பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

‘‘ ‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் வாக்கு கேட்க தொகுதிக்கு வருவீர்கள்?’ எனக் கேட்பவர்களுக்காகவே, இந்த முறை நம் தலைவர் வெளிநாட்டு மேக்அப் மேனின் உதவியை நாடியுள்ளார் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.”

- ஈரோடு ரேவதிப்ரியன்

ஜோக்ஸ் - 3

‘‘எல்லோரும் வெள்ள சேதத்தைப் பார்வையிட, வெள்ளத்தில் நடந்துதான் வருகிறார்கள்; ஆனால் நான் நீந்தி வருகிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள் வாக்காளப் பெருமக்களே!”

 - எம்.மிக்கேல் ராஜ்

ஜோக்ஸ் - 3

‘‘கூட்டணி பற்றி பேச, எதுக்குய்யா எங்க கட்சி மீட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்தீங்க?”

‘‘ ‘யாருடைய தொந்தரவும் இல்லாம, நான் தனியா இருக்கும்போது வாங்க’னு நீங்கதானே தலைவரே சொன்னீங்க!”

 - கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ் - 3

‘‘ ‘மழை வெள்ளத்தில் மிதந்தபடி தவிக்கும் மக்களை வந்து பார்த்தீர்களா?’ என்று எதிர்க்கட்சியைப் பார்த்துக் கேட்கிறேன்.”

‘‘தலைவரே... வெள்ளத்துல அவங்க மிதக்கிறது இருக்கட்டும். இப்ப நாம பேசுற மேடை வெள்ளத்துல மிதந்து, சைதாப்பேட்டை வழியா வேளச்சேரிக்குப் போய்க்கிட்டு இருக்கு!”

- சரவண பவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு