ஓவியங்கள்: கண்ணா

‘‘என்னய்யா... நான் கட்சி தாவினத்துக்கு ஒரு லைக்கூட விழலை?”
‘‘ `அரசியலைவிட்டு விலகுறேன்'னு சொல்லிப்பாருங்க தலைவரே, ஆயிரம் லைக்ஸ் விழும்!’’
- பெ.பாண்டியன்

‘` ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை'னு தலைவர் சொல்றாரே, யாருய்யா அந்த நாலு பேரு?”
‘‘அவர், அவர் சம்சாரம், ரெண்டு பசங்க!’’
- எஸ்.வெங்கடசுப்ரமணியன்

‘‘நயன்தாராவை எனக்கு ஜோடியா...’’
‘‘ஏன் தலைவரே இந்தக் கொலைவெறி?’’
‘‘ஒருகாலத்துல நானும் ரெளடிதானேய்யா!’’
- விகடபாரதி

‘‘அஜித் ‘தெறிக்கவிடலாமா?'னு கேட்கிற மாதிரி அதே பாணியில் நம்ம தலைவர் ஒரு பன்ச் வார்த்தையைப் பிடிச்சுட்டார்!’’
‘‘என்ன அது?’’
‘‘அறிக்கைவிடலாமா..?’’
- தஞ்சை ப்ரணா