ஓவியங்கள்: கண்ணா

‘‘வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை அனைத்துக் கட்சிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும் என, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!”
- வைகை ஆறுமுகம்

‘‘தலைவர் என்ன இப்படிப் பேசறாரு!’’
‘‘ஏன்... என்ன ஆச்சு?”
‘‘ ‘குற்றத்தை நிரூபித்தால், நான் ஊழலைவிட்டே விலகத் தயார்’னு!”
- சி.சாமிநாதன்

‘‘மழை வெள்ளத்தைப் பார்வையிட்ட தலைவர் என்ன சொன்னார்?”
‘‘ ‘மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைஞ்சுபோச்சு’னு சொன்னார்.”
- அம்பைதேவா

‘‘சென்னை வெள்ளத்தைப் பார்த்ததில் இருந்து, தலைவர் தன்னோட பயணத்திட்டத்துக்குப் பெயர் மாற்றிவிட்டாராம்!’’
‘‘என்னன்னு?’’
‘‘ ‘வடியட்டும் விடியட்டும்’னு!”
- தொண்டி முத்தூஸ்