Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பா.ஜான்ஸன்

து என்ன மாயம்’ மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு, `ரஜினிமுருகன்', `பாம்புசட்டை’, தனுஷுடன் ஒரு படம், மறுபடி சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது. கோலிவுட்டில் வரவேற்பு எகிறியிருக்கும் அதே சமயத்தில் தெலுங்கிலும் கீர்த்தியின் ‘நேனு ஷைலஜா’ படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. படத்தின் டீஸர் வெளியானதில் இருந்து ஆந்திராவும் `கீர்த்தி மந்திரம்' சொல்ல ஆரம்பித்திருக்கிறது!

பிட்ஸ் பிரேக்

மலையாளத்தில் ‘100 டேஸ் ஆஃப் லவ்’ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே இந்த வருடம் ரிலீஸ் ஆனதில் ‘குஞ்சிக்கா’ துல்கர் சல்மானின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட். ஆனால், துல்கரின் ‘சார்லி’ பட டிரெய்லர் டிசம்பரில் வெளியாக, படு குஷியாகிவிட்டார்கள். முரட்டுத்தனமாக தாடி, மீசை என வித்தியாசமான கெட்டப்பில் துல்கரின் மேனரிசங்களும் ஹிட். துல்கருக்கு ஜோடி பார்வதி மேனன். அடுத்து சமீர்தாஹிர் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் துல்கர். அதில் அவருக்கு ஜோடி ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி!

பிட்ஸ் பிரேக்

‘பாகுபலி’யைத் தொடர்ந்து ‘பெங்கால் டைகர்’ படமும் ஹிட் ஆனதில் உயர்ந்திருக்கிறது தமன்னா மார்க்கெட். அடுத்ததாக தமிழில் சீனுராமசாமி இயக்கும் ‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி. சிரஞ்சீவி நடிக்கும் ‘கத்தி’ பட தெலுங்கு ரீமேக்கிலும் தமன்னாதான் செல்ஃபிபுள்ள!

தன் ரசிகை ஒருவரைச் சந்தித்ததில் அல்லு அர்ஜுன் செம ஹேப்பி. மஸ்தான் பீ என்கிற 67 வயது பாட்டிதான் அந்த ரசிகை. வீடு முழுக்க அல்லு அர்ஜுனின் படங்களை ஒட்டிவைத்திருக்கும் அளவுக்கு அவருடைய டை ஹார்ட் ஃபேன். சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவர, தன் கடைசி ஆசையாக அல்லு அர்ஜுனைச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் அல்லுவுக்குத் தெரிந்ததும் உடனடியாக வீட்டுக்குப் போய் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்!

பிட்ஸ் பிரேக்

சோனி மியூஸிக் நிறுவனம், ஆப்பிள் ஐ-ட்யூன்ஸில் அதிகம் விற்பனையான, அதிகம் கேட்கப்பட்ட பாடல் ஆல்பம் மற்றும் இசையமைப்பாளர்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்திய அளவில் சிறந்த ஆல்பங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக் கிறது `ஓ காதல் கண்மணி'. சிறந்த இசையமைப்பாளர் எப்போதும்போல ஏ.ஆர்.ரஹ்மான்தான்!

பிட்ஸ் பிரேக்

‘பெங்களூர் டேஸ்’ படத்துக்குப் பிறகு ஐந்து படங்கள் நடித்துவிட்டார் ஃபஹத் பாசில். அதில் ‘ஐயூபின்டே புஸ்தகம்’ மட்டுமே சுமார் ஹிட். அதனால் கொஞ்சம் அப்செட்டில் இருந்த ஃபஹத், அபி வர்கீஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘மான்சூன் மேங்கோஸ்’ படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறார். படத்தில் இயக்குநராக முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடிக் கிறார். காமெடி படமாக உருவாகி வரும் இந்தப் படம் ஜனவரியில் வெளியாகிறது. படத்துக்காக மொட்டை அடித்திருக்கிறாராம் ஃபஹத்!

‘ஐ’, ‘10 எண்றதுக்குள்ள’ என சீயான் அதிகம் எதிர்பார்த்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் சொதப்ப, இளம் இயக்குநர்களுடன் கைகோத்திருக்கிறார் விக்ரம்.  ‘அரிமாநம்பி’ படம் இயக்கிய ஆனந்த் ஷங்கர், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்கள் இயக்கிய திரு ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கிறார் விக்ரம்!