Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: சுரேஷ்

Published:Updated:
ஜோக்ஸ் - 2

‘‘எதிரி, முதுகில் குத்திவிட்டான் அமைச்சரே!’’

‘‘அவ்ளோ ஸ்லோவா ஓடி வருவீங்களா ராஜா?’’

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

 ‘‘அது சென்னையிலேயே பெரிய கம்பெனி ஆச்சே... உனக்கு எப்படி அங்கே உடனே வேலை கிடைச்சது?”

‘‘ ‘நீச்சல் தெரியுமா?’னு கேட்டாங்க, ‘தெரியும்’னு சொன்னேன்!’’

- நெய்வேலி தேன்ராஜா

ஜோக்ஸ் - 2

 ‘`எதிர்க்கட்சியினருக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்... உங்களைப் போன்ற தொடைநடுங்கிகளால், எங்கள் தலைவரின் கொடும்பாவியை மட்டும்தான் கொளுத்த முடியும்!”

- லக்‌ஷ்மணன்

ஜோக்ஸ் - 2

 ‘‘ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?”

‘‘வெள்ளம் சூழ்ந்த வீட்டின் மொட்டைமாடியில் நின்னுக்கிட்டு, ‘ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ...’னு நீங்க கத்தினதை டி.வி-யில் பார்த்தேன் எசமான்!”

- பர்வீன் யூனுஸ்