக்கு அவர் மனைவியே அவரை விஷம் வெச்சு காலி பண்ணியிருப்பாங்களே!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 2

‘‘எதுவாக இருந்தாலும் ரமணனின் வானிலை அறிக்கை வந்தபிறகு முடிவுசெய்துகொள்ளலாம் அமைச்சரே!”

‘‘அடம்பிடிக்காதீர்கள் மன்னா, நமது நாட்டை சூழ்ந்துள்ளது கார்மேகம் அல்ல... போர்மேகம்!”

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ் - 2

‘‘பேஷன்ட்டுக்கு என்ன ஆச்சு?”

‘‘மூணு மாசம் குடிக்கவேண்டிய சரக்கை, மூணே நாள்ல குடிச்சு முடிச்சிட்டார் டாக்டர்!”

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ் - 2

 ‘‘ ‘தலைவர், வாட்ஸ்அப்புக்கு வந்தும் அவரோட இயல்பை மாத்திக்க மாட்டேங்கிறார்’னு எப்படிச் சொல்றே?”

‘‘அவர் அதுலயும் குழு மாறிக்கிட்டே இருக்காரே!”

- கீழை அ.கதிர்வேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு