ஓவியங்கள்: சுரேஷ்

‘‘அந்த ஜோக் எழுத்தாளர், ரமணனுக்கு போன் பண்ணி என்ன கேட்டார்?”
‘‘ ‘மழை ஜோக்ஸை தொடர்ந்து எழுதலாமா... வேண்டாமா?’னுதான்!’’
- வி.சகிதாமுருகன்

‘‘அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து எதுக்கு விலகினீங்க?”
‘‘அட்மின் போட்ட காலை வணக்கம் ஸ்டேட்டஸுக்கு நான் பதில் வணக்கம் சொல்லைனு, வீட்டுக்கு வந்து என்னை அறைஞ்சுட்டார்!”
- கீழை அ.கதிர்வேல்

‘‘கமல்ஹாசன், அமீர்கான் மாதிரி ஃபேமஸ் ஆகலாம்னு இருக்கேன்.”
‘‘ஓஹோ... கெட்டப் சேஞ்ச் பண்ணப்போறீங்களா?”
‘‘நோ... நோ... ‘நாட்டைவிட்டே போறேன்’னு சொல்லப்போறேன்.”
- சி.பி.செந்தில்குமார்

‘‘ ‘இந்த வருஷம் நம்ம நெடுஞ்சாலைத் துறைக்கு ஒரு விருது கிடைக்கப்போறது உறுதி’னு எப்படிச் சொல்றே?”
‘‘பின்னே, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பா செயல்படுத்தி, அதிகமான மழைநீரைத் தேக்கி வெச்சிருக்காங்களே!”
- சி.ஸ்ரீநந்தன் நந்திதா