Published:Updated:

ஈட்டி - சினிமா விமர்சனம்

ஈட்டி - சினிமா விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

த்தம் வந்தால் உறையாமல் கொட்டும் வியாதி உள்ளவன், அருவாள் கும்பலை வேரறுக்கப் பாயும் ஆக்‌ஷன் அத்தியாயமே ‘ஈட்டி’.

தஞ்சாவூரில் வாழும் அதர்வாவுக்கு திராம்பஸ்தீனியா எனும் அரிய நோய். சின்னக் காயம் பட்டாலும் ரத்தம் கொட்டும். ஆழமான காயம் என்றால், ஆளே காலி. அந்த நிலையிலும் அப்பாவின் ஆசியோடு தடை தாண்டும் ஓட்டப் பந்தய வீரனாக நினைக்கிறார். அப்பாவின் கனவை நனவாக்க, சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டிக்குத் தேர்வாகிறார். இடையில் திவ்யா வுடனான காதலால், கள்ள நோட்டுக் கும்பல் ஒன்றைச் சீண்ட, அவர்கள் திவ்யாவின் அண்ணனைப்  போட்டுத்தள்ளிவிட்டு, அதர்வாவைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். அவர்களை மீறி அதர்வா போட்டிக்குச் சென்றாரா... வென்றாரா?

சென்னை டு மதுரையை தஞ்சை டு சென்னையாக்கி, கபடியைத் தடகளமாக்கினால் ‘கில்லி’ புது ‘ஈட்டி’ ஆகிவிடும். ஆனால் ‘கில்லி’யின் சூப்பர் ஃபாஸ்ட் திரைக்கதை? முதல் பாதியை சென்னை நகர ஆக்கிரமிப்புப் கட்டடங்கள்போல வழக்கமான காமெடிகளும் பாடல்களும் நிரப்பு கின்றன. இடைவேளைக்கு 10 நிமிடங்கள் முன்னர்தான் பாய ஆயத்தமாகிறது `ஈட்டி'. பரபரவென நகர ஆரம்பிக்கும் இரண்டாம் பாதியும் தடதடவென வேகமெடுக்க மறுக்கிறது.

ஈட்டி - சினிமா விமர்சனம்

லோட் செய்யப்பட்ட துப்பாக்கியில் சீறக் காத்திருக்கும் தோட்டாபோல தெறித்து நிற்கிறார் அதர்வா. சிக்ஸ்பேக்கும் களையான சிரிப்பும் தடகள வீரனாக மாறி நிற்கும் உழைப்பும்... செம கெத்து பாஸ். திவ்யாவுக்கு இதில் மூன்று பாட்டு வேலை. கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்பது அப்பா ஜெயபிரகாஷ். ஆக்‌ஷன் ஏரியாவைத் தூக்கிச் சுமக்கிறார் வில்லன்
ஆர்.என்.ஆர்.மனோகர். 

‘அவன் நம்மகிட்டதான்டா மணிரத்னம் மாதிரி பேசுறான், அந்தப் பொண்ணுகிட்ட மட்டும் மணிக்கணக்காப் பேசுறான்...’ அடைமழைக்கு இடையே வரும் வெயில்போல ஆங்காங்கே வசனங்கள் ஈர்க்கின்றன. ‘காவல் துறையையே மிரளவைக்கும் கள்ளநோட்டுக் கும்பலை எதிர்பாராதவிதமாக எதிர்க்கும் நாயகன்’ மாஸ் பல்ஸ் பார்த்து ஒன்லைன் பிடித்த வகையிலும், ஓட்டப் பந்தயம், காதல், கள்ள நோட்டு என மூன்று புள்ளிகளை இணைத்ததிலும் இயக்குநர் ரவிஅரசைப் பாராட்டலாம். 

தஞ்சை மாநகரத்துக்கு ஒரு வேகம், சென்னை மாநகரத்துக்கு அசுர வேகம் என எகிறுகிறது

ஈட்டி - சினிமா விமர்சனம்

சரவணன் அபிமன்யுவின் கேமரா. `ஈட்டி'யின் ஷார்ப்பான ஏரியாவே சண்டைக் காட்சிகள்தான். மிரட்டுகிறார் ராஜசேகர்.

`ஈட்டி' கூராக இருந்தாலும், அதை லாகவமாக வேகமாக வீசுவதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அந்த வேகம் மிஸ் ஆவதுதான் இந்த `ஈட்டி'யைப் பதம்பார்க்கிறது.

- விகடன் விமர்சனக் குழு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு