Published:Updated:

பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

பிரீமியம் ஸ்டோரி

ஹாட்... ஹாட்டர் போட்டோஷூட் முடித்திருக்கிறார் பரிணீதி சோப்ரா. `நான் நடிக்க வந்தபோது கொஞ்சம் பப்ளியா குழந்தைத்தனத்துடன் இருந்தேன். இப்போ நான் ரொம்ப ஸ்ட்ராங்கான  பெண். அதை எல்லோருக்கும் நிரூபிக்கத்தான் இந்த போட்டோஷூட். படங்களைப் பார்த்துட்டு லைக் பண்ணுங்க' என ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் பரிணீதி. இப்போ ஷேர்ஸ் பறக்குது... ஆர்.டி அள்ளுது!

பிட்ஸ் பிரேக்

`கபாலி' ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியிடம் பேச மிகவும் தயங்கியிருக்கிறார் ராதிகா ஆப்தே. `ஹலோ... நான் ரொம்ப ஜாலியான ஆள். இப்ப பாருங்க நான் எப்படிச் சிரிக்கவைக்கிறேன்' என சில ஜோக்குகளை அள்ளிவிட்டாராம் சூப்பர் ஸ்டார். கூடவே `உங்க படங்கள் பார்த்திருக்கேன். நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. ஹாட்ஸ் ஆஃப' எனப் பாராட்டு மழையில் நனையவும் வைத்தாராம். `எனக்கு ரஜினி சார்கூட நடிக்கிறது, பேசுறது எல்லாமே கனவு மாதிரி இருக்கு. நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி' என எங்கு சென்றாலும் ரஜினிக்கு லைக் தட்டுகிறார் ராதிகா. ராரா!

பிட்ஸ் பிரேக்

`ரன்வீர் சிங், என் மிகமிக நெருங்கிய நண்பர். நான் எமோஷனலான, சென்சிட்டிவான அதிகம் பாதிக்கப்படக்கூடிய பெண். என்னை் சில நிமிடங்களில் காயப்படுத்திவிடலாம். ஆனால், ரன்வீர் சிங் என்னை எப்போதும் காயப்படுத்த மாட்டார். அவர் முன்னர் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட, என் மேல் உரிமை எடுத்துக்கொள்ள மாட்டார். எங்களின் புரிதல் அப்படி’ என்ற தீபிகாவின் பேட்டி இப்போது செம வைரல். ஆனால் ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ராவுடன் நடித்திருக்கும் `பாஜிரோ மஸ்தானி’ பட புரமோஷனுக்காகத்தான் இப்படி பரபரப்பு கிளப்புகிறார் தீபிகா என்கிறது பாலிவுட்!

பிட்ஸ் பிரேக்

பாலிவுட் கனவுக்கன்னிகள் பலருக்கும் அழகு மகள்கள்தான் பிறந்திருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் புதிய என்ட்ரி ராணி முகர்ஜி. இயக்குநர் ஆதித்யா சோப்ரா - ராணி முகர்ஜி தம்பதிக்கு சென்ற வாரம் பெண் குழந்தை பிறந்தது. பெற்றோரின் பெயர்களில் இருந்து குழந்தை பெயரை எடுக்கும் அதே ஐடியாவின்படி `ஆதிரா' என்ற பெயரை டிக் அடித்திருக்கிறார்கள்.

பிட்ஸ் பிரேக்

மார்க் ஸூக்கர்பெர்க் இரண்டு மாத `பெட்டானிட்டி' விடுமுறையில் இருக்கிறார். இப்போது இவரது கவனம் முழுக்க மகள் மேக்ஸ் மீதுதான். `Full of joy with little Max' என தன் குழந்தையைக் கொஞ்சும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் மார்க் வெளியிட, சில நிமிடங்களிலேயே கோடி லைக்ஸ் தாண்டியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு